Skip to main content

சமூக வளர்ச்சியின் சுல்தான்!

November 19, 2018
Image

செந்தில் பாலன்

கட்டுரையாளர்

Image

கிபி 1970 - பாலைவனத்தில் போதுமான குடிநீர் வசதி கிடையாது. மொத்த நாட்டிலுமே ஆறு கிலோமீட்டர் தான் சாலை வசதி உள்ள பகுதி. மின்சாரம் கிடையாது. ஒரே ஒரு சிறிய மருத்துவமனை தான் மொத்த தேசத்திற்கும். மூன்று பள்ளிகளைத் தவிர கல்விநிலையங்களோ கல்லூரிகளோ இல்லாத நாடு. வறுமையின் கோரப்பிடியில் மக்கள். உள்நாட்டு கலவரம் வேறு. இறப்பு விகிதம் மிக அதிகம். படிப்பறிவு குறைவு. சொந்தமாக கரன்சி கூட இல்லாத நாடு.
 

இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் தான் ஒமான் தேச சுல்தானாக பதவியேற்றார் மாண்பிற்குரிய சுல்தான் காபூஸ் பின் சையது. ஒமான் - ஓமன் என தமிழில் உச்சரிக்கப்படும் நாட்டின் சரியான உச்சரிப்பு ஒமான். ஓமன் / ஒமான் என்றால் கூட பலருக்கும் தெரியாது. ஆனால் மஸ்கட் என்றால் அனைவருக்கும் தெரியும். ஒமான் தேசத்தின் தலைநகர் தான் மஸ்கட். 

அரேபிய வளைகுடா பகுதியின் தெற்கு ஓரமாக அரபிக்கடல் கரையோரம் இருக்கும் அமைதியான அழகான வளமான நாடு. இன்று உலகத்தின் வளர்ச்சியடைந்த தேசங்களுள் ஒன்று. மிக அதிக மனிதவள குறியீடு கொண்ட நாடு (Very High Human Development Index). அமைதியும் வளர்ச்சியும் அதன் அடையாளங்கள். 
1970ல் இருந்த நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட வளர்ச்சியடைந்த நிலையை 50 வருடங்களுக்கும் குறைவான காலத்தில் ஒமான் அடைய ஒரே காரணம் ஆளுமைத் திறன் மிக்க தலைவர் - சுல்தான் காபூஸ்.


சுல்தான் பதவி ஏற்ற காலத்தில் அவர் முன் இருந்த சவால்கள் கடுமையானவை, சிக்கலானவை. 
பசி, பட்டினி, பஞ்சம், வறுமை நிலவிய தேசம், அந்நிய மற்றும் உள்நாட்டு கலவரங்கள், எதிர்ப்புகள்
பல்வேறு இனக்குழுக்களிடம் ஏற்படும் உள்நாட்டு பகைமைகள், ஒற்றுமையின்மை
கல்வியின்மை, அறியாமை, மருத்துவ வசதியின்மை, அடிமை முறை, பிற்போக்கு மூடநம்பிக்கைகள்
 இவை அனைத்தையும் மீறி தேசத்தை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு சுல்தானுக்கு இருந்தது.
 அண்டை தேசங்களை விட ஒப்பீட்டளவில் மிகக்குறைவான எண்ணெய் வளம் கொண்ட நாடு ஒமான். ஆடம்பர செலவுகளை தவிர்த்து அனைத்து வருமானமும் தேசத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது.

மக்களே தேசத்தின் சொத்து என்பதில் நம்பிக்கை கொண்ட சுல்தான் அனைத்து மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை வகுத்தார். கல்வி, சுகாதாரம் முதல் அனைத்து துறைக்கும் தனித்தனி அமைச்சகங்களை அமைத்தார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதுவரை நிலவி வந்த அடிமை முறையை அறவே ஒழித்தார். அரசியல் எதிரிகளுக்கும், கலகம் செய்தவர்களுக்கும் கூட மன்னிப்பு வழங்கப்பட்டது. அனைத்து இன மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் அமைச்சகங்களில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 

இதன் மூலம் உள்நாட்டு பகைமைகள் ஒழிக்கப்பட்டது. வலிமைமிக்க முப்படைகள் கொண்ட இராணுவம் அமைக்கப்பட்டது. அந்நிய தலையீடுகள் தடுக்கப்பட்டன. நாடெங்கும் சாலைகள் அமைக்கப்பட்டன. புதிய துறைமுகங்கள், விமானநிலையங்கள் அமைக்கப்பட்டன. ஒமான் ஏர் எனப்படும் விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. புதிதாக அரசு மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டன. நாடெங்கும் மின்சார வழித்தடங்கள் அமைக்கப்பட்டன. மலை, பாலைவனங்கள் என கடுமையான நிலப்பரப்பு உடைய தேசமானாலும் மின்வசதி, சாலைவசதி இல்லாத இடமே இல்லை எனும் நிலை உருவானது. 

வலிமைமிக்க கரன்சியான ஒமானி ரியால் உருவாக்கப்பட்டது. புதிய நீராதாரங்கள் உருவாக்கப்பட்டன. கடல்நீரை குடிநீராக்கும் மையங்கள் மூலம் குடிநீர் பஞ்சம் நீங்கியது. தொடர்ச்சியான விவசாய ஆராய்ச்சிகளின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் முயற்சியில் வெற்றியின் அருகில் உள்ளனர். தொலைத்தொடர்பு, மென்பொருள், தகவல் தொழில்நுட்பத்துறையிலும் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அரபு தேசங்களிலேயே புது முயற்சியாக "மஜ்லிஸ் அஸ்சுரா" எனும்  மக்கள் பிரதிநித்துவ சபை ஏற்படுத்தப்பட்டது. சட்ட வரைவுகளை உருவாக்குவதிலும் நிர்வாகத்திலும் மக்களின் பங்களிப்பு ஏற்பட வழிவகை செய்யப்பட்டது. இது போன்ற பல மாற்றங்கள் தேசத்தையே மாற்றி அமைத்தன. 

48 வருடங்களுக்கு முன்பு மூன்றே மூன்று பள்ளிகள் இருந்த தேசத்தில் இன்று 1500க்கும் மேற்பட்ட பள்ளிகள். அனைவருக்கும் கல்வி வசதி. கிட்டத்தட்ட 100% ஆரம்பக்கல்வி. 15,000 பேர் படிக்கும் மிகப்பெரிய பல்கலைக்கழகம். பல்வேறு கல்லூரிகள். மாணவர்கள் அரசின் உதவியோடு வெளிநாட்டிற்கு சென்று படிக்க வசதி. இதன் மூலம் நாட்டின் கல்வியறிவு பெருமளவு உயர்ந்துள்ளது. 1970ல் ஒரே ஒரு மருத்துவமனை இருந்த தேசத்தில் இன்று கிட்டத்தட்ட எழுபது பெரிய மருத்துவமனைகள், ஆயிரம் சிறு கிளினிக்கள்.
 ‎1970ல்  49 ஆண்டுகளாக இருந்தத சராசரி ஆயுட்காலம் இன்று 77 ஆண்டுகளுக்கும் மேல்.
 ‎
சிசு இறப்பு விகிதம் (infant mortality rate) எனப்படும் பிறப்பின் போது ஏற்படும் குழந்தை இறப்புகள் 1000 குழந்தைக்கு 118 என இருந்தது. இப்போது 1000 குழந்தைகளுக்கு 9 ஆக குறைந்துள்ளது. கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடியாத வளர்ச்சி இது. மகப்பேறின் போது ஏற்படும் தாய் இறப்பு விகிதமும் (maternal mortality rate) மிக மிக குறைவு  (17/100000 live birth). தடுப்பூசிகளின் மூலமும் சுகாதார வசதிகளின் மூலமும்  தொற்றும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ட்ரகோமா எனும் பரவும் நோயை  ஒழித்த முதல் நாடாக ஒமான் உள்ளது. பொது மருத்துவத்துறையில் ஒமானின் வளர்ச்சி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இணையானதாக உள்ளது. 

வருடாவருடம் உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து பாராட்டு பெறும் நாடாக உள்ளது. இவை அனைத்தையும் 48 வருடங்களில் சாத்தியப்படுத்தியது செயற்கரிய செயல்.
 ‎தொடர்ச்சியான பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலம் அனைத்து மக்களின் சமூக பொருளாதார நிலை உயர்த்தப்பட்டது. அனைவருக்கும் கல்வி, குடிநீர், மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்து நலத்திட்டங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டது. பாரபட்சமின்றி அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரம் உயரப் பாடுபட்டார் சுல்தான். அதில் வெற்றி பெற்றார். இன்றும் அதே முன்னேற்ற முயற்சிகள் தொடர்கின்றன. எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திராமல் கப்பல், விமானப் போக்குவரத்து, சுற்றுலா, மீன்பிடித் தொழில் என புதிய பாதையில் சுல்தான் தலைமையில் பீடுநடை போடுகிறது ஒமான். மேலும் அமைதியே வளத்திற்கு அடிப்படை என்பதை நிரூபிக்கும் தேசமாகவும் உள்ளது. 

வலிமைமிக்க இராணுவத்தை கொண்ட தேசமாயினும் இதுவரை எந்தப் போரிலும் ஈடுபடாமல் பிராந்தியத்தில் அமைதி நிலவ உழைக்கும் முக்கிய தேசமாக விளங்குகிறது. உலக அளவில், பயணம் செய்பவர்களுக்கு நான்காவது பாதுகாப்பான நாடாகவும் குற்றவிகிதம் குறைவான நாடாகவும் விளங்குகிறது. வளைகுடா போர்களிலும் தற்போதைய ஏமன் போரிலும் பாதிக்கப்பட்டோருக்கு உணவு மருத்துவ உதவி செய்பவர்களாக ஒமானிகள் உள்ளனரே தவிர போர்களில் ஈடுபடுவதில்லை. கேரள வெள்ளத்தின் போதும் விமானம் நிறைய நிவாரணப் பொருட்களை அனுப்பி மனிதத் தன்மையை நிரூபித்தனர் தலைவனைப் போன்ற மக்கள். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை யுனெஸ்கோ நிறுவனத்தின் மூலம் உலக அளவில் சிறந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பாளர்களுக்கு விருதும் வழங்குகிறார் சுல்தான்.

சுல்தான் காபூஸ் இந்தியாவில் கல்வி பயின்றவர். அவரது ஆசிரியர் முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா. இதனால் இந்தியர்களின் மீதும் இந்தியாவின் மீதும் பாசம் கொண்டவர் சுல்தான் என்பது மகிழ்விற்குரிய கூடுதல் செய்தி. ஒரு சுயநலமற்ற தலைவரின் தொலைநோக்குப் பார்வை எப்படி நாட்டை மாற்றும் என்பதற்கு ஒமான் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அன்பும் ஆளுமைத்திறனும் உடைய சுல்தான்  பல்லாண்டுகள் வாழவேண்டும்,  அமைதிக்கான நோபல் பரிசு முதல் பல பரிசுகளைப் பெற வேண்டும் என்பதே 48 ஆவது ஒமான் தேசிய தின கொண்டாட்டத்தில் இருக்கும் ஒமான்வாழ் இந்தியர்களின் ஆசை.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு!

22 hours ago

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கே.டி.ராமாராவ், சிர்சிலா தொகுதியில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

1 day ago

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

1 day ago

தெலங்கானாவில் டிஆர்எஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது!

1 day ago

மத்தியபிரதேசம் புத்னி தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவராஜ் சிங் சௌகான் முன்னிலை வகித்துவருகிறார்.

1 day ago

ராஜஸ்தானின் ஜல்ரபதன் தொகுதியில் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா முன்னிலை வகித்துவருகிறார்.

1 day ago

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது!

1 day ago

அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கும் அக்னி 5 ஏவுகணை; வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா.

1 day ago

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து குடியரசுத் தலைவரிடம் புகாரளிப்போம் என மம்தா பானர்ஜி தகவல்.

1 day ago

5 மாநில சட்டபேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை; வெல்லப்போவது யார் என்பது மதியம் தெரியவரும்.

1 day ago

5000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகனை சோதனை வெற்றி

1 day ago

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது

1 day ago

தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியது எப்படி? மத்திய தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி

1 day ago

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடம் தேர்தல் செலவுதொகையை வசூலிக்க கோரிய மனு; தமிழக தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

1 day ago

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

1 day ago

"கனிமொழிக்கு 2018ம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது கிடைத்திருப்பதற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புமொழி!"- கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

1 day ago

2018ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

1 day ago

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

1 day ago

மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த வியூகம்; டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை.

1 day ago

வங்கிகளிடம் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த புகாரில் நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா?; இன்று தீர்ப்பை வெளியிடுகிறது லண்டன் நீதிமன்றம்.

1 day ago

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

2 days ago

ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யா, கோவையில் பறை இசைக்குழு நடத்திவரும் சக்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

2 days ago

டெல்லி புறப்பட்டுச் சென்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியா காந்தியுடன் விவாதிப்பேன் என பேட்டி.

2 days ago

பிரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் காலமானார்.

2 days ago

காவிரி மேலாண் ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டுமென தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

3 days ago

“தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக முடியும். சாதி ரீதியாக அணுக முடியாது; இயக்குநர் ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம்!” - தொல்.திருமாவளவன்

3 days ago

“தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கின்றன!” - சீமான்

3 days ago

"தமிழகத்தில் தாமரை மலர தலை கீழாக நடக்க தேவையில்லை, நேர்மையாக நடந்தால் போதும்!" - தமிழிசை சவுந்தரராஜன்

3 days ago

கேரளா வெள்ள நிவாரணத்திற்காக குறைந்த வட்டியில் ரூ. 744 கோடி கடன் தருவதாக ஜெர்மனி அரசு அறிவிப்பு!

3 days ago

சூடுபிடிக்கிறது ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை; சசிகலாவிடம் விசாரிக்க கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம்.

3 days ago

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிந்தது; தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பம் என தகவல்.

3 days ago

தஞ்சை பெரியகோயிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் யோகா மற்றும் தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

3 days ago

நாளை தொடங்க இருந்த அரசு மருத்துவர்கள் சங்க வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு.

4 days ago

தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான ஆய்வை தொடங்கியது கர்நாடக அரசு!

4 days ago

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம்!” - உச்சநீதிமன்றம்

4 days ago

பிரதமர் யார் என்பது பிரச்சனையல்ல; மோடியை பதவியில் இருந்து இறக்கவேண்டும் என்பதே முக்கியம்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா

4 days ago

தனியார் தொலைக்காட்சியில் நிர்வாகம் குறித்து தவறாக பேட்டி அளித்ததால், அண்ணா பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலுவின் பதவி பறிப்பு.

4 days ago

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல் மக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரில் வைக்கப்பட்டது; இன்று பிற்பகல் இறுதிச் சடங்கு நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு.

4 days ago

சிலைக்கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

6 days ago

கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1401 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு

1 week ago

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்த FIR ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறிய பதிலை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி

1 week ago

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம்

1 week ago

கிரிக்கெட் வீரர் தோனிக்கு, மகள் ஸிவா நடனம் கற்றுக் கொடுக்கும் காட்சிகள்; சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ.

1 week ago

மூடியிருந்த ரயில்வே கேட்டை திறக்க சொல்லி ரயில்வே ஊழியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்ற அதிமுக எம்பி உதயகுமார்

1 week ago

அனைத்து பாடப் புத்தகங்களிலும் அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் - திருமா

1 week ago

ஜனவரி 1 முதல் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது; வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, சீனா பரஸ்பர ஒப்புதல்.

1 week ago

திருவண்ணாமலையில் சட்டவிரோத கருகலைப்பு மையம் நடத்திய பெண் கைது; ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்ததுடன், வீட்டுக்கும் சீலிட்டு போலீசார் நடவடிக்கை.

1 week ago

தமிழக ஆளுநர் அத்துமீறி செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு; 7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தல்.

1 week ago

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் சுனில் அரோரா.

1 week ago

“நாட்டிற்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநரும் ஒரு சாபக்கேடு!” - வைகோ

1 week ago

உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூட மத்திய அரசு முடிவு; நீலகிரி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி.

1 week ago

டிசம்பர் 4,5ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

1 week ago

கல்வியும், கலாச்சாரமும் மிக முக்கியமானவை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

1 week ago

தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது; இந்தியா டுடே இதழுக்கு நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி.

1 week ago

உலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பேரிடர்களில், கேரள வெள்ளம் மோசமானது; சர்வதேச வானிலை மையம் அறிவிப்பு.

1 week ago

வரும் ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை; தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தகவல்.

1 week ago

பொருளாதார குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளுக்கு, உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்; ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.

1 week ago

திருநெல்வேலி மாவட்டத்தில், 51 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ராமநதி ஜம்பு நதி திட்டம்; அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, 9 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தல்.

1 week ago

கஜா புயல் தாக்கி 15 நாட்களாகியும் மின்சார வசதி கிடைக்கவில்லை என புகார்; திருத்துறைப்பூண்டி அருகே பொதுமக்கள் சாலை மறியல்.

1 week ago

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

1 week ago

வரும் 4-ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு; வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்.

1 week ago

“வரும் 4ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்!” - ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்

1 week ago

தமிழகத்தில் 4ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

1 week ago

இமயமலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; நேபாள - இந்திய எல்லையில் 15 மீட்டர் அளவுக்கு மலை சரியும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

1 week ago

"நாட்டின் தலைநகரத்தில் தமிழர்களின் மானத்தை வாங்க சிலர் சென்றுள்ளது மன்னிக்க முடியாத குற்றம்"- பொன்.ராதாகிருஷ்ணன்

1 week ago

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்; உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி உறுதி.

1 week ago

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்; பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவி என சிறிசேனா அறிவிப்பு.

1 week ago

தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று முடிவு என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

1 week ago

பொன். மாணிக்கவேல் பதவியை ஒரு ஆண்டுக்கு நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

1 week ago

கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

1 week ago

“ஜாக்டோ-ஜியோ சங்கத்தின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை நடைபெறும்!”- ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்

1 week ago

மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான சிகிச்சை தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரித்து முதல்வர் பழனிசாமி அறிக்கை.

1 week ago

சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

1 week ago

“மேடைப் பாடகர்களிடம் ராயல்டி கேட்கும் இளையராஜா, படத்தை தயாரித்தவர்களுக்கு பங்கு தருவாரா?”- தயாரிப்பாளர் கே.ராஜன்

1 week ago

டெல்டா மாணவர்களின் மருத்துவ கனவை கேள்விக்குரியாக்கிய கஜா புயல்; தேர்வுக்கு தயாராக போதிய கட்டமைப்பு வசதிகள் இன்றி தவிப்பு.

1 week ago

பொன். மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்

1 week ago

“கஜா புயல் சீரமைப்பு பணிக்காக ராணுவ உதவியை தமிழக அரசு கேட்கவில்லை; எப்போது கேட்டாலும் ராணுவ உதவியை வழங்கத் தயார்!” - நிர்மலா சீதாராமன் பேட்டி

1 week ago

சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி.

1 week ago

சிலைக்கடத்தல் விசாரணையை சிபிஐக்கு மாற்றும் அரசாணைக்கு எதிரான வழக்கு; இன்று மதியம் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.

1 week ago

அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

1 week ago

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு வார கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்!

1 week ago

25 வயதுக்கு மேற்பட்டோரும் இனி நீட் தேர்வு எழுதலாம்.. நீட் தேர்வில் வயது வரம்பை தளர்த்தக்கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு!

1 week ago

இந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூரிய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

1 week ago

இந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூர்ய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

1 week ago

31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி c -43 ராக்கெட்!

1 week ago

கஜா புயல் சேதத்திற்காக 10 கோடி ரூபாய் நிதியுதவி; கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு.

1 week ago

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ரஜினியின் 2.0 திரைப்படம் வெளியீடு; திரையரங்குகளில் பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் உற்சாகம்.

1 week ago

திருவாரூர்- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு !

1 week ago

கஜா புயல் நிவாரண பொருட்களை ஏர் இந்தியா விமானங்களில் கொண்டு செல்ல கட்டணம் இல்லை : விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பாபு

1 week ago

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சையில் நாளையும், புதுக்கோட்டையில் நாளை மறுநாளும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்கிறார்

1 week ago

“தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

1 week ago

“ஸ்டெர்லைட் ஆலையை மூடி, பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிகளுக்கு எதிரானது!” -தருண் அகர்வால் தலைமையிலான குழு அளித்த ஆய்வறிக்கை

1 week ago

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கை மீது ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

1 week ago

கிழக்குதிசைக் காற்று வலுப்பெற்று வருவதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்!

1 week ago

மேகதாது அணை தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு!

1 week ago

சபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி.

1 week ago

கஜா மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

1 week ago

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர், துணை முதல்வர் நிவாரண உதவி வழங்கினர்.

1 week ago

மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டமன்ற தேர்தல்; காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

1 week ago

புயல் பாதித்த பகுதிகளில் 3 நாள் ஆய்வை நிறைவு செய்த மத்தியக் குழுவினர்; இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    74.63/Ltr (0.31 )
  • டீசல்
    70.38/Ltr (0.39 )
Image பிரபலமானவை