Skip to main content

​இரண்டு தேசியத்தலைவர்கள்!

October 26, 2018
Image

விவேக் கணநாதன்

கட்டுரையாளர்

Image

‘நான் சவால்விடுகிறேன். யாருக்காவது இந்த நாட்டில் தைரியம் இருந்தால்... அருண்ஜெட்லிக்கா, ஜெயலலிதாவுக்கா, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கா, ஏன் உச்சநீதிமன்றத்துக்கா... யாருக்காவது மனவலிமை இருந்தால் 1.76 லட்சம் கோடி இழப்பு என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுங்கள். நான் வழக்கைச் சந்திக்கிறேன்’ 2014ம் ஆண்டு மோடி ஜுரத்தில் தேர்தல் காய்ச்சல் உச்சத்திலிருந்த போது ஆ.ராசா சொன்ன வார்த்தைகள் இவை.

ஒரு மந்திரம் போல உச்சாடனம் செய்யப்பட்ட 1.76 லட்சம் கோடி ஊழல் என்கிற குற்றச்சாட்டை குற்றப்பத்திரிக்கையில்கூட அரசு பதிவுசெய்யவில்லை. ஆனால், நாம் அதை மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டே இருந்தோம். ஆ.ராசா கடந்த 10 ஆண்டுகாலத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கின்ற இடத்தில் எல்லாம் பேசினார். சி.பி.ஐ கைது செய்து அழைத்துச் சென்றபோது நீதிமன்ற வாசலில், திகார் சிறையின் வெளிக்கதவுகளில் நின்று, அவருக்கு கிடைத்த திமுக மேடைகளில் என ராசா பேசிக்கொண்டே இருந்தார். ஆனால், அவர் பேசுவதை நாம் பொருட்டாகவே மதிக்கவில்லை. வழக்கை முடித்துவிட்டு இன்றைக்கும் ஆ.ராசா பேசுகிறார். அவரது குரலில் மாற்றம் தெரியவில்லை. ஆனால், அவரது குரலுக்கு பதில்சொல்லாமல் முன்னால் ஒரு தேசமே மௌனித்து நிற்கிறது.

கடந்த மார்ச் முதல்வாரம் ரஜினிகாந்த் ஒரு கல்லூரி மேடையில் அரசியல் பேசினார். ஊரே அதைப்பற்றி விவாதித்தது. முரண்பாடுகளின் தொகுப்பாக இருந்த அவரது பேச்சில் இருந்து ‘வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது’ என்கிற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு இங்கே நாட்கணக்கில் விவாதம் நடந்தது. 

ரஜினியின் அந்த பேச்சிற்கு சரியாக ஒருவாரத்திற்கு முன்பு அமைப்பாய் திரள்வோம் என்கிற தன்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பேசினார். ‘எனக்குப் பதவிகள் முக்கியமல்ல. அடுத்த தலைமுறைக்கு தேவையான ஆற்றல் வாய்ந்த தலைமைகளை நான் உருவாக்குவேன். எனக்கு பெரியாரும், அம்பேத்கரும் தான் வழிகாட்டிகள்’ என பிரகடனம் செய்தார்.

திறமையானவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு ‘எம்.ஜி.ஆர் ஆட்சி தருவேன்’ என சொன்ன ரஜினியைப் பற்றி விவாதித்த நாம், திறமையான இளம் தலைமைகளை நான் உருவாக்கித் தருவேன் என சொன்ன திருமாவளவனைப் பற்றி பேசவேயில்லை. திருமாவளவனின் ஆளுமைக்கு நாம் தரும் பதிலும் திருட்டுத்தனமான மௌனமாகவே இருக்கிறது.

திருமாவளவன் - ஆ. ராசா இருவரும் ஒரேயுகத்திலிருந்து வந்தவர்கள். 1960களின் தொடக்கத்தில் பிறந்தவர்கள். இருவருக்குமான வயது வித்யாசம் ஓராண்டக்கும் குறைவே . திராவிட இயக்கத்தின் செல்வாக்கு மிக்க கோட்டைகளில் ஒன்றான மத்திய தமிழகத்திலிருந்து உருவானவர்கள். கல்வி அறிவையும் - அரசியல் அறிவையும் சமூக விடுதலைக்கான ஆதாரங்களில் ஒன்றாகக் கொண்டு மேலெழுந்து வந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரல்கள் அவர்கள்.

