முகப்பு > விளையாட்டு

சென்னை ஓபன் டென்னிஸ் நுங்கம்பாக்கத்தில் இன்று மாலை தொடங்குகிறது

January 02, 2017

சென்னை ஓபன் டென்னிஸ் நுங்கம்பாக்கத்தில் இன்று மாலை தொடங்குகிறது


ஏடிபி போட்டித் தொடர்களில் ஒன்றான சென்னை ஓபன் டென்னிஸ் நுங்கம்பாக்கத்தில் இன்று மாலை தொடங்குகிறது.

தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, 20-வது முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 

வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ள இந்த போட்டித் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு 54 லட்சம் ரூபாயும், ஆடவர் இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு 16 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

இந்த தொடரில் உலகின் 6-ம் நிலை வீரரான குரேஷியாவின் மரின் சிலிச், பிரிட்டனின் அல்ஜாஸ் பெடென், இந்திய வீரர்கள் லியாண்டர் பயஸ், யூகி பாம்ப்ரி, போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன், ராம்குமார் உள்ளிட்ட பலர் போட்டியிட உள்ளனர். 

கடந்த ஆண்டு சென்னை ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சுவிசர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்காதது சென்னை ஓபன் டென்னிஸ் ரசிகர்களை சற்றே ஏமாற்றமடையச் செய்துள்ளது.

Categories : விளையாட்டு : விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்