முகப்பு > விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!

January 06, 2017

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் 10-ஆம் தேதி முதல் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி உள்ளிட்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 15-ஆம் தேதி புனேவில் தொடங்குகிறது. 

இந்நிலையில், இந்த தொடரில் களமிறங்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி, ஷிகர் தவான், அமித் மிஷ்ரா உள்ளிட்ட வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். 

அதன்படி விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

20 ஓவர் போட்டியில் டெல்லியை சேர்ந்த வீரர் ரிஷாப் பந்த் விக்கெட் கீப்பராக முதல்முறையாக களமிறங்குகிறார்.  

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்