இருவரும் வளர்ந்து வந்த காலத்தில் தமிழ்நாட்டில் திராவிட கருத்தியல் உச்சத்தில் இருந்தது. அன்று பெரியார் இருந்தார். கருணாநிதி தேசிய அளவில் மிக முக்கியமான அரசியல் முகமாக உருவாகியிருந்தார். திராவிடத்தை பெயரளவில் தாங்கிப் பிடித்துக்கொண்டே, தேசிய உணர்வுமையத்தின் வாக்குகளை அறுவடை செய்யும் வகையில், பெரும்பான்மைவாத உபதேசிய குரல்களின், ஆதிக்கப் பண்பாட்டு உணர்வுகளின் வெற்றிகரமான நாயகனாக எம்.ஜி.ஆர் உருவாகியிருந்தார்.

கருணாநிதி - எம்.ஜி.ஆர் என்கிற இரு மாபெரும் தலைமைகளின் முரணியக்கம், அதில் உருவான சாதி ஆதிக்க - பண்பாட்டு ஆதிக்க எதிர்விளைவுகள், சித்தாந்த அரசியலுக்கும் நாயக அரசியலுக்குமான முரண்கள், இந்திய தேசியத்துக்கும் - திராவிட தேசியத்துக்குமான முரண்கள் இவற்றிலிருந்து உருவாகி வந்தவர்கள் திருமாவும் ஆ.ராசாவும்.

1970களில் தமிழ்நாட்டில் நேரடியான தேசியவாதத்தின் அலைவீழ்ந்து, ஆட்சியதிகாரம் இயக்க அதிகாரம் இரண்டிலுமே இனதேசிய அடையாளங்கள் மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டிருந்தன. இங்கே, சாதி மறுப்பை பேசும் திராவிடச் சிந்தாந்தம் ஓங்கியிருந்தது என்று சொல்லும் போது அதற்கு நேரெதிர் எதிரியான சாதியவாதம் இன்னொரு புறம் கூர்மையான தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

அதேநேரம், எம்.ஜி.ஆரின் எழுச்சி, திராவிட இயக்கத்துக்குள் அவர் நிகழ்த்திய ஊடுகலப்பு இரண்டும் திராவிட இயக்கத்தின் இயங்கியலயே ஒருபக்கம் சமூக இழிவுகளிலிருந்து விடுவிப்பதற்கான கருத்தியல் முழக்கம் - இன்னொரு பக்கம் அந்த இழிவுகளிலிருந்து மயக்கவிடுப்பு தரும் கவர்ச்சிவாதம் என இரண்டாக பிளவுபட்டு நிற்கச் செய்தது. இந்தப் பிளவை பயன்படுத்திக் கொண்ட ஆதிக்கப் பண்பாட்டுச் சக்திகள் எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி கவர்ச்சிவாத அரசியலுக்கு கீழே தங்களது சாதிய - பண்பாட்டு ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டனர். இந்த காலம் தந்த உக்கிரத்தின் உருவாகி வந்தவர்கள் இன்றைக்கு இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும். ஸ்டாலின், வைகோ, ஜெயலலிதா என அத்தனை தலைவர்களும் இந்த காலத்தின் நகல்கள் தான். ஸ்டாலின், வைகோ, ஜெயலலிதா என மூவரிடமும் கவர்ச்சிவாதத்தின் தாக்கம் இருப்பதை உணர்ந்து கொள்வதன் மூலம் கருணாநிதி - எம்.ஜி.ஆர் யுகத்தின் உபவிளைவுகள் சித்தாந்த அரசியலில் உருவாக்கியிருக்கும் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். 

கருணாநிதி எழுச்சிகாலகட்டத்தில் உருவான வைகோவிடம் கவர்ச்சிவாதத்தின் தாக்கம்  குறைவாகவும், எம்.ஜி.ஆர் எழுச்சிகாலத்தின் நேர்வாரிசான ஜெயலலிதாவிடம் கவர்ச்சிவாதம் உச்சமாகவும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா தாக்கத்தால் சுணங்கிப்போன காலத்திலிருந்து மேல் எழுந்துவந்த ஸ்டாலினிடம் கவர்ச்சிவாதம் மிதமாகவும் இருப்பதை ஒப்பிட்டு புரிந்து கொள்வதன் மூலம் அரசியல் வருகை நிகழும் காலமும் அவை ஆற்றும் பங்கையும் புரிந்துகொள்ளலாம்.

இந்த கவர்ச்சிவாத அரசியலின் தாக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கும் போதே, அதற்கு நேர் எதிர் வினையாற்ற வேண்டிய இடத்துக்கு சித்தாந்த தலைமைகள் உருவாகி வந்தன. கவர்ச்சிவாதத்தை ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த தலைமைகள் பயன்படுத்திக் கொண்டதைப் போல, கருத்தியல் வாதத்தால் கிடைத்த உத்வேகத்தை ஒடுக்கப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அப்படி உருவாகி வந்தவர்கள்தான் திருமாவும், ஆ.ராசாவும். கருத்தியல் முழக்கம் தரும் எழுச்சி உணர்விலிருந்து மேலே வந்த இருவரின் அரசியல் வருகையுமேகூட ஒரே காலத்தில் தான் நிகழ்ந்திருக்கிறது. 1980களில் ஈழப்போரால் உக்கிரம் பெற்றிருந்த தமிழ்தேசிய உணர்வு அவர்களை வளர்த்து எடுத்தது. 

60களின் தொடக்கத்தில் பிறந்து, 80 களின் பிற்பகுதியில் அரசியல் இயக்கத்துக்குள் தங்களை இணைத்துக் கொண்டு, 90களின் பிற்பகுதியில் தேர்தல் அரசியலுக்குள் வந்து, புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டில் அரசியல் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்டு, புத்தாயிரத்தின் இரண்டாம் பத்தாண்டில் நம்பிக்கை மிகுந்த ஆளுமைகளாக இருக்கிறார்கள் ஆ.ராசாவும், திருமாவும்.

பெரியாரியம், அம்பேத்கரியம், மாநில சுயாட்சி, திராவிட வழி தமிழ்த்தேசியம் என இருவரின் கருத்தியல் மையமும்கூட ஒரே புள்ளியில் இருந்து எழுபவைதான். ஆனால், இருவரின் செயல்பாட்டு மையம் தான் வேறாக இருக்கிறது. 

திராவிடச் சித்தாந்தத்தின் தேர்தல் அரசியல் முகத்தை ஏற்றுக்கொண்டு அதில் இயங்கத்தொடங்கிய ஆ.ராசா திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் பொது நீரோட்ட அரசியலில் எளிமையாக கலந்துவிட்டார். சாதி ரீதியான ஒடுக்குமுறைகள், அவமானங்களை ஆ.ராசா சந்தித்திருக்ககூடும். ஆனால், பொதுவெளியில் அவரைக்காத்து நிற்க திமுக என்கிற பேரியக்கம் இருந்தது. 

இன்னொருபுறம், சமூக விடுதலையை ஆரம்ப காலத்திலிருந்தே ஒடுக்கப்பட்டோரின் குரலாக நேரடியாக பேசிய திருமாவளவன் மிக எளிமையாக தலித்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்துக்கு நேரடியாக ஆளானார். 2011க்கு பிறகு நடந்த அத்தனை தேர்தல்களிலும் திருமாவளவனுக்கு எதிரான பிரச்சாரம் வலுத்திருப்பதும், வாக்குவங்கி அரசியலில் திருமாவளவனுக்கு எதிரான தலீத் எதிர்ப்பு வாக்குவங்கி என்பது முக்கியமான பேசுபொருளாக மாறியிருப்பதும் இங்கே கவனித்தக்கது.

இந்தப்பின்னணிகளை எடுத்துக் கொண்டுபார்த்தால், திருமா, ராசா இருவரும் தங்களது அரசியல் வாழ்க்கை மூலம் நம் காலத்தின் இரு மிகமுக்கியமான சிக்கலை உணர்த்தியுள்ளனர். ஒன்று ஆட்சியதிகாரத்தை நோக்கி ஒடுக்கப்பட்ட பிரிவினர் சென்றடைதல்; இரண்டாவது சென்றடையும் அதிகாரத்தை தக்கவைத்தல்.

2ஜி வழக்கு, எல்லாவிதமான தகுதிகளும் இருந்தும் திருமாவளவனை தலைவராக அங்கீகரிப்பதில் பொதுப்புத்தியில் இருக்கும் வஞ்சகம் இவை இரண்டும் உணர்த்தும் அரசியல் செய்திகள் முக்கியமானவை.

பரியேறும் பெருமாள் படம் வெளியான நேரத்தில் ஒரு பத்திரிகையாளனாக இருவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருவர் ஆ.ராசா, இன்னொருவர் திருமாவளவன்.

கண்ணுக்குத் தெரியாத நம் சகவாழ்வில் ஆயிரம் பரியேறும் பெருமாள்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள். அதேநேரம் நம் கண்ணுக்கு முன்னால் அந்த அழிவின் விசையோடு போராடும் அரசியல் முகங்களாக ஆ.ராசா, திருமாவளவன் இருவரையும் மதிப்பிடலாம்.

சாதியத்துக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள தொடர்பு, சீர்திருத்த மரபு அரசியல்வாதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படும் அபாயம், தாராளமயமாக்கலை ஏற்றுக்கொண்ட பிறகு ஆட்சியதிகாரத்தை தீர்மானிப்பதில் பெருநிறுவனங்களின் பங்கு அதிகரித்திருப்பது, கார்ப்பரேட் பாணியில் இயங்கும் பொதுநிலை ஊடகங்கள் எல்லாமே சித்தாந்த அரசியலுக்கு எதிராக நிற்பது, ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் எழுச்சியில் சித்தாந்த அரசியல் இயக்கங்கள் அடைந்த தேக்கம், அரசியல் தலைமையை தீர்மானிக்கும் சாதிய மனநிலை என திருமா - ஆ.ராசா இருவரது வாழ்க்கையும் இந்தியாவின் ஆதாரமான சிக்கல்களை நோக்கி நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

திராவிட இயக்கத்தின் ஆதரவோடு இந்தியாவின் மத்திய ஆட்சி அதிகார அடுக்கில் தன்னை இணைத்துக் கொண்ட ஆ.ராசா மிக மோசமான தாக்குதலுக்கு ஆளாகி அதிகாரத்தை இழந்தார். சாதியின் காரணமாகவே வலுவான அதிகாரம் எதையும் எட்டிப்பிடிக்காமல் திருமாவளவன் இன்றுவரை தடைபட்டு நிற்கிறார். 

திராவிட இயக்கத்தின் சாதனைகளில் மகத்தானது மிக மிக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட தலைமைகளை ஆட்சியதிகாரம் நோக்கியும், கட்சி அதிகாரம் நோக்கியும் சீரான இடைவெளிகளில் உருவாக்கியதுதான். மிக மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கருணாநிதி 50 ஆண்டுகள் மிக உச்ச அதிகாரத்தில் இருந்திருக்கிறார். இன்றைக்கு அந்த அதிகாரம் ஸ்டாலின் கைகளுக்கு வந்திருக்கிறது. 

தமிழ்நாட்டின் மாபெரும் இயக்கம் ஒன்றின் அதிகாரம், சமூக - பொருளாதார ரீதியில் மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து மேலே வந்தவர்களின் கையில், பெரிய சலனங்களுக்கும், சலசலப்புகளுக்கும் ஆளாகமல் இத்தனை ஆண்டுகாலம் இருந்தது என்பது ஒரு சாதியச் சமூகத்தில் மிக முக்கியமான சாதனை. கருணாநிதி தனது மகத்தான ஆளுமையால் அவரது தலைமை இடத்தை நோக்கிய கேள்விகளே எழாமல், தனக்கேயுரிய லாவகத்துடன் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டார். 

கருணாநிதியின் காலத்தைவிட இன்றைக்கு அதிகாரத்துக்கான பங்கீட்டில் சாதிய இடைவெளி மிக அதிகரித்துள்ளது. ஆனாலும் கூட மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஸ்டாலினால் மீண்டும் அதிகாரத்தை அடைய முடிந்திருக்கிறது. வலுவான அதிகாரம் செலுத்தக்கூடிய, குறிப்பிடத்தகுந்த செல்வாக்குமிக்க பல இடைநிலைச் சாதியின் தலைவர்கள் இடம்பெற்றிருக்கும் திமுக போன்ற ஒரு இயக்கத்தில் பேரங்களோ, சலனங்களோ நிகழாமல் மிக எளிமையாக இந்த அதிகார கைமாற்றம் நடந்து முடிந்திருக்கிறது. 

கருணாநிதியின் மகன் என்கிற ஆசி, மிகதொடக்க காலத்திலிருந்தே ஸ்டாலினுக்கு கிடைத்த வெளிச்சம், அதிகாரத்தை நோக்கி ஸ்டாலின் தன்னை வளர்த்துக்கொண்ட விதம், ஸ்டாலின் கொடுத்த பேருழைப்பு இவற்றைத் தாண்டி புரிந்துகொள்ள வேண்டியது எதிர்ப்பே இல்லாமல் அந்த அதிகாரம் கைமாறியதில் இருக்கும் சாதியவாதத்தின் வீழ்ச்சியைத்தான். 

அதன் வளமான தொடர்ச்சியை ஆ.ராசாவின் எழுச்சியிலும் பார்க்க முடிகிறது. இன்றைக்கு திமுகவின் பலம் வாய்ந்த இரண்டாம் கட்டத்தலைவர்களில் ஆ.ராசா முன்னணியில் இருக்கிறார். வெறுப்பு பிரச்சாரம், கடுமையான விமர்சனங்கள், வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு என  கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் அரசியல் வனவாசம் இருந்த ஆ.ராசா அத்தனையையும் நொறுக்கிவிட்டு இன்றைக்கு இயக்கத்தின் முக்கிய முகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.

ஒரு தேசமே எதிர்த்து நின்ற ஒரு வழக்கில், தன் மீதான புழுதிவாரித்தூற்றல்கள் அத்தனையையும் கடந்து தொண்டர்கள் மத்தியில் ஆ.ராசா பெற்றிருக்கும் இந்த எழுச்சி மிக முக்கியமானது. கருணாநிதியை ஏற்றுக்கொண்டதைப் போல, ஸ்டாலினை ஏற்றுக் கொண்டதைப் போல, ஆ.ராசாவையும் எந்த நெருடலும் இல்லாமல் இன்றைக்கு திமுகவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். திமுகவின் ஈரோடு மாநாட்டில் ஆ.ராசாவுக்கு கிடைத்த வரவேற்பிலும், தொலைக்காட்சிகளில் அவர் கொடுத்த நேர்காணல்களுக்கு பிறகு அவருக்கு கிடைக்கும் வரவேற்பிலும் அதை உணரமுடிகிறது.

சித்தாந்தத்தின் கீழ் நின்று, ஸ்டாலினும் ஆ.ராசாவின் எழுச்சியை அங்கீகரிக்கிறார். ஆரம்பகாலம் தொட்டே ஆ.ராசாவை அரவணைத்து வளர்த்ததில் ஸ்டாலினுக்கு முக்கியப்பங்குண்டு. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரப்பகிர்வை திராவிட இயக்கம் சரியாக செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டிருக்கும் காலத்திலேயே திராவிட இயக்கத்துக்குள் ஆ.ராசாவின் அரசியல் எழுச்சியும் நடப்பது மிக முக்கியமானது.

திராவிட இயக்கத்தின் அதிகாரப்பகிர்வில் மிக முக்கியமான கட்டம் இது. சமீபமாக திமுகவின் பொருளாளர் பொறுப்புக்கு ஆ.ராசாவின் பெயர் அடிபடுவதும், திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் ஆ.ராசாவுக்கு துணைமுதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்கிற குரல்கள் பொதுவெளியில் எழுவதும் சாதாரணமாக கடந்து செல்லக்கூடியவை அல்ல. இந்தக்குரல்களை எழுப்பவர்களுக்கு திமுகவுக்குள் குழப்பம் விளைவிக்கும் நோக்கம் இருப்பதாக திமுக தரப்பில் விமர்சனங்கள் இருக்கின்றன. 

ஆனால், இங்கே கவனிக்க வேண்டியது இந்த குரல்களின் நோக்கம் சந்தேகிக்கப்படுகிறதே தவிர, ஆ.ராசாவுக்கு அதிகாரம் அளிக்கவேண்டும் என்கிற கோரிக்கை திமுகவினராலேயே வரவேற்கப்படுகிறது. உண்மையில் இது ஒரு வரலாற்றுக்கட்டம். கருணாநிதியிடம் அதிகாரம் வந்து சேர்ந்தது எவ்வளவு முக்கியமான கட்டமோ, அதற்கு நிகரான ஒரு முக்கியமான ஒரு கட்டமாக ஸ்டாலினின் காலத்தில் எழும் குரல்களை பார்க்கலாம். 

சுமார் கால்நூற்றாண்டுகால தொடர் அரசியல் பயணத்திற்கு பிறகு ‘தலித் என்கிற காரணத்தாலேயே நான் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக ஒருபோதும் வரமுடியாது’ என்ற திருமாவின் குரல் தணிவதற்கு உள்ளாகவே தலித்தான ஆ.ராசாவுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்கிற குரல் எழுந்திப்பதை, வரலாறு தன்னை சுத்திகரிக்க நிகழ்த்திக்கொள்ளும் அனிச்சை என்றே அழைக்கலாம்.

ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் ஆ.ராசாவும் அதிகாரப் பசி இல்லாதவராகவே இருக்கிறார். ‘என் உழைப்புக்கு மேலான வெற்றியை என் இயக்கம் எனக்கு கொடுத்திருக்கிறது’ என நெகிழ்கிறார். அதிகாரத்திற்கு வருவதற்கு எல்லா தகுதியும் உடைய, ஆனால் அதிகாரத்தைப் பிடிப்பதை மட்டுமே இலக்காக கொள்ளாத சித்தாந்த தலைமைகள், அதிகாரம் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தே உருவாகியிருப்பது நம் காலத்தின் நிகழதிசயம்.

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் தலித் சமூகத்தைச் சார்ந்த தலைவர்களிலேயே இனதேசிய அடையாளத்துடன் - ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் அரசியலை முன்னெடுக்கும் ஒரே ஆளுமை திருமாவளவன் தான். இன்றைக்கு இந்தியாவிலிருக்கும் சீர்திருத்த மரபு கட்சிகளிலேயே செல்வாக்கும் - அங்கீகாரமும் கொண்ட அடுத்தக்கட்ட தலைவராக உயர்ந்திருக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆ.ராசா மட்டும் தான்.

தமிழ்நாட்டில் எப்போதுமே சித்தாந்த தலைமைகளுக்கான இடம் காலியாக இருந்ததில்லை. பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி என அடுத்தடுத்த வளமான சித்தாந்த தலைமைகள் உருவாகிக் கொண்டே வந்திருக்கிறார்கள். தேசியவாத, பழமைவாத, கவர்ச்சிவாத அரசியல்தான் இடைவெளிவிட்டு இடைவெளியாக கைமாறி வந்திருக்கிறது. இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம், காமராஜர், அண்ணா, கருணாநிதி என சித்தாந்த தலைமைகள் அனைவருமே சாதித்தட்டில் மிகக்கீழான இடத்திலிருந்து முன்னேறி மேலே வந்தவர்கள். 

அதே வழியில், தமிழ்நாட்டிலிருந்து தேசிய அளவில் ஒலிப்பதற்கான இரண்டு வலிமையான சித்தாந்த தலைமைகள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தே உருவாகி வந்திருக்கிறார்கள். ஆம். தமிழ்நாடு தொடர்ந்து பேசிவந்த சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழிப்பாதுகாப்பு என எல்லாவற்றையும் காத்திரமாக ஒலிக்கக்கூடிய தலைவர்களாக, பெரியாரியமும் அம்பேத்கரியமும் சந்தித்துக்கொள்ளக்கூடிய மையப்புள்ளிகளாக திருமாவளவன், ஆ.ராசா என்கிற இரு தேசிய ஆளுமைகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அதாவது கட்சி அதிகாரத்திலும் செல்வாக்கிலும் இரண்டாம் கட்டத்திலேயே இரண்டு தேசியத் தலைவர்கள் இருக்கிறார்கள். எனவே, வெற்றிடம் குறித்த கட்டுக்கதைகளை இனியும் நாம் நம்பத்தேவையில்லை.


தொடர்புக்கு: writetovivekk@gmail.com, Facebook, Twitter

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு!

21 hours ago

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கே.டி.ராமாராவ், சிர்சிலா தொகுதியில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

1 day ago

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

1 day ago

தெலங்கானாவில் டிஆர்எஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது!

1 day ago

மத்தியபிரதேசம் புத்னி தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவராஜ் சிங் சௌகான் முன்னிலை வகித்துவருகிறார்.

1 day ago

ராஜஸ்தானின் ஜல்ரபதன் தொகுதியில் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா முன்னிலை வகித்துவருகிறார்.

1 day ago

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது!

1 day ago

அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கும் அக்னி 5 ஏவுகணை; வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா.

1 day ago

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து குடியரசுத் தலைவரிடம் புகாரளிப்போம் என மம்தா பானர்ஜி தகவல்.

1 day ago

5 மாநில சட்டபேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை; வெல்லப்போவது யார் என்பது மதியம் தெரியவரும்.

1 day ago

5000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகனை சோதனை வெற்றி

1 day ago

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது

1 day ago

தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியது எப்படி? மத்திய தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி

1 day ago

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடம் தேர்தல் செலவுதொகையை வசூலிக்க கோரிய மனு; தமிழக தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

1 day ago

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

1 day ago

"கனிமொழிக்கு 2018ம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது கிடைத்திருப்பதற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புமொழி!"- கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

1 day ago

2018ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

1 day ago

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

1 day ago

மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த வியூகம்; டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை.

1 day ago

வங்கிகளிடம் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த புகாரில் நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா?; இன்று தீர்ப்பை வெளியிடுகிறது லண்டன் நீதிமன்றம்.

1 day ago

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

2 days ago

ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யா, கோவையில் பறை இசைக்குழு நடத்திவரும் சக்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

2 days ago

டெல்லி புறப்பட்டுச் சென்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியா காந்தியுடன் விவாதிப்பேன் என பேட்டி.

2 days ago

பிரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் காலமானார்.

2 days ago

காவிரி மேலாண் ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டுமென தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

3 days ago

“தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக முடியும். சாதி ரீதியாக அணுக முடியாது; இயக்குநர் ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம்!” - தொல்.திருமாவளவன்

3 days ago

“தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கின்றன!” - சீமான்

3 days ago

"தமிழகத்தில் தாமரை மலர தலை கீழாக நடக்க தேவையில்லை, நேர்மையாக நடந்தால் போதும்!" - தமிழிசை சவுந்தரராஜன்

3 days ago

கேரளா வெள்ள நிவாரணத்திற்காக குறைந்த வட்டியில் ரூ. 744 கோடி கடன் தருவதாக ஜெர்மனி அரசு அறிவிப்பு!

3 days ago

சூடுபிடிக்கிறது ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை; சசிகலாவிடம் விசாரிக்க கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம்.

3 days ago

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிந்தது; தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பம் என தகவல்.

3 days ago

தஞ்சை பெரியகோயிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் யோகா மற்றும் தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

3 days ago

நாளை தொடங்க இருந்த அரசு மருத்துவர்கள் சங்க வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு.

4 days ago

தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான ஆய்வை தொடங்கியது கர்நாடக அரசு!

4 days ago

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம்!” - உச்சநீதிமன்றம்

4 days ago

பிரதமர் யார் என்பது பிரச்சனையல்ல; மோடியை பதவியில் இருந்து இறக்கவேண்டும் என்பதே முக்கியம்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா

4 days ago

தனியார் தொலைக்காட்சியில் நிர்வாகம் குறித்து தவறாக பேட்டி அளித்ததால், அண்ணா பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலுவின் பதவி பறிப்பு.

4 days ago

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல் மக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரில் வைக்கப்பட்டது; இன்று பிற்பகல் இறுதிச் சடங்கு நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு.

4 days ago

சிலைக்கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

6 days ago

கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1401 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு

1 week ago

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்த FIR ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறிய பதிலை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி

1 week ago

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம்

1 week ago

கிரிக்கெட் வீரர் தோனிக்கு, மகள் ஸிவா நடனம் கற்றுக் கொடுக்கும் காட்சிகள்; சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ.

1 week ago

மூடியிருந்த ரயில்வே கேட்டை திறக்க சொல்லி ரயில்வே ஊழியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்ற அதிமுக எம்பி உதயகுமார்

1 week ago

அனைத்து பாடப் புத்தகங்களிலும் அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் - திருமா

1 week ago

ஜனவரி 1 முதல் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது; வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, சீனா பரஸ்பர ஒப்புதல்.

1 week ago

திருவண்ணாமலையில் சட்டவிரோத கருகலைப்பு மையம் நடத்திய பெண் கைது; ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்ததுடன், வீட்டுக்கும் சீலிட்டு போலீசார் நடவடிக்கை.

1 week ago

தமிழக ஆளுநர் அத்துமீறி செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு; 7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தல்.

1 week ago

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் சுனில் அரோரா.

1 week ago

“நாட்டிற்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநரும் ஒரு சாபக்கேடு!” - வைகோ

1 week ago

உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூட மத்திய அரசு முடிவு; நீலகிரி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி.

1 week ago

டிசம்பர் 4,5ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

1 week ago

கல்வியும், கலாச்சாரமும் மிக முக்கியமானவை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

1 week ago

தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது; இந்தியா டுடே இதழுக்கு நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி.

1 week ago

உலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பேரிடர்களில், கேரள வெள்ளம் மோசமானது; சர்வதேச வானிலை மையம் அறிவிப்பு.

1 week ago

வரும் ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை; தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தகவல்.

1 week ago

பொருளாதார குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளுக்கு, உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்; ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.

1 week ago

திருநெல்வேலி மாவட்டத்தில், 51 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ராமநதி ஜம்பு நதி திட்டம்; அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, 9 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தல்.

1 week ago

கஜா புயல் தாக்கி 15 நாட்களாகியும் மின்சார வசதி கிடைக்கவில்லை என புகார்; திருத்துறைப்பூண்டி அருகே பொதுமக்கள் சாலை மறியல்.

1 week ago

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

1 week ago

வரும் 4-ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு; வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்.

1 week ago

“வரும் 4ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்!” - ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்

1 week ago

தமிழகத்தில் 4ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

1 week ago

இமயமலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; நேபாள - இந்திய எல்லையில் 15 மீட்டர் அளவுக்கு மலை சரியும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

1 week ago

"நாட்டின் தலைநகரத்தில் தமிழர்களின் மானத்தை வாங்க சிலர் சென்றுள்ளது மன்னிக்க முடியாத குற்றம்"- பொன்.ராதாகிருஷ்ணன்

1 week ago

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்; உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி உறுதி.

1 week ago

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்; பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவி என சிறிசேனா அறிவிப்பு.

1 week ago

தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று முடிவு என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

1 week ago

பொன். மாணிக்கவேல் பதவியை ஒரு ஆண்டுக்கு நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

1 week ago

கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

1 week ago

“ஜாக்டோ-ஜியோ சங்கத்தின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை நடைபெறும்!”- ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்

1 week ago

மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான சிகிச்சை தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரித்து முதல்வர் பழனிசாமி அறிக்கை.

1 week ago

சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

1 week ago

“மேடைப் பாடகர்களிடம் ராயல்டி கேட்கும் இளையராஜா, படத்தை தயாரித்தவர்களுக்கு பங்கு தருவாரா?”- தயாரிப்பாளர் கே.ராஜன்

1 week ago

டெல்டா மாணவர்களின் மருத்துவ கனவை கேள்விக்குரியாக்கிய கஜா புயல்; தேர்வுக்கு தயாராக போதிய கட்டமைப்பு வசதிகள் இன்றி தவிப்பு.

1 week ago

பொன். மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்

1 week ago

“கஜா புயல் சீரமைப்பு பணிக்காக ராணுவ உதவியை தமிழக அரசு கேட்கவில்லை; எப்போது கேட்டாலும் ராணுவ உதவியை வழங்கத் தயார்!” - நிர்மலா சீதாராமன் பேட்டி

1 week ago

சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி.

1 week ago

சிலைக்கடத்தல் விசாரணையை சிபிஐக்கு மாற்றும் அரசாணைக்கு எதிரான வழக்கு; இன்று மதியம் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.

1 week ago

அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

1 week ago

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு வார கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்!

1 week ago

25 வயதுக்கு மேற்பட்டோரும் இனி நீட் தேர்வு எழுதலாம்.. நீட் தேர்வில் வயது வரம்பை தளர்த்தக்கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு!

1 week ago

இந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூரிய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

1 week ago

இந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூர்ய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

1 week ago

31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி c -43 ராக்கெட்!

1 week ago

கஜா புயல் சேதத்திற்காக 10 கோடி ரூபாய் நிதியுதவி; கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு.

1 week ago

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ரஜினியின் 2.0 திரைப்படம் வெளியீடு; திரையரங்குகளில் பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் உற்சாகம்.

1 week ago

திருவாரூர்- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு !

1 week ago

கஜா புயல் நிவாரண பொருட்களை ஏர் இந்தியா விமானங்களில் கொண்டு செல்ல கட்டணம் இல்லை : விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பாபு

1 week ago

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சையில் நாளையும், புதுக்கோட்டையில் நாளை மறுநாளும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்கிறார்

1 week ago

“தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

1 week ago

“ஸ்டெர்லைட் ஆலையை மூடி, பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிகளுக்கு எதிரானது!” -தருண் அகர்வால் தலைமையிலான குழு அளித்த ஆய்வறிக்கை

1 week ago

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கை மீது ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

1 week ago

கிழக்குதிசைக் காற்று வலுப்பெற்று வருவதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்!

1 week ago

மேகதாது அணை தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு!

1 week ago

சபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி.

1 week ago

கஜா மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

1 week ago

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர், துணை முதல்வர் நிவாரண உதவி வழங்கினர்.

1 week ago

மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டமன்ற தேர்தல்; காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

1 week ago

புயல் பாதித்த பகுதிகளில் 3 நாள் ஆய்வை நிறைவு செய்த மத்தியக் குழுவினர்; இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    74.63/Ltr (0.31 )
  • டீசல்
    70.38/Ltr (0.39 )
Image பிரபலமானவை