முகப்பு > தொழில்நுட்பம்

இளம் பெண்களை கவர பிரத்தியேக ஸ்மார்ட் போன் அறிமுகம்

March 04, 2016

இளம் பெண்களை கவர பிரத்தியேக ஸ்மார்ட் போன் அறிமுகம்


மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைப் பார்த்த கிறிஸ்டினா மற்றும் லிண்டா ஆகிய பெண்கள் தொடங்கிய  Dtoor என்ற நிறுவனம் தற்போது பெண்களுக்கான பிரத்தியேகமான ஸ்மார்ட் போன் ஒன்றை தயாரித்துள்ளது.

பெண்களுக்கு சிறிய பாக்கெட் கொண்ட உடைகளே வடிவமைக்கப்படுவதால் அதில் பொருந்தக் கூடிய அளவிற்கு சிறிய ஸ்மார்ட் போனை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Cyrcle ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன் பெண்கள் உபயோகிக்கும் காம்பேக்ட் பவுடர் போல் வடிவம் கொண்டுள்ளது. இந்த போன் சீட் ரீபோன் கிட் என்கின்ற DIY மாதிரியை கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் LED விளக்குகள், டச் ஸ்கீரின், ஜிபிஎஸ் மற்றும் என்.ஃப்.சி என்று சொல்லப்படும் எளிதில் பணம் செலுத்தும் அம்சங்கள் இருக்கின்றன.

செவ்வக வடிவிலான ஸ்மார்ட் போன்கள் பெண்களுக்கு கவர்ச்சிகரமாக இல்லை என்பதாலும், உளவியல் ரீதியாக பெண்களுக்கு செவ்வக வடிவத்தை விட வட்டம் தான் பிடிக்கும் என்பதாலும் இது தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் போன்னானது பெண்கள் பாக்கெட்டில் அழகாக பொருந்தும் வகையிலும் இருக்கும் என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.

கடந்த வருடமே, கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு நிறுவனம் வட்ட வடிவிலானா ஒரு சாதனத்தை உருவாக்கியது. ஆனால் அதில் ஸ்மார்ட் வாட்ச் போன்ற சேவைகள் மட்டுமே இருந்தது. இந்த ஸ்மார்ட் வாட்ச் பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த வட்ட வடிவ ஸ்மார்ட்போனும் அதிக வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்