முகப்பு > அரசியல்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

December 29, 2016

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!


சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் இன்று நிறைவேற்றப்பட்ட முக்கிய  தீர்மானங்களின் விபரங்கள். 

1) மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்களை நினைவில் கொண்டு வி.கே. சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்பது.

2) அஇஅதிமுகவை காப்பாற்றவும், வழி நடத்தவும், கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை நியமிப்பதற்கு பொதுக் குழு ஒப்புதல் அளிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3) அதிமுக சட்டதிட்ட விதி 20 பிரிவு 2ல் கூறப்பட்டுள்ளப்படி கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படும்வரை வி.கே.சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4) மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவித்து நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு வெண்கலச் சிலை அமைக்க வேண்டும்.

5) சமூக நீதிகாத்த வீராங்கணையாக திகழ்ந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6) மறைந்த முதல்வர் ஜெயலலிதா மனித சமுதாயத்திற்கு நிகழ்த்திய சேவைகளை பாராட்டி அமைதிக்கான நோபல் பரிசு, ரமோன் மகசேசே விருது வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்