முகப்பு > விளையாட்டு

2017 ஐ.பி.எல்: கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக எல்.பாலாஜி தேர்வு

January 04, 2017

2017 ஐ.பி.எல்: கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக எல்.பாலாஜி தேர்வு


2017ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டித்தொடருக்கான கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராக வலம் வந்த, தமிழகத்தின் லக்ஷ்மிபதி பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2011 முதல் 2013 ஆண்டுகள் வரை கொல்கத்தா அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்தார் பாலாஜி, பின்னர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

தற்போது 2017 ஐபிஎல் தொடருக்கான தனது பந்துவீச்சு பயிற்சியாளராக பாலாஜியை அறிவித்துள்ளது கொல்கத்தா அணி. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பேசிய அந்த அணியில் தலைமை செயல் அதிகாரி, 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா அணி கைப்பற்ற முக்கிய பங்காற்றியவர் பாலாஜி என குறிப்பிட்டார்.

தமிழக கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பாலாஜி பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாலாஜி, கொல்கத்தா அணியில் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்