Skip to main content

​பெண்கள் பாதுகாப்பாக உணரப்போவது எப்போது?

November 25, 2018
Image

சண்முகப் பிரியா

கட்டுரையாளர்

Image

‘பெண்கள் நம் நாட்டின் கண்கள்’ என்ற ஆராவார புகழ்மொழியை நாம் பலமுறை கேட்டிருந்தாலும் நம் நாடு அதற்கேற்ப இருக்கிறதா என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் எழும் சாதாரணமான ஒன்று. சமூகப்பார்வையுடன் சிந்திக்கும் பலர், நம் நாட்டில் உள்ள பெண்கள் மட்டுமே இதுபோன்ற கொடுமையை அனுபவிக்கிறார்களா அல்லது அனைத்து நாட்டு பெண்களும் இதுபோன்ற கொடுமைகளை அனுபவிக்கிறார்களா என்று சிந்திப்பர். அவர்களுடைய இந்த சிந்தனைக்கு சரியான விடை கூறவேண்டுமானால் “ஆம்” என்றே கூறவேண்டும்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலுமே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. தொழில்நுட்பங்களிலும், உலகமயமாதலிலும் புரட்சி செய்துகொண்டிருக்கும் நாடுகள் கூட பெண்கள் விஷயத்தில் இன்னும் முன்னேற்றம் அடையாமல் தான் இருக்கிறது. கேட்பதற்கு சற்று முரணாக இருந்தாலும் ஆய்வு முடிவுகளும், புள்ளி விவரங்களும் கூறுவது இதைத்தான்.

ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், ஆணவப்படுகொலை என  பெண்களுக்கு எதிரான கொடுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதனை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகத்தான் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஒழிக்கும் சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 அன்று இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1960ம் ஆண்டு டோமினிக்கன் குடியரசில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் துன்பங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களான மரியா, மினர்வா மற்றும் மிராபால் , அந்நாட்டு அரசான Rafael Trujilloவால் கொல்லப்பட்ட தினம்தான் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை ஒழிக்கும் சர்வதேச தினமாக கடந்த 2000ம் ஆண்டுமுதல் கடைபிடிக்கப்படுகிறது.

பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பணிபுரியும் இந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறுவது மிகவும் சகஜமாகிவிட்டது. அலுவலகங்களிலும், பணி இடங்களிலும் மட்டுமே இதுபோன்ற நிலை உள்ளதா என்றால் இல்லை. பெண்கள், தங்களது சொந்த வீட்டிலும் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. கடந்த 2016ம் ஆண்டு நிகழ்ந்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பெண்கள் தங்களது வீட்டில் தான் அதிக கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. கட்டாயத்திருமணம், கட்டாய உடலுறவு, வரதட்சணை கொடுமை, ஆணவப்படுகொலை என வீட்டில் பெண்கள் படும் அவதி ஏராளம். தந்தை, சகோதரன், உறவினர் என பெரும்பாலான ஆண்களால் அவதிக்கு உள்ளாகும் பெண்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக உணர்வதில்லை என்றால் பணியிடங்களில் மட்டும் எப்படி பாதுகாப்பாக உணர முடியும்? 

கொலைக்குற்றங்களில் 13ல் ஒன்று கணவன் அல்லது காதலனால் நிகழ்த்தப்படும் பெண் கொலையாகத்தான் இருக்கிறது என ஆய்வு முடிவுகள் சொல்கிறது. ஒரு பெண் தன் சொந்த திறமையை வைத்து முன்னேற, கற்பு என்று அவளுக்கு எதிராய் புனையப்பட்ட ஒன்றை தன் எஜமானனுக்கு விலைக்கு விற்றுத்தான் மேலேசெல்லும் கொடூரம் பெண்களுக்கு மட்டுமே நிகழும். உலகம் முழுவதும் 35 சதவீத பெண்கள் தனக்கு பிடிக்காத ஒருவரின் பாலியல் இச்சைக்கு பலிகெடாவாகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

பணியிடங்களில் மட்டுமா? படிக்கும் கல்வி நிலையங்களில் கூட பெண்களுக்கு இதே நிலைதான். 15 லிருந்து 19 வயதுக்குட்பட்ட  1.5 கோடி மாணவிகள் கட்டாய உடலுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படி கல்விநிலையங்கள், பணி இடங்கள், வீடு என அனைத்து இடங்களிலும் பெண்கள் பாதுகாப்பாகவோ, நிம்மதியாகவோ வலம் வர முடிவதில்லை. “பெண்களுக்கு எதிரான வன்முறை உலகெங்கும் நடக்கிறது. அவர்களுடைய குலம், இனம், சமுதாயம், பிறப்பு, அந்தஸ்து எதுவாக இருந்தாலும் சரி, இந்த வன்முறையிலிருந்து அவர்கள் தப்ப முடிவதில்லை” எனக்கூறிய ஐ.நா முன்னாள் பொது செயலாளர் கோபி அன்னானின் கூற்றுக்கேற்ப அனைத்து சமூகப்பெண்களும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். குறிப்பாக சாதி மற்றும் பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது இக்கொடுமைகள் எளிதில் அரங்கேறுகின்றன.

உடல்ரீதியாக பெண்கள் பலவீனமானவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றம் ஏராளம். இது அரச காலத்தில் இருந்து நிகழ்ந்துவரும் ஒரு பழக்கம். போரில் எந்த அரசனாவது வெற்றி பெற்றால், தோல்வி அடைந்த அரசனின் நாட்டில் உள்ள பெண்களின் கற்பை சூறையாடுவதை பெரிய சாதனைபோன்றே நிகழ்த்திவந்தனர். இதற்கு சான்றாக பல வரலாற்று குறிப்புகளும் உள்ளன. இவ்வாறு அரச காலம் தொடங்கி தற்பொழுது வரை ஆண்களின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது பெண்களை மானபங்கப்படுத்துவது. இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக சமீபத்தில் நடந்த சிரியப்போரில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை இருக்கிறது. மருந்து வாங்குவதற்கு கூட கற்பை அப்பெண்கள் விலையாய் கொடுத்தார்கள்.

குழந்தைகளும், வயதானவர்களும் கூட இதுபோன்ற கொடுமைகளுக்கு விதிவிலக்கல்ல. இந்த நவீன காலத்தில் தந்தை, தாய் என வீட்டில் இருவரும் வேலைக்கு சென்றுவிடும் நிலை ஏற்பட்டுவிட்டது. இது பணம்பறிக்கும் பல தனியார் குழந்தை காப்பகங்கத்திற்கு மட்டுமல்லாது சபல புத்திகொண்ட ஆண்கள் சிலருக்கும் தீனிபோடுவதுபோல் அமைந்துவிட்டது. தனியாக இருக்கும் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டுவது நாம் அறிந்த ஒன்றே. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் 95 %  அவர்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர்களால் நிகழ்த்தப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே போகும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் ஆண் வர்க்கத்தினர் மீதே ஒருவித வெறுப்பும், எரிச்சலும் உண்டாகிறது. கருவாக இருக்கும்பொழுது பெண் சிசு கலைப்பு, சிறுவயதில் பாலியல் வன்கொடுமை, திருமண வயதில் வரதட்சணை கொடுமை, வயதான பின்னர் மனவுளைச்சல் என கருவில் இருப்பது முதல் இறப்பது வரை பெண்கள் பல கொடுமைகளை அனுபவித்துக்கொண்டே இருக்கின்றனர். பெண்களாய் பிறந்த ஒரே காரணத்திற்காக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழிக்கப்படுவது எப்பொழுது என்பதே ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு கேள்விக்கனலாய் இருக்கிறது.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்!” - டிடிவி தினகரன்

3 minutes ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...!

1 hour ago

தேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...!

1 hour ago

ஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி!

4 hours ago

டெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்!

4 hours ago

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ( வயது 75 ) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்: சைனியின் மறைவு பாஜக குடும்பத்திற்கு பேரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்!

11 hours ago

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

17 hours ago

பிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா பரிந்துரையின் அடிப்படையில் உ.பி காங்கிரசின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டது!

19 hours ago

தமிழக சட்டபேரவை சபாநாயகர் எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜூலை 1 ஆம் தேதி விவாதம்...!

