முகப்பு > தொழில்நுட்பம்

செயற்கைக்கோள்கள் அளித்த தொடர் தகவல்களால் 10,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன: இஸ்ரோ

December 15, 2016

செயற்கைக்கோள்கள் அளித்த தொடர் தகவல்களால் 10,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன: இஸ்ரோ


சென்னையைத் தாக்கிய வர்தா புயல் தொடர்பாக குறிப்பிட்ட இரண்டு செயற்கைக்கோள்கள் அளித்த தொடர் தகவல்களால் 10,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

வர்தா புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகின. இதனிடையே, வர்தா புயலின் நகர்வுகள் குறித்து துல்லியமாக தொடர் தகவல்களை அளித்ததில் இன்சாட் 3D மற்றும் ஸ்கேட்சாட்-1 ஆகிய செயற்கைக்கோள்கள் முக்கியப் பங்கு வகித்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இந்த இரு செயற்கைக்கோள்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 10,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக இஸ்ரோ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு அளிக்கப்பட்ட விரைவான தகவல்களால் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories : தொழில்நுட்பம் : தொழில்நுட்பம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்