இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

​தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி

October 9, 2015 Posted By : arun Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1377 Views

வெனிசுலா மற்றும் பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ள வாள்வீச்சுப் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி வழங்கியுள்ளார்.

சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ. பவானி தேவி, 2014ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார், தவிர இந்த ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். 

இதுமட்டுமின்றி காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும் வென்றுள்ளார். தற்போது பவானி தேவி, 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், பவானி தேவி இந்த மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடைபெற உள்ள வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள நிதியுதவி வழங்கிட வேண்டுமென கோரிக்கை அளித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் உடனடியாக 3 லட்சம்  ரூபாய்  நிதியுதவி வழங்கிட தமிழிக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

மேலும், பவானி தேவி, இந்த போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்ல தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.                                                                      

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )