முகப்பு > விளையாட்டு

​சென்னை ஓபன் மூலம் சொந்த மண்ணில் விளையாடுவது பெருமையளிக்கிறது: லியாண்டர் பயஸ்

January 03, 2017

​சென்னை ஓபன் மூலம் சொந்த மண்ணில் விளையாடுவது பெருமையளிக்கிறது:  லியாண்டர் பயஸ்


சென்னை ஏர்செல் ஓபன் டென்னிஸ் போட்டி மூலம் சொந்த மண்ணில் விளையாடுவது பெருமையளிப்பதாக இந்திய வீரர் லியாண்டர் பயஸ்  தெரிவித்துள்ளார். 

சென்னையில் 20-ஆவது முறையாக நடைபெறும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இதன் இரட்டையர் பிரிவில் பங்கேற்க இந்திய முன்னணி வீரர் லியாண்டர் சென்னை வந்துள்ளார்.

சென்னை லயோலோ கல்லூரியில் மாணவர்களிடம் மத்தியில் உரையாற்றிய இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், வர்தா புயலால் சென்னை பல்வேறு பாதிப்புகளை சந்தித்தாலும், ஆனால் மக்களுக்கு டென்னிஸ் மீதான ஆர்வம் குறையவில்லை என குறிப்பிட்டார். 

மேலும் சென்னையில் நடைபெற்றுவரும் ஏர்செல் ஒபன் டென்னில் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இப்போட்டியில் திறமையாக விளையாடி கோப்பை கைப்பற்ற முயல்வேன் எனவும் குறிப்பிட்டார். 

கொல்கத்தாவில் பிறந்த லியாண்டர், தனது டென்னிஸ் வாழ்க்கையை சென்னையில் தான் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories : விளையாட்டு : விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்