22 hours ago

சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஜூலை 1ம் தேதி விவாதம்...!

22 hours ago

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்...!

22 hours ago

பா.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு...!

22 hours ago

"குடிநீர் பஞ்சத்தை போக்காமல் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது!"- மு.க.ஸ்டாலின்

1 day ago

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...!

1 day ago

இந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு!

1 day ago

உலகக்கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

1 day ago

ஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

1 day ago

குடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே யாகம் நடத்தினர் - கனிமொழி

1 day ago

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்.

1 day ago

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.

1 day ago

“தண்ணீர் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்க தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றனர்!” - மன்சூர் அலிகான்

1 day ago

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்!

1 day ago

ஜம்மு காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

2 days ago

சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!

2 days ago

நடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என ரஜினிகாந்த் வேதனை!

2 days ago

அல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிப்பு பணிகளை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

2 days ago

திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்!

2 days ago

மத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் தள்ளிப்போக வாய்ப்பு!

2 days ago

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி!

2 days ago

இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு!

3 days ago

அரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்க மறுப்பு!

3 days ago

பாடத் திட்டத்தில் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றச்சாட்டு!

3 days ago

தமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டோம்: டிடிவி தினகரன்

3 days ago

தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

3 days ago

செல்வாக்கு மிகுந்த நபர் மோடி: பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவு

3 days ago

பிகில் திரைப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் விஜய்!

3 days ago

நடிகர் சங்கத்திற்கு திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

3 days ago

மழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுகவினருக்கு OPS - EPS உத்தரவு!

3 days ago

இலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரிடம் என்ஐஏ தீவிர விசாரணை!

3 days ago

உலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி...!

3 days ago

மழை வேண்டி நாளை கோயில்களில் யாகம் நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு!

3 days ago

பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது

3 days ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்

3 days ago

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்...!

3 days ago

வங்கிக் கடன் பாக்கி: விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலம் விட நடவடிக்கை!

3 days ago

4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் பதிலடி!

4 days ago

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக எம்பிக்கள் கோஷம்!

4 days ago

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல்காந்தி!

4 days ago

டெல்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்!

4 days ago

ராஞ்சியில் யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி!

4 days ago

வறட்சியால் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தர முன்வந்த கேரளா அரசு!

4 days ago

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி!

4 days ago

சென்னை அடுத்த பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை!

4 days ago

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது..!

4 days ago

பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக மக்களவையை அலங்கரிக்க உள்ளனர்: குடியரசுத் தலைவர்

4 days ago

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...!

4 days ago

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

5 days ago

சபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்!

5 days ago

வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தாழ்வு நிலை!

5 days ago

உலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்!

5 days ago

சென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது!

5 days ago

ஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு!

5 days ago

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது!

5 days ago

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்!

5 days ago

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்

5 days ago

காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....

5 days ago

5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு!

5 days ago

"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான் காரணம்!” - பூச்சி முருகன்

5 days ago

நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை..!

5 days ago

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு!

5 days ago

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு!

5 days ago

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

6 days ago

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

6 days ago

ஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

6 days ago

தமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்!

6 days ago

நடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

6 days ago

தமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....!

6 days ago

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு!

1 week ago

செயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

சென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது!

1 week ago

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி!

1 week ago

நடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்!

1 week ago

எதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்

1 week ago

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

1 week ago

17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு!

1 week ago

ராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி

1 week ago

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை!

1 week ago

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமல்!

1 week ago

உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ

1 week ago

குடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.

1 week ago

2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு

1 week ago

உலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கை அணி வெற்றி பெற 335 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி...!

1 week ago

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

1 week ago

பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்திப்பு!

1 week ago

சென்னையில் ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை; மோதலில் காயம் அடைந்த 2 காவல் ஆய்வாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..

1 week ago

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்; தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு வலியுறுத்த முதல்வர் திட்டம்.

1 week ago

உலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி...!

1 week ago

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு...!

1 week ago

குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பல பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்படுகிறது!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை