முகப்பு > உலகம்

​இலங்கையில் சீன முதலீட்டு துறைமுக மேம்பாட்டு பணி துவக்க விழாவில் கடும் மோதல்

January 07, 2017

​இலங்கையில் சீன முதலீட்டு துறைமுக மேம்பாட்டு பணி துவக்க விழாவில் கடும் மோதல்


இலங்கையில் அம்பந்தோட்டா துறைமுக மேம்பாட்டுப்பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பந்தோட்டாவில் சீன முதலீட்டுடன் துறைமுக மேம்பாட்டுப் பணிகள் இன்று தொடங்கிவைக்கப்பட்டன. இதற்காக ஆயிரக்கணக்கான கிராம மக்களை வெளியேற்ற, அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று நடைபெற்ற தொழில் மண்டல அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் இலங்கைப் பிரதமர் உரையாற்றுவதற்கு முன், அம்பந்தோட்டா துறைமுக நகருக்கு அருகே மோதல் வெடித்தது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்த பிக்குகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டக்காரர்களை, அரசு ஆதரவாளர்கள் தாக்கினர். இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கினார்கள். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தண்ணீரைப் பீய்ச்சியடித்து, ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். இந்த மோதலில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்