முகப்பு > விளையாட்டு

சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயின் வீரர் பாடிஸ்டா!

January 08, 2017

சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயின் வீரர் பாடிஸ்டா!


சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர் பாடிஸ்டா வென்றுள்ளார். 

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின்   ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாடிஸ்டாவும், ரஷ்ய வீரர் டேனில் மெத்வடேவும் மோதினர்.  

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய பாடிஸ்டா தனது அனுபவம் மிகுந்த ஆட்டத்தால் 20 வயதே ஆன இளம் வீரர் மெத்வடேவை திணறடித்தார். இதனால்  6-3, 6-4 என்ற கணக்கில் மெத்வடேவை வீழ்த்தி, பாடிஸ்டா வெற்றி பெற்றார். 

இந்த வெற்றி மூலம் சென்னை ஓபன் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற பாடிஸ்டா,  நடப்பு சீசனில் முதல் ஏடிபி சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். 

Categories : விளையாட்டு : விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்