முகப்பு > விளையாட்டு

பிசிசிஐ புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பதவியை ஏற்க மறுத்த பாலி எஸ். நாரிமன்

January 03, 2017

பிசிசிஐ புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பதவியை ஏற்க மறுத்த பாலி எஸ். நாரிமன்


பிசிசிஐ நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுக்கும் பதவியை ஏற்க வழக்கறிஞர் நாரிமன் மறுத்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக மூத்த வழக்கறிஞர் அனில் திவானை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறிய பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் மற்றும் செயலாளர் அஜய் ஷிர்கே இருவரையும் உச்ச நீதிமன்றம் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியது. 

அதனை தொடர்ந்து பிசிசிஐ-ஐ நிர்வகிக்க புதிய குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழுவில் இடம் பெறக் கூடிய உறுப்பினர்களை உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம், ஃபாலி எஸ் நரிமனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இவர்கள் இருவரும் தங்களது பரிந்துரைகளை 2 வாரத்திற்குள் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில் 2009ம் ஆண்டு பிசிசிஐ சார்பாக தான் ஆஜர் ஆனதால் அந்த பொறுப்பை ஏற்க விரும்பவில்லை என ஃபாலி எஸ் நாரிமன் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஃபாலி நரிமனுக்கு பதிலாக மூத்த வழக்கறிஞர் அனில் திவானை நியமித்து தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்

Categories : விளையாட்டு : விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்