முகப்பு > தொழில்நுட்பம்

‘போகிமொன் கோ’ கேம் இந்தியாவில் அறிமுகம்!

December 14, 2016

‘போகிமொன் கோ’ கேம் இந்தியாவில் அறிமுகம்!


நியாண்டிக் நிறுவனமானது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து தனது ‘போகிமொன் கோ’ கேமை இந்தியாவில் அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஜுலை மாதம் 7-ம் தேதி இந்த விளையாட்டானது உலகளவில் வெளியானது. வெளியான சில நாட்களிலேயே வீடியோ கேம் விளையாடும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது இந்த போகிமொன் கோ கேம். 

எனினும் இந்த விளையாட்டானது இந்தியாவில் அதிகார பூர்வமாக வெயிடப்படவில்லை. இருப்பினும் இந்த விளையாட்டை சில இணையதளங்கள் இந்தியாவில் 
சட்டவிரோதமாக வெளியிட்டன. இந்தியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த கேம் பின்பு நியாண்டிக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது. எனவே இந்த கேம் பிரியர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

தற்போது ஐந்து மாதங்களுக்கு பிறகு நியாண்டிக் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த கேமை இந்தியாவில் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.

நியாண்டிக் நிறுவனத்தின் நிறுவனர் ஜான் ஹன்க் “ஜியோ உடன் இணைந்து போகிமொன் கோ கேமை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜியோவின் அதிவேக 4G இணைய சேவை இந்த கேமை சிறப்பாக விளையாட உதவும். மேலும் இந்தியர்கள் இந்த கேம் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தை காண உற்சாகமாக உள்ளேன்.” என்றும் கூறியுள்ளார்.

போகிமொன் என்ற அனிமேஷன் நிகழ்ச்சியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த கேமை  இணைய வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் மென்பொருளில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் மூலம் விளையாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்