முகப்பு > தொழில்நுட்பம்

இலவச வசதியை அறிமுகம் செய்யும் ஏர்செல் நிறுவனம்!

December 14, 2016

இலவச வசதியை அறிமுகம் செய்யும் ஏர்செல் நிறுவனம்!


ஏர்டெல், ஐடியா, வோடாஃபோனை நிறுவனங்களை தொடர்ந்து இலவச அழைப்புகளுக்கான வசதியை அறிவித்தது ஏர்செல் நிறுவனம். 

ரூபாய் 14 மற்றும் ரூபாய் 249-க்கு இந்த பிளான்களை ஏர்செல் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் டிசம்பர் மாதம் வரை இலவச இணையதள வசதி, இலவசமாக அழைக்கும் வசதி, இலவசமாக குறுந்தகவல் அனுப்பும் வசதி ஆகியவற்றுடன் அதிரடியாக களத்தில் இறங்கியது. இந்த இலவச அறிவிப்புகளால் மிக குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றது.

இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்தன. மேலும் தற்போது ஜியோ நிறுவனம் இந்த இலவச சேவையை 2017 மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது. இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச சேவைகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. ஏர்டெல், ஐடியா, வோடாஃபோனை ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது ஏர்செல் நிறுவனமும் இலவச சேவையை அறிவித்துள்ளது.

ஏர்செல் நிறுவனம் ரூபாய் 14 மற்றும் ரூபாய் 249-க்கு இந்த சேவையை அறிவித்துள்ளது. 

14 ரூபாய் சேவையின்படி ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு மட்டும் இந்தியா முழுவதும் ஏர்செல் மற்றும் பிற நிறுவன வாடிக்கையாளர்களுடனும் இலவசமாக தொடர்பு கொள்ள முடியும். 

ரூபாய் 249 சேவையின்படி ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் இந்தியா முழுவதும் ஏர்செல் மற்றும் பிற நிறுவன வாடிக்கையாளர்களுடனும் இலவசமாக தொடர்பு கொள்ள முடியும். மேலும் சேவையை பயன்படுத்துபவர்கள் அளவற்ற 2G data-வை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் ஏர்செல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்