Skip to main content

இந்திய கிரிக்கெட்டின் பிரம்மா!

January 06, 2019
Image

நந்த குமார்

கட்டுரையாளர்

Image

ஹரியானாவில் மத்திய தர குடும்பத்தில் பிறந்த மெலிந்த உடலுடைய 19 வயது இளைஞன் ஒருவன் மும்பையில் நடந்த under 19 கிரிக்கெட் கேம்ப் ஒன்றில் மதிய உணவு இடைவெளியில் எக்ஸ்டரா ரொட்டி கேட்டு பிரச்சனை செய்கிறான். அதை பார்த்த அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவர் ராஜ் சிங், ஏன் நீ மட்டும் எக்ஸ்டரா ரொட்டி கேக்குற? என அந்த இளைஞனை நோக்கி கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த இளைஞன் வேகமாக பந்து போடனும்னா எக்ஸ்டரா ரொட்டி தேவை என பதில் கூறுகிறான். அதற்கு ராஜ் சிங் இந்தியா இதுவரை வேகப் பந்து வீச்சாளர்களை உருவாக்கியதில்லை என கூறுகிறார். அந்த ஒற்றை பதில் கபில் தேவ் எனும் கிரிக்கெட் வீரனை இந்தியாவுக்கு கிடைக்கச் செய்தது. பின்னாளில் அந்த வீரன் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் திசையை தீர்மானிக்கும் நாயகனாக மாறினான்.

60 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா மாநிலம் சண்டிகரில் மத்திய தர குடும்பத்தில் இதே தினத்தில் பிறந்தார் கபில் தேவ். இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் முதன்மையானவர். சச்சினா தோனியா, தோனியா கோலியா என சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு கொண்டிருக்கும் காலகட்டத்தில் இருக்கோம் இப்ப வந்து கபில் தேவ் பத்தி பேசிக்கிட்டு என தோன்றலாம். ஆனால் இந்த காலகட்டத்திலும் இவரை பற்றி பேச ஏராளமான விஷயங்கள் இருக்கவே செய்கிறது.  இன்று இளைஞர்களால் பெரிதும் ரசித்து பார்க்கப்படும் T-20 ஃபார்மேட்டை முதன்முதலில் இந்தியாவில், இந்தியன் கிரிக்கெட் லீக் என தொடங்கிவைத்தது கபில் தேவ்தான். கபில்தேவ் தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற்றால் அவரை ரூ.25 கோடி கொடுத்து ஏலம் எடுக்க இப்போது கூட பலரும் தயாராக உள்ளனர். இதை கூறியது 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் கபில் தேவுடன் இணைந்த விளையாடிய சுனில் கவாஸ்கர். இது சுனில் கவஸ்கர், கபில் தேவை கேலி செய்வதற்காக சொன்ன வார்த்தைகள் இல்லை. கபில் தேவின் ஆட்டத்தை நேரில் கண்டு அலண்டுப்போய் சொன்ன வார்த்தைகள் இவை. ஆமாம். 1983ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஜிம்பாபேவுடனான அரை இறுதிப்போட்டியில் கபில் தேவ் அடித்த 175 ரன்களே கவாஸ்கரின் கருத்துக்கு காரணம். 

இந்திய அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த சூழலில் கபில் தேவ் களத்திற்கு வந்தார். இங்கிலாந்து மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானவை. அன்றைய தினம் சூழல் பேட்ஸ்மேன்களுக்கு மோசமானதாக அமைந்திருந்தது. பனிபொழிவு மிகவும் அதிகமாக இருந்தது. இது பந்துவீச்சாளர்களுக்கு மேலும் வலு சேர்த்தது. அப்போது நாங்கள் 70 முதல் 80 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடுவோம் என நினைத்து இருந்தோம். ஆனால் இந்த சூழலில் களமிறங்கிய கபில் தேவ் மிகவும் நிதானமாக விளையாடினார், 80 ரன்கள் வரை எந்தவொரு தேவையில்லாத ஷார்ட்களையும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை. 80 ரன்களை கடந்த பின் ருத்ரதாண்டவம் ஆடினார் கபில் தேவ். ஆமாம் அந்த போட்டியில் 135 பந்துகளுக்கு 175 ரன்கள் அடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சேர்த்தார். 175 ரன்களில் 16 பவுண்டரிகள், 6 சிக்ஸ்ர்கள் அடக்கம். இந்த ஆட்டத்தை நேரில் பார்த்ததால்தான் சுனில் கவாஸ்கர் கபில் தேவை இப்போதும் பல கோடி கொடுத்து  ஏலம் எடுப்பார்கள் என கூறினார். ஆமாம் அந்த ஆட்டம் இந்திய கிரிக்கெட் வரலாற்றைய தலைகீழாக மாற்றியது. மறுமுனையில் விளையாடியவர்கள் பல ஆண்டுக்கு ஒரு முறைதான் பேட்டை தொட்டுப்பார்ப்பவர்கள், இந்த சூழலிலும் அசராமல் ஒத்தைக்கு ஒத்தை வாடா என ஒன் மேன் ஆர்மியாக நின்று ஆடினார். கபில் தேவ் அடித்த ஒரே சதம் அதுதான். ஆனால் ஒரு அணித்தலைவன் சதங்கள் அடிப்பது முக்கியமில்லை அதை எந்த நேரத்தில் அடிக்கிறான் என்பது முக்கியம். இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது அது. இந்திய கிரிக்கெட்டின் போக்கையே மாற்றியதாக இருந்தது அந்த சதம். 

 

அவருடைய இந்த போக்குதான் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை முதன்முதலில் நமக்குப் பெற்று தந்தது. அரையிறுதியில் ஜிம்பாபேவை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இந்திய அணி எதிர்கொண்டது மேற்கிந்திய தீவுகளை. அன்றைய சூழலில் அந்த அணி ஏற்கனவே இரண்டு முறை உலகக்கோப்பையை வென்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற காத்துக்கொண்டிருந்தது. இறுதிப்போட்டியில் இந்திய அணி 183 ரன்கள் எடுத்து ஆல் ஆவுட் ஆனது. இந்த ரன் விவியன் ரிச்சட்ஸ்கே பத்தாது என அந்த அணியினர் பிராவோ பாணியில் பார்ட்டி பண்ண தயாராகிவிட்டனர். அந்த சமயத்தில் கபில் தேவ் இந்திய வீரர்களிடம் பேசியது, வெறுத்துப்போய் பிளைட் ஏற காத்திருந்த வீரர்களை இந்தியர்கள் மனதில் இன்றும் நீங்கா இடம்பிடிக்கச் செய்தது. பேசியது பேலவே களத்திலும் செய்துகாட்டினார். விவின் ரிச்சட்ஸ் அடித்த பந்தை பின்னோக்கி ஓடிப்போய் பிடித்தது மட்டுமல்ல உலக்கோப்பையையும், இந்தியர்களின் மனங்களையும் கூடத்தான். அந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டின் திசையையே தலைகீழாக மாற்றியது. 

கபில் தேவிற்கு முன்னர் இந்திய அணியில் ஒருவர் பேட்ஸ்மேன் என்றால் அவர் அந்த வேலையை மட்டும்தான் செய்வார், பவுலர் என்றால் பந்து வீசுவது மட்டுமே தன்னுடைய வேலை என்ற மனநிலை உச்சத்தில் இருந்தது. இதை மாற்றியதும் கபில்தேவ்தான். ஆம். கபில்தேவ்தான் இந்தியாவின் முதல் அங்கீகரிக்கப்பட்ட ஆல் ரவுண்டர். அப்போதைய பேட்ஸ்மேன்கள் இப்படி வரும் பந்தை இப்படித்தான் எதிர்கொள்ள வேண்டும் என காப்பி புக் ஷாட்ஸ் ஆடக் கூடியவர்கள். இந்த நிலைமையை முற்றிலும் மாற்றிக் காட்டினார். சிக்ஸர் அடிப்பது என்பது பல வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி பூப்பது போல் எப்போதாவது நிகழும் அதிசியமாகவே இருந்தது. ஆனால் கபில் தேவ் வந்தாலே வெளுத்து வாங்குவான் என ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்தார்கள். 

இந்திய பந்துவீச்சாளர்களாலும் பந்தை நேர்த்தியாக ஸ்விங் செய்ய முடியும் என்று உலகிற்கு உரக்க சொன்னவர் கபில். பந்துவீச்சின் ஃபார்முலா அத்தனையும் அறிந்தவர் என்றாலும் யாரேனும் பந்து வீச்சில் புதிய முறையை கொண்டு  வந்தால் அந்த பந்துவீச்சாளர்களிடம் அதுபற்றிக் கேட்டு தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டக்கூடியவராக இருந்தார் கபில் தேவ். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தன்னை மதிக்காத வாரியம், பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் என அனைத்தையும் புன்சிரிப்போடு எதிர்கொண்டவர்.

 

1992-ஆம் ஆண்டு முகமது அசாருதீன் தலைமையின் கீழ் அவர் கடைசி உலகக்கோப்பையை விளையாடினார். ஒரு மூத்த பந்துவீச்சாளராக அவர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் மனோஜ் பிரபாகர் ஆகிய புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தினார். 1994-ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி  ஆகியவை கடைசி போட்டியாக அவருக்கு இருந்தது. இதுவரை  131 டெஸ்ட் போட்டிகளில் 8  சதம் உட்பட  5248 ரன்கள், 434 விக்கெட்கள், 64 கேட்ச்கள் எடுத்துள்ளார். 225 ஒருநாள் போட்டிகளில் 3783 ரன்கள், 253 விக்கெட்கள், அதிகபட்சமாக 175* ரன்கள் எடுத்துள்ளார். 34 டெஸ்ட்  போட்டிகளில்  இந்திய  அணியின் கேப்டனாக  இருந்து  4 வெற்றி, 7 தோல்வி, 22 ட்ரா என அணியை வழிநடத்தியுள்ளார். 74 ஒருநாள் போட்டிகளில் 39 வெற்றி, 33 தோல்வி, 2 ட்ரா என அணிக்கு சிறந்த கேப்டனாக வழி நடத்தினார். 

 

இந்திய அணியின் பயிற்சியாளராக  1999-ஆம்  ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆனால் எதிர்பார்த்த  அளவில் இந்திய அணி  சிறப்பாக  செயல்படாமல்  போனதால் தனது பயிற்சியாளர்  பதவியை  ராஜினாமா செய்தார். 2013 ஆம் ஆண்டில் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். அதே ஆண்டில் என்.டி.டி.வி  வெளியிட்ட உலகளவில்   வாழும் 25 லெஜெண்ட்கள்  பட்டியலில்  இடம்பெற்று இருந்தார். 

இந்திய மக்கள் கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதுபவர்கள், கிரிக்கெட் ஒரு மதம் என்றால் அதன் மூலமுதல் கபில் தேவ்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

"அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குத் தான் பொது சின்னம் ஒதுக்க முடியும்; விதிகளை மீறி நாங்கள் செயல்பட முடியாது!" - தேர்தல் ஆணையம்

47 minutes ago

அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

47 minutes ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் உள்ள அதிமுக முன்னாள் பிரமுகர் பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி சம்மன்!

3 hours ago

நாடாளுமன்றத் தேர்தலில் இன்றுடன் நிறைவடைகிறது வேட்பு மனு தாக்கல்; இதுவரை 604 பேர் வேட்பு மனு தாக்கல்.

4 hours ago

மம்தா கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அந்தமான் செல்கிறார் கமல்ஹாசன்!

4 hours ago

ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணிற்கு அரசு வேலை, வீடு வழங்க வேண்டும்; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

4 hours ago

பெண்களை கொச்சைப்படுத்தி பேசும் வக்கிரமான செயல்களுக்கு நடிகர் சங்கம் கண்டனம்!

23 hours ago

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது!” - தேர்தல் ஆணையம்

23 hours ago

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

1 day ago

நடிகை நயன்தாரா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ராதாரவிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

1 day ago

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் எதிரொலியாக திமுகவில் இருந்து நடிகர் ராதாரவி தற்காலிக நீக்கம்!

1 day ago

பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே காவல்காரர்; கோவை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கடும் தாக்கு.

1 day ago

சரத்குமாருடன் துணை முதல்வர் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு; அதிமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டதாக தகவல்.

1 day ago

நீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரஸ் கட்சி!

1 day ago

விதிகளை மீறி வெடி வெடித்தல், கூட்டம் கூட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால், விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் ஜோதிமணி மீது வழக்குப்பதிவு!

2 days ago

“பாஜகவிற்கு தமிழகத்திலும் ஆதரவு இருக்கிறது என நம்புகிறேன்!” - தமிழிசை சவுந்தரராஜன்

2 days ago

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.

2 days ago

மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது; பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் புதிய சர்ச்சை.

2 days ago

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ

2 days ago

எதிர்க்கட்சிகளின் கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி : முதல்வர் பழனிசாமி

3 days ago

இரவோடு இரவாக வெளியானது தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்; தேனியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து களம் இறங்குகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

3 days ago

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த விடமாட்டோம் : முதல்வர் பழனிசாமி

3 days ago

இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா; முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்.

3 days ago

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

3 days ago

“தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல் இது!” - முதல்வர் பழனிசாமி

3 days ago

அதிமுக வேட்பாளர்கள் இன்று நண்பகல் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல்!

4 days ago

ஈராக்கில், படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!

4 days ago

கர்நாடகா அடுக்குமாடி கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு; இடிபாடுகளில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரம்.

4 days ago

184 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா; வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி.

4 days ago

சேலம் அருகே தறி தொழிலாளியின் 10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

4 days ago

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

4 days ago

“இந்தியாவின் சூப்பர் ஸ்டார், பிரதமர் மோடி!” - அமைச்சர் செல்லூர் ராஜூ

5 days ago

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

5 days ago

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ், இன்று காலை மாரடைப்பால் மரணம்!

5 days ago

ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைக்கு செல்வது உறுதி: மு.க.ஸ்டாலின்

5 days ago

பானை சின்னத்தில் போட்டியிடுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

5 days ago

ப்ரியங்கா காந்தி மாலையிட்டதால் தீட்டானதா லால் பகதூர் சாஸ்திரி சிலை; கங்கை நீரை ஊற்றி பாஜகவினர் கழுவியதால் சர்ச்சை.

5 days ago

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; கலர் பொடிகளை வீசி, மேளதாளங்கள் முழங்க கொண்டாடிய மக்கள்.

5 days ago

ரூ.11 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி கைது..!

5 days ago

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்!

5 days ago

கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி...!

5 days ago

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை மிகவும் வெட்கக்கேடானது: மு.க.ஸ்டாலின்

5 days ago

“இந்தியாவில் உள்ள கூட்டணிகளிலேயே தலை சிறந்தது அதிமுக கூட்டணி!” - முதல்வர் பழனிசாமி

5 days ago

மதுரை அலங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; தேனி தொகுதி வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத்குமாருடன் வாக்கு சேகரிப்பு!

6 days ago

இலவச திட்டங்களை எப்படி செயல்படுத்த போகிறீர்கள்?; தேர்தல் அறிக்கையில் விளக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.

6 days ago

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம்.

6 days ago

இன்று ஒரே நாளில் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் வெளியாகிறது

1 week ago

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல்

1 week ago

கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்தியதற்கு மநீம-வில் கடும் எதிர்ப்பு

1 week ago

தீபா பேரவையுடன் தாம் கூட்டணி அமைப்பதாக கூறுவது பொய்யான தகவல்: டி.ராஜேந்தர்

1 week ago

மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து கோவாவின் புதிய முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்

1 week ago

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் விலகல்!

1 week ago

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு..!

1 week ago

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் ஏ.கே.பி.சின்ராஜ்!

1 week ago

“வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறுவதால் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்!”- சத்யபிரதா சாஹூ

1 week ago

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; கள்ளக்குறிச்சி - சுதீஷ், விருதுநகர் - அழகர்சாமி, வடசென்னை - மோகன்ராஜ், திருச்சி - டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு!

1 week ago

“ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார்!” - வைகோ

1 week ago

சென்னை அண்ணா நகர் இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி!

1 week ago

“நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக மநீம சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும்!”

1 week ago

“தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும்; நான்கும் நமதே நாளையும் நமதே என்ற ரீதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்!” - பிரேமலதா விஜயகாந்த்

1 week ago

நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

1 week ago

தேர்தல் பிரச்சாரம், செலவீனம் உள்ளிட்டவற்றை கவனிக்க, 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்தது திமுக!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு சிறையில் அடைப்பு!

1 week ago

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

1 week ago

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக தகவல்!

1 week ago

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

1 week ago

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்படுகிறார்; பிரதமர் மோடி தலைமையிலான குழு தீவிர ஆலோசனை.

1 week ago

PSLV ராக்கெட் மூலம், 30 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது; ஏப்ரல் ஒன்றாம் தேதி, ஏவ இஸ்ரோ திட்டம்.

1 week ago

கோவா முதல்வரின் உயிரைப் பறித்த புற்றுநோய்; இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.

1 week ago

இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5ஆக பதிவு!

1 week ago

திருப்பதி திருமலையில் தமிழகத்தை சேர்ந்த மகாவீரா- கௌசல்யா தம்பதியினரின் 3 மாத கைக்குழந்தை கடத்தல்; போலீசார் தீவிர விசாரணை!

1 week ago

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

1 week ago

தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை.

1 week ago

திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்!

1 week ago

அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் தீர்ந்தது சிக்கல்; இன்று காலை வெளியாகிறது பட்டியல்.

1 week ago

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

ஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடக்கம்; டிக்கெட் வாங்குவதற்காக விடிய விடிய காத்துக்கிடந்த ரசிகர்கள்.

1 week ago

தேர்தல் விழிப்புணர்வு குறித்த பிரசாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்; பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றார்.

1 week ago

திமுகவிலிருந்து அதிமுக கூட்டணிக்கு தாவிய என்.ஆர்.தனபாலன்!

1 week ago

திருவள்ளுர், கிருஷ்ணகிரி, ஆரணி, திருச்சி, தேனி, விருதுநகர், புதுச்சேரி, கரூர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது!

1 week ago

“நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொள்வார்; ஆனால் பேசமாட்டார்!” - எல்.கே.சுதீஷ்

1 week ago

"இருநாடுகளுக்கு இடையே நிலவும் அசாதாரண சூழலுக்கு தேர்தலே காரணம்!" - இம்ரான் கான்

1 week ago

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு பிசிசிஐ விதித்திருந்த வாழ்நாள் தடை உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திருநாவுக்கரசை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்!

1 week ago

ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில், இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல்.

1 week ago

ஹாலிவுட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட Avengers End game திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!

1 week ago

மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 6 பேர் பலி!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக புகாரளிக்க விரும்புவோர் ஆதாரங்களை வழங்கலாம் என சிபிசிஐடி அறிவிப்பு!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்:கனிமொழி எம்.பி

1 week ago

“18 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்!” - கமல்ஹாசன்

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் சிபிஐ க்கு மாற்றி தமிழகஅரசு உத்தரவு!

1 week ago

பொள்ளாச்சி விவகாரத்தை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்குமாறு பெண் வழக்கறிஞர்கள் செய்த முறையீட்டை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

1 week ago

சற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ராமதாஸ்; 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சந்திக்கவுள்ளார் ராமதாஸ்.

1 week ago

மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்; 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு.

1 week ago

திண்டுக்கல் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் பிரதான குழாய் உடைப்பு; தண்ணீர், வீணாக சாக்கடையில் கலந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.

1 week ago

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்; 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

1 week ago

இந்திய அணிக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

1 week ago

நாடாளுமன்ற தேர்தல் அதிமுக - தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!

1 week ago

“வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்!” - ராகுல் காந்தி

1 week ago

‘சார்’ என அழைக்க வேண்டாம் என மாணவிகளிடம் கோரிக்கை விடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை