இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

Breaking News

செயல் தலைவர் பதவியை பொறுப்பாகவே உணர்வதாக மு.க.ஸ்டாலின் கருத்து!

January 4, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3766 Views

இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக கட்சியின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். மேலும் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட மு.க. ஸ்டாலின் செயல் தலைவர் பதவியை பொறுபாகவே நினைப்பதாக கூறினார். 

இதுக்குறித்து மு.க. ஸ்டாலின் கூறுகையில், திமுக செயல் தலைவராக அறிவிக்கப்பட்டதை பதவியாக நினைக்கவில்லை என்றும், அதனை பொறுப்பாகவே உணர்கிறேன் என்று கூறினார். கட்சிப் பொதுக்குழு கூட்டத்தில், முதன் முறையாக தலைவர் கருணாநிதி பங்கேற்காதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்த அவர், கருணாநிதிக்கு ஓய்வு தேவைப்படுவதால் தாம், செயல் தலைவராக பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார். 

திமுகவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் மு.க.ஸ்டாலின் என்றும், அவருடைய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே, செயல் தலைவர் பதவியை தாம் கருதுவதாகவும், திமுக எம்.பி.யும், மு.க. ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி தெரிவித்தார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.

திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை, கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

முதன் முறையாக திமுக பொதுக்குழு கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்காதது வருத்தம் அளித்தாலும், செயல் தலைவராக ஸ்டாலின் பொறுபேற்றது, புதிய உத்வேகத்தை கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் திமுகவினர் தெரிவித்துள்ளனர். தமிழக உள்ளாட்சி தேர்தலில் முழு உத்வேகத்துடன் செயல்படுவோம் என்றும் திமுகவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Categories: அரசியல்
Image
Image தொடர்புடைய செய்திகள்


தங்களுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்களை தக்க


பாலிவுட் திரையுலகின் முன்ன்ணி நடிகையாக அசைக்கமுடியாத


பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 'பாகுபலி', 'பாகுபலி

தற்போதைய செய்திகள் Nov 22
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.01 (லி)
  • டீசல்
    ₹ 61.4 (லி)