முகப்பு > தொழில்நுட்பம்

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது!

November 30, 2016

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது!


காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திற்குள் மர்ம நபர் ஊடுருவி ஆபாச வார்த்தைகளை பதிவிட்டு வருகின்றனர். 

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது அலுவலக பெயரில் அதிகாரப் பூர்வ ட்விட்டர் சமூக வலைதளத்தில் இயங்கி வருகிறார். 

அவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ட்விட்டரில் பிந்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு கிட்டதட்ட 8 மணிக்கு பிறகு சில மர்ம நபர்கள் அவரது டிவிட்டர் பக்கத்திற்குள் அத்துமீறி ஊடுருவி ஆபாச வார்த்தைகளையும், கெட்ட வார்த்தைகளையும் பதிவிட்டுவருகின்றனர். 

“அதில் ராகுல் காந்தியின் குடும்பமானது பல ஆண்டுகளாக இந்தியாவை சீரழித்து வருவதாகவும், நான் ஒரு அறிவாளி தான் ஆனால் எனக்கு 5 வயது குழந்தைக்கு இருக்கும் அறிவுதான் உள்ளது, நான் தான் கடவுள்” போன்ற ஆபாச வார்த்தைகளும் இன்னும் இங்கே பதிவிட முடியாத பல்வேறு கெட்ட வார்த்தைகளையும் மர்ம நபர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இது எல்லாம் ராகுல் காந்தியே அதிகாரப்பூர்வமாக பதிவிடுவது போல் வருவதால் அவரை ட்விட்டரில் பிந்தொடர்பவர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்