முகப்பு > இந்தியா

வெளிவருகிறது நோக்கியாவின் ஆண்ட்ராய்டு மொபைல்!

December 10, 2016

வெளிவருகிறது நோக்கியாவின் ஆண்ட்ராய்டு மொபைல்!


நோக்கியா நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைல்கள் 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பெரிய மொபைல் தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்தது நோக்கியா நிறுவனம். எனினும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களின் வரவுக்கு பின் சரிவை சந்திக்கத் தொடங்கியது. பிறகு நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்டுக்கு நிகராக விண்டோஸ் மென்பொருளில் இயங்கும் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது. இருப்பினும் ஆண்ட்ராய்டு மொபைல்கள் அளவுக்கு அவை வெற்றியடையவில்லை.

எனவே ஏப்ரல் 2014-ம் வருடம் நோக்கியா நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் விற்கப்பட்டது. பின்பு மைக்ரோசாப்ட் பெயரிலேயே மொபைல்கள் சந்தையில் விற்கப்பட்டன. தற்போது நோக்கியா நிறுவனம் மீண்டும் மொபைல் தயாரிப்பில் இறங்கியுள்ளது. மேலும் இம்முறை நோக்கியா ஆண்ட்ராய்டு மென்பொருளில் இயங்கும் மொபைல்களை தயாரிக்கிறது. தற்போது மார்கெட்டில் உள்ள மொபைல்களைவிட நிறைய சிறப்பம்சங்களுடன்
மொபைல்களை தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

நோக்கியாவின் விண்டோஸ் மொபைல்கள் கேமராவுக்கும், பிரத்யேக தொடு திரைக்கும் பிரபலமானவை. எனவே இந்த ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் அவை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மொபைல் விரைவாக சூடாவது தற்போது பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனை நோக்கியாவின் ஆண்ட்ராய்டு போன்களில் இருக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்