Skip to main content

இப்பலாம் யாரு சார் சாதி பாக்குறா?

November 18, 2018

செல்வா

கட்டுரையாளர்

Image

தமிழ்நாட்டில் தொடரும் ஆணவக் கொலைகள்:

இதை கேட்கும் போதே ஒரு நிமிடம் கண் இமைகள் இரண்டும் விரித்து புருவங்கள் உயர்த்தி பார்க்கும் அனைவரும் இது இந்தியாவில் என்று தானே பதிய வேண்டும் அது என்ன தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒரு அண்டர்லைன் என கேட்கலாம்.

இதோ உங்களுக்கான பதில்!

சாதியை தன் தோளில் சுமக்கும் இந்தியாவில் கல்வி, மருத்துவம், சுகாதாரம், பொருளாதாரம், சமூகநீதி என அனைத்திலும் துருவ நட்சத்திரமாக ஜொலிக்கும் முன்னோடியான மாநிலம்  தமிழ்நாடு தான். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்து இல்லையெனினும், அவற்றிலிருந்த வேகமும் வளர்ச்சியும் சாதிய கொடூரங்களிலும் வெகு கணிசமாகி வருவதே நம்மை திக்கு முக்காடு வைக்க காரணம்.

2016  ஆண்டு நடந்த உடுமலை சங்கரின் படுகொலையை தொடர்ந்து எழுந்த விவாதங்களில்  2016 ஆம் ஆண்டு கணக்கின்படி ஒரு மூன்று வருட காலத்தில் மட்டும் 88 க்கும் அதிகமான சாதிய கொலைகள் நடந்துள்ளதாகவும் அதில் 80 சதவீதம் பெண்களும் 20 சதவீதம் ஆண்களும் பாதிக்கப்படுவதாகவும் புள்ளி விவரங்களை பதிவு செய்தனர். அதன்பின் கௌசல்யாவின் போராட்டம் குற்றவாளிகளில் சிலருக்கு தண்டனை வாங்கித் தந்தாலும் அதன்பின்னால் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கையும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான தாக்குதலும் குறைந்துள்ளதா என்றால் ஒருநாளும் இல்லை.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும்  ஈரோடு ஆராயி, தேனி ராகவி, ஆத்தூர் ராஜலட்சுமி, சேலம் சௌமியா என இந்த பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது. இது ஒருபுறம் என்றால் தீர்க்கப்படாத வழக்குகளாக கோகுல்ராஜ், இளவரசன் என ஆணவக் கொலைகளின் வழக்கு விசாரணைகளின் மெத்தனம் சாதி இந்துக்களுக்கு தைரியத்தையும் ஒருபுறம் தந்து கொண்டுதான் உள்ளது.

அண்ணல் அம்பேத்கரின் கூற்றுப்படி "Caste is state of mind"  ஆம் அது ஒரு மனநிலை. மனித மனங்களில் மாற்றம் இல்லாமல் இங்கு எதுவும் மாற்றியமைக்கப்பட முடியாது. எனில் இரவு பகலாக களத்தில் உழைக்கும் தோழர்களின் வியர்வை எல்லாம் வீணா என்றால், அவர்களின் உழைப்பு இன்னும் வீரியம் ஆக்கப்பட வேண்டும்  அதுவும் சேரிகளில் மேடைகள் போட்டு இது "பெரியார் மண்" என்று முக்காமல் சாதி இந்துக்களின் மனநல மாற்றத்திற்கான முற்போக்கு விதைகளை பயிரிட வேண்டும்.

ஏனெனில் இங்கு தற்கொலைக்கு தூண்டப்படுவதும் ஆணவப் படுகொலைக்கு ஆளாக்கப்படுவதும் ஒடுக்கப்பட்டவர்கள் தானே ஒழிய, சாதி இந்துக்களின் சங்கங்கள் இன்றுவரை பகிரங்கமாக செயல்பட்டு கொண்டு தான் இருக்கின்றது.

அதற்கான இன்றைய உதாரணம் தான் கிருஷ்ணகிரியை சேர்ந்த நந்தீஸ்-சுவாதி தம்பதியரின் ஆணவப்படுகொலை.

அதன்பின் இருக்கும் அரசியல்:

இன்று தமிழ்நாட்டில் தும்முவதும் தோசை சுடுவதும் கூட அரசியல் பிராச்சாரங்களாக பார்க்கப்படும் நிலையில் சாதிய படுகொலைக்கான கண்டனங்களும் தீர்வுகளும் எந்தவொரு அரசியல் தலைவரின் ஞானதிரிஷ்ட்டியிலும் சரியாக உதிக்கவில்லை என்று தான் கருத வேண்டும். ஒருவேளை சில அரசியல் தலைவர்கள் மழைக்கு உதவும் குடையாக மட்டும் சேரிகளையும் அதன் வாக்கு வங்கிகளையும் பார்ப்பதால் தான் என்னவோ தேர்தல் சமயங்களில் மட்டுமே அவர்களின் திக் விஜயங்கள் குப்பத்தையும் குடிசையையும் நோக்கி செல்கின்றன.

ஒரு சாதியினரின் தீண்டாமைக் கொடுமைகளையும் சாதி வெறியாட்டங்களையும் கண்டிக்காமல் ஓட்டரசியலின் பின்னால் ஓடி ஓடி தான் இன்று ஒடுக்கப்பட்டவர்களின் மரணங்களுக்கு இரங்கல் மட்டும் தெரிவித்து கொண்டுருக்கிறோம். கட்சிகள் பதவிகளின் விளைவாக இங்கு விளையும் வெறுப்பரசியலும் இதற்கு வலு சேர்ப்பவையாகவே உள்ளன.

பாதிப்பை ஏற்படுத்தியவர்களை கண்டிக்காமல் பாதிக்கப்பட்டவர்களின்  இழப்பிற்கு ஆறுதல் தெரிவித்து ஆதிக்கத்தின்  பெயரைக் கூட குறிப்பிடாமல் வெளிவரும் இரங்கல் செய்திகளே இன்றைய அரசியலின் திரை மறைவு நாகரிகம்.

ஒரு கணிசமான வாக்கு வங்கியை கொண்ட ஆதிக்கசாதியை கண்டு எந்தவொரு அரசியல்வாதியும் அஞ்சதான் செய்வார்கள். காரணம் அதனுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஓட்டரசியல். ஆனால் அனைத்து சமயங்களிலும் "மௌனகுருவாக" இருப்பவர்கள் சமூகநீதிக்கு பேட்டன் ரைட்ஸ் வாங்கும் போது தான், சனாதனத்தையும் இந்துத்துவ பாசிச அரசையும் எதிர்த்து பல சாதிய கொடுமைகளுக்கு சவுக்கடி கொடுக்க இன்னும் பல முனைவர் பட்டம் பெற்ற அரசியல் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கான தீர்வு:

சாதியின் வரலாறு அதன் எழுச்சி என எது குறித்தும் இம்மியளவும் அறியாத பொதுசமூகத்தில் நீங்கள் இருந்தாலும் வாழ்க்கையின் ஏதாவது ஒருகட்டத்தில் ஏதேனும் ஒரு ஆதிக்க வகுப்பினரால் நீங்கள் ஒடுக்கப்படுவீர்கள் இது தான் இந்தியாவின் எழுதப்படாத சாசனம்.

இதில் சாதிமறுப்பு திருமணங்களின் சாதனையை முறியடிக்க ஆதிக்கத்தின் பலமாய் விளங்குவது ஆணவப்படுகொலைகளும் அதனால் ஏற்படும் அச்சமும் தான். நகரங்களிலும் பெரு நகரங்களிலும் நாம் நிம்மதியாக மூச்சு விடும் ஒவ்வொரு நொடியும் நாட்டின் ஏதேனும் ஒரு  கிராமத்து மூலையில் ஆணவப்படுகொலைக்கான கத்தி தீட்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

எவ்வளவுதான் படித்து நகரங்களில் சென்று வேலைப் பார்த்தாலும் சாதியின் வளர்ச்சி ஊர்ப் பெருமைகளிலும் பாரம்பரியத்திலும் தான் புதைந்து கிடக்கிறது. உலகமயமாதலும் தாரளமயமாதலும் இதுவரை கிராமங்களின் கதவுகளை சரியாக தட்டாததினால் தான் இன்றளவும் குறிப்பிட்ட பாரம்பரிய பெருமை பேசி சாதியை சொந்த பிள்ளைகளாக வளர்த்து வருகின்றனர். எனவே முதலில் ஒவ்வொரு  கிராமங்களிலும் நகரங்களுக்கு இணையான மக்கள் கலப்பு நடைபெற வேண்டும். அதற்கு அங்கு விவசாயம் மட்டுமில்லாமல் வேறு ஊர்களின் மக்களும் வந்து பங்களிக்கும் வகையில் பொருளாதார கொள்கைகள் கொண்டு வர வேண்டும்.

ஆணவப்படுகொலைகள் சாதியின் பெயரால் நடந்தாலும் அதன் திரைமறைவில் உள்ள பெண்ணுரிமை,
பெண்கல்வி  (ஏனெனில் ஆணவப்படுகொலைகளில் அதிகமாக பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.) வர்க்க வேறுபாடு, சமூக அந்தஸ்து, அயலாரின் வெற்றி நாட்டாமைத்தனம் (உதா: என் புள்ள இப்படி பண்ணியிருந்தா கொளுத்தியிருப்பேன்), பெற்றோர்களின் புரிதல் குறைபாடு இப்படியான இன்னும் பல காரியயூக்கிகள் கண்டறிந்து கலையப்பட வேண்டும். அதற்கான விழிப்புணர்வு  எழ வேண்டும்.

அரசு பணிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்பவும் அதிகரிக்கவும் செய்ய வேண்டும். அரசின் அதிகாரங்கள் வழங்கும் பிரிவுகளில் அதிக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் பணி அமர்த்த பட வேண்டும். அதற்காக சராசரி தேவைகளான கல்வி, இருப்பிடம், ஆண்டு வருமானம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும்.

இறுதியாக இங்க யாரு சார் சாதி பாரக்கிறாங்க? 

சாதி சர்டிபிகேட்டை கிழித்தால் சாதி ஒழியும், இட ஒதுக்கீடு தான் சாதியை வளர்க்கிறது என்ற வெள்ளை நூல் ஆராச்சியாளர்களின் விமர்சனங்களை மாற்ற அம்பேத்கரியமும்,பெரியாரியமும் மூன்று நேர மருந்தாக கொடுகக்ப்பட வேண்டும். மேலும் சாதிமறுப்பு திருமணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனி அமைப்பும் இத்தகைய அவலங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கவும் தண்டிக்கவும் கடுமையான சட்டங்களும் இயற்றப்பட வேண்டும்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

"அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குத் தான் பொது சின்னம் ஒதுக்க முடியும்; விதிகளை மீறி நாங்கள் செயல்பட முடியாது!" - தேர்தல் ஆணையம்

50 minutes ago

அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

50 minutes ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் உள்ள அதிமுக முன்னாள் பிரமுகர் பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி சம்மன்!

3 hours ago

நாடாளுமன்றத் தேர்தலில் இன்றுடன் நிறைவடைகிறது வேட்பு மனு தாக்கல்; இதுவரை 604 பேர் வேட்பு மனு தாக்கல்.

4 hours ago

மம்தா கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அந்தமான் செல்கிறார் கமல்ஹாசன்!

4 hours ago

ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணிற்கு அரசு வேலை, வீடு வழங்க வேண்டும்; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

4 hours ago

பெண்களை கொச்சைப்படுத்தி பேசும் வக்கிரமான செயல்களுக்கு நடிகர் சங்கம் கண்டனம்!

23 hours ago

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது!” - தேர்தல் ஆணையம்

23 hours ago

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

1 day ago

நடிகை நயன்தாரா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ராதாரவிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

1 day ago

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் எதிரொலியாக திமுகவில் இருந்து நடிகர் ராதாரவி தற்காலிக நீக்கம்!

1 day ago

பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே காவல்காரர்; கோவை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கடும் தாக்கு.

1 day ago

சரத்குமாருடன் துணை முதல்வர் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு; அதிமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டதாக தகவல்.

1 day ago

நீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரஸ் கட்சி!

1 day ago

விதிகளை மீறி வெடி வெடித்தல், கூட்டம் கூட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால், விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் ஜோதிமணி மீது வழக்குப்பதிவு!

2 days ago

“பாஜகவிற்கு தமிழகத்திலும் ஆதரவு இருக்கிறது என நம்புகிறேன்!” - தமிழிசை சவுந்தரராஜன்

2 days ago

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.

2 days ago

மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது; பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் புதிய சர்ச்சை.

2 days ago

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ

2 days ago

எதிர்க்கட்சிகளின் கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி : முதல்வர் பழனிசாமி

3 days ago

இரவோடு இரவாக வெளியானது தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்; தேனியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து களம் இறங்குகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

3 days ago

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த விடமாட்டோம் : முதல்வர் பழனிசாமி

3 days ago

இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா; முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்.

3 days ago

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

3 days ago

“தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல் இது!” - முதல்வர் பழனிசாமி

3 days ago

அதிமுக வேட்பாளர்கள் இன்று நண்பகல் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல்!

4 days ago

ஈராக்கில், படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!

4 days ago

கர்நாடகா அடுக்குமாடி கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு; இடிபாடுகளில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரம்.

4 days ago

184 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா; வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி.

4 days ago

சேலம் அருகே தறி தொழிலாளியின் 10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

4 days ago

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

4 days ago

“இந்தியாவின் சூப்பர் ஸ்டார், பிரதமர் மோடி!” - அமைச்சர் செல்லூர் ராஜூ

5 days ago

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

5 days ago

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ், இன்று காலை மாரடைப்பால் மரணம்!

5 days ago

ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைக்கு செல்வது உறுதி: மு.க.ஸ்டாலின்

5 days ago

பானை சின்னத்தில் போட்டியிடுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

5 days ago

ப்ரியங்கா காந்தி மாலையிட்டதால் தீட்டானதா லால் பகதூர் சாஸ்திரி சிலை; கங்கை நீரை ஊற்றி பாஜகவினர் கழுவியதால் சர்ச்சை.

5 days ago

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; கலர் பொடிகளை வீசி, மேளதாளங்கள் முழங்க கொண்டாடிய மக்கள்.

5 days ago

ரூ.11 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி கைது..!

5 days ago

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்!

5 days ago

கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி...!

5 days ago

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை மிகவும் வெட்கக்கேடானது: மு.க.ஸ்டாலின்

5 days ago

“இந்தியாவில் உள்ள கூட்டணிகளிலேயே தலை சிறந்தது அதிமுக கூட்டணி!” - முதல்வர் பழனிசாமி

5 days ago

மதுரை அலங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; தேனி தொகுதி வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத்குமாருடன் வாக்கு சேகரிப்பு!

6 days ago

இலவச திட்டங்களை எப்படி செயல்படுத்த போகிறீர்கள்?; தேர்தல் அறிக்கையில் விளக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.

6 days ago

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம்.

6 days ago

இன்று ஒரே நாளில் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் வெளியாகிறது

1 week ago

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல்

1 week ago

கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்தியதற்கு மநீம-வில் கடும் எதிர்ப்பு

1 week ago

தீபா பேரவையுடன் தாம் கூட்டணி அமைப்பதாக கூறுவது பொய்யான தகவல்: டி.ராஜேந்தர்

1 week ago

மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து கோவாவின் புதிய முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்

1 week ago

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் விலகல்!

1 week ago

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு..!

1 week ago

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் ஏ.கே.பி.சின்ராஜ்!

1 week ago

“வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறுவதால் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்!”- சத்யபிரதா சாஹூ

1 week ago

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; கள்ளக்குறிச்சி - சுதீஷ், விருதுநகர் - அழகர்சாமி, வடசென்னை - மோகன்ராஜ், திருச்சி - டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு!

1 week ago

“ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார்!” - வைகோ

1 week ago

சென்னை அண்ணா நகர் இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி!

1 week ago

“நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக மநீம சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும்!”

1 week ago

“தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும்; நான்கும் நமதே நாளையும் நமதே என்ற ரீதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்!” - பிரேமலதா விஜயகாந்த்

1 week ago

நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

1 week ago

தேர்தல் பிரச்சாரம், செலவீனம் உள்ளிட்டவற்றை கவனிக்க, 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்தது திமுக!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு சிறையில் அடைப்பு!

1 week ago

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

1 week ago

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக தகவல்!

1 week ago

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

1 week ago

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்படுகிறார்; பிரதமர் மோடி தலைமையிலான குழு தீவிர ஆலோசனை.

1 week ago

PSLV ராக்கெட் மூலம், 30 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது; ஏப்ரல் ஒன்றாம் தேதி, ஏவ இஸ்ரோ திட்டம்.

1 week ago

கோவா முதல்வரின் உயிரைப் பறித்த புற்றுநோய்; இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.

1 week ago

இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5ஆக பதிவு!

1 week ago

திருப்பதி திருமலையில் தமிழகத்தை சேர்ந்த மகாவீரா- கௌசல்யா தம்பதியினரின் 3 மாத கைக்குழந்தை கடத்தல்; போலீசார் தீவிர விசாரணை!

1 week ago

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

1 week ago

தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை.

1 week ago

திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்!

1 week ago

அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் தீர்ந்தது சிக்கல்; இன்று காலை வெளியாகிறது பட்டியல்.

1 week ago

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

ஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடக்கம்; டிக்கெட் வாங்குவதற்காக விடிய விடிய காத்துக்கிடந்த ரசிகர்கள்.

1 week ago

தேர்தல் விழிப்புணர்வு குறித்த பிரசாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்; பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றார்.

1 week ago

திமுகவிலிருந்து அதிமுக கூட்டணிக்கு தாவிய என்.ஆர்.தனபாலன்!

1 week ago

திருவள்ளுர், கிருஷ்ணகிரி, ஆரணி, திருச்சி, தேனி, விருதுநகர், புதுச்சேரி, கரூர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது!

1 week ago

“நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொள்வார்; ஆனால் பேசமாட்டார்!” - எல்.கே.சுதீஷ்

1 week ago

"இருநாடுகளுக்கு இடையே நிலவும் அசாதாரண சூழலுக்கு தேர்தலே காரணம்!" - இம்ரான் கான்

1 week ago

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு பிசிசிஐ விதித்திருந்த வாழ்நாள் தடை உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திருநாவுக்கரசை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்!

1 week ago

ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில், இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல்.

1 week ago

ஹாலிவுட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட Avengers End game திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!

1 week ago

மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 6 பேர் பலி!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக புகாரளிக்க விரும்புவோர் ஆதாரங்களை வழங்கலாம் என சிபிசிஐடி அறிவிப்பு!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்:கனிமொழி எம்.பி

1 week ago

“18 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்!” - கமல்ஹாசன்

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் சிபிஐ க்கு மாற்றி தமிழகஅரசு உத்தரவு!

1 week ago

பொள்ளாச்சி விவகாரத்தை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்குமாறு பெண் வழக்கறிஞர்கள் செய்த முறையீட்டை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

1 week ago

சற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ராமதாஸ்; 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சந்திக்கவுள்ளார் ராமதாஸ்.

1 week ago

மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்; 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு.

1 week ago

திண்டுக்கல் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் பிரதான குழாய் உடைப்பு; தண்ணீர், வீணாக சாக்கடையில் கலந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.

1 week ago

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்; 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

1 week ago

இந்திய அணிக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

1 week ago

நாடாளுமன்ற தேர்தல் அதிமுக - தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!

1 week ago

“வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்!” - ராகுல் காந்தி

1 week ago

‘சார்’ என அழைக்க வேண்டாம் என மாணவிகளிடம் கோரிக்கை விடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை