முகப்பு > தொழில்நுட்பம்

ஒரே ஆண்டில் 12 செயற்கைகோள்களை தயாரித்து இஸ்ரோ சாதனை

December 25, 2016

ஒரே ஆண்டில் 12 செயற்கைகோள்களை தயாரித்து  இஸ்ரோ சாதனை


ஒரே ஆண்டில் 12 செயற்கை கோள்களை தயாரித்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளதாக அதன் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.  

பெரம்பலூரில் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். 2106-ம் ஆண்டு மாதம் ஒரு செயற்கை கோள் வீதம் 12 செயற்கை கோள் தயாரித்து விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சமீபத்தில் அனுப்பட்ட செயற்கைகோள் மூலம் விவசாய நிலை, காட்டுவளம், கடல்பகுதியில் காற்று நிலை ஆகியவை குறித்து தெளிவாக கணிக்கமுடிவதாகவும் தெரிவித்தார். 

இதே போல் வரும் 2017ம் ஆண்டும் பல செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளதாக கூறினார். வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கும் அதிகளவில் செயற்கோள் செய்து தரும் வகையில் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

Categories : தொழில்நுட்பம் : தொழில்நுட்பம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்