முகப்பு > இந்தியா

ஜியோவுடன் போர் தொடுக்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள்

December 09, 2016

ஜியோவுடன் போர் தொடுக்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள்


ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்துக்கு எதிராக மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் கட்டணப் போர் நடத்தி வருகின்றன. ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 4G வசதியுடன் இலவச இணைய வசதி மற்றும் இலவசமாக தொடர்பு கொள்ளும் வசதி ஆகியவற்றுடன் அதிரடியாக களத்தில் இறங்கியது. மேலும் இந்த இலவச வசதிகளை டிசம்பர் மாதம் வரை பயன்படுத்தலாம் என்று அறிவித்தது.

இதனால் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்தன. மேலும் தனது வாடிக்கையாளர்களையும் இழந்தன. தற்போது ஜியோ நிறுவனம் இந்த இலவச வசதியை வரும் மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது. எனவே மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் புதிய இலவச ப்ளான்களை அறிவித்து ஜியோவிற்கு எதிராக கட்டண போர் நடத்தத் தொடங்கியுள்ளனர். ஏர்டெல் நேற்று இலவசமாக தொடர்பு கொள்ளும் வசதியுடன் கூடிய இரண்டு ப்ளான்களை அறிவித்தது. மேலும் தற்போது
ஐடியா நிறுவனமும் இரண்டு ப்ளான்களை அறிவித்துள்ளது.

ரூபாய் 348-க்கும் ரூபாய் 148-க்கும் இந்த ப்ளான்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 348 ப்ளான் உபயோகிப்பவர்கள் இந்தியா முழுவதும் இலவசமாக பேச இயலும். மற்றும் 1GB 4G data-உம் பயன்படுத்திக்கொள்ளலாம். 3G/4G வசதி இல்லாத பயன்பாட்டாளர்கள் 50MB data பயன்படுத்தலாம்.

ரூபாய் 148 ப்ளான் உபயோகிப்பவர்கள் இந்தியா முழுவதும் ஐடியா உபயோகிப்பவர்களுடன் மட்டும் இலவசமாக பேச இயலும் மற்றும் 300MB 4G data இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இதிலும் 3G/4G வசதி இல்லாத பயன்பாட்டாளர்கள் 50MB data பயன்படுத்தலாம். இரண்டு ப்ளான்களும் 28 நாட்கள் கால அளவு வரை உபயோகப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்ஹா, ”தொலைதொடர்பு துறையின் வரலாற்றை பார்த்தால், கடந்த 18-20 வருடங்களில் எப்போதெல்லாம் கட்டணப் போர் நடைபெற்றதோ அப்போதெல்லாம் வாடிக்கையாளர்களே பயன்பெற்றுள்ளனர். எனவே வாடிக்கையாளர்களே இங்கு அரசர்கள். அவர்களுக்காக வேலை செய்யும் எந்தவொரு அரசாங்கமும் இதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும் என நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்