முகப்பு > விளையாட்டு

​கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி தீடீர் விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி

January 04, 2017

​கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி தீடீர் விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி


இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகுவதாக திடீடென அறிவித்தார். 

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இம்மாதம் விளையாடவுள்ள நிலையில் இம்முடிவை தோனி எடுத்துள்ளார். அதேசமயம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக அணியில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். 

2014-ல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி. 2007 முதல் இந்திய அணியின் கேப்டனாக உள்ள தோனியின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாடியுள்ள கேப்டன் தோனி, இதுவரை 72 டி20 போட்டிகளில் விளையாடி அவற்றில் 41 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.  இதேபோன்று, 199 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 110 வெற்றிகளை பெற்றுள்ளார்.

இது பற்றி பி.சி.சி.ஐ.யின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இந்திய அணியின் அனைத்து நிலைகளிலும் கேப்டனாக சிறந்த முறையில் செயலாற்றியதற்காக எம்.எஸ். தோனிக்கு ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர் மற்றும் பி.சி.சி.ஐ.யின் சார்பில் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அவரது தலைமையில், இந்திய அணி புதிய உச்சங்களை அடைந்தது.  அவரது சாதனைகள் இந்திய கிரிக்கெட் வரலாற்று சாதனை பட்டியலில் எப்பொழுதும் தொடர்ந்து இருக்கும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அணியில் விளையாடுவது என்ற முடிவில் அவர் உள்ளார்.  அவரது இந்த முடிவினை அடுத்து டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோலிக்கு வாய்ப்பு உள்ளது.

Categories : விளையாட்டு : விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்