முகப்பு > தொழில்நுட்பம்

தகவல்கள் வெளியாவதை தடுக்க பயன்பாட்டை நிறுத்திவைத்தது Paytm நிறுவனம்

November 25, 2016

தகவல்கள் வெளியாவதை தடுக்க  பயன்பாட்டை நிறுத்திவைத்தது Paytm நிறுவனம்


Paytm நிறுவனம் வர்த்தகர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கிய app பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

ஸ்வைப் மிஷின் இன்றி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வர்த்தகர்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக Paytm நிறுவனம் POS எனும் app ஒன்றை உருவாக்கியிருந்தது. இந்த தொழில்நுட்ப வசதியை அந்நிறுவனம் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில், அந்த சேவை தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

App பயன்பாட்டாளர்களின் வங்கித் தகவல்கள் ரகசியம் காக்கப்படுவதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கும் நோக்கோடு, இந்த சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த App-ல் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்ட பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று Paytm நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த App மூலம் இம்மாத இறுதிக்குள் 1 கோடியே 50 லட்சம் வணிகர்கள் வர்த்தகப் பரிவர்த்தனை மேற்கொள்ள வைப்பதே இலக்கு என Paytm நிறுவனம் 
தெரிவித்திருந்தது. 

Categories : தொழில்நுட்பம் : தொழில்நுட்பம்

தொடர்புடைய செய்திகள்

Enter your News7 Tamil username.
Enter the password that accompanies your username.

Add new comment

தலைப்புச் செய்திகள்