முகப்பு > தொழில்நுட்பம்

இனி ட்விட்டரிலும் லைவ் வீடியோக்கள் உலா வரும்

December 15, 2016

இனி ட்விட்டரிலும் லைவ் வீடியோக்கள் உலா வரும்


சமூகவலைதளங்களான Facebook போன்று Twitter செயலியில் இருந்து நேரலையாக வீடியோக்களை ஒளிபரப்ப வசதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஆண்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் செல்பேசிகளில் இருந்து நேரலையாக ஒளிபரப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter நிறுவனத்தின் Periscope என்ற செயலி மூலம் வீடியோக்களை நேரலையாக ஒளிபரப்பலாம். ஆனால், தற்போது, Periscope இன்றி ட்விட்டரில் நேரடியாக ஒளிபரப்ப வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், Periscope கைவிட ட்விட்டர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. Facebook -இல் லைவ் வீடியோக்களைப் பயன்படுத்தி வருவதைப் போலவே ட்விட்டரிலும் இதை மக்கள் ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Categories : தொழில்நுட்பம் : தொழில்நுட்பம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்