பீம் ஆப் பெயரில் மர்ம நபர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை! | BHIM requested users to be aware of spam messages | News7 Tamil

இன்றைய வானிலை

  • 25 °C / 77 °F

Breaking News

பீம் ஆப் பெயரில் மர்ம நபர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை!

January 4, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8071 Views

கடந்த வெள்ளி கிழமை (30-12-2016) அன்று பீம் (BHIM) என்ற ஸ்மார்ட் போன் செயலியை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்த செயலியை பயன்படுத்தி ஆன்லைனிலோ அல்லது இணையதள வசதி இல்லாமலோ வங்கி கணக்கிலிருந்து மற்ற வங்கி கணக்கிற்கோ அல்லது பிற கட்டணங்களை செலுத்துவதற்கோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த கட்டணங்களை செலுத்துவதற்கும், பண பரிவர்த்தனை செய்வதற்கும் வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களோ அல்லது பிற விவரங்களோ தேவையில்லை ஆனால் வாடிக்கையாளர்களின் மொபைல் எண் மட்டுமே போதுமானது ஆகும்.

ஆனால் இந்த ஸ்மார்ட் போன் செயலி இன்னும் முழுமையாக செயல்பட தொடங்கவில்லை ஆனால் அதற்குள் இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது மொபைல்களில் பதிவிறக்கம் செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த பீம் செயலியின் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு சில விஷமிகளிடமிருந்து கட்டண ரசீதிற்கான குறுஞ்செய்திகள் வந்ததாக புகார்கள் எழுந்துள்ளது. 

அதானால் பீம் ஆப் நிறுவனமானது அவர்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில், BHIM செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு யாருக்கும் எந்தவித கட்டணத்திற்கான குறுஞ்செய்திகளையும் அனுப்பவில்லை எனவும் அப்படி ஏதாவது குறுஞ்செய்திகள் வந்தால் அதனை நம்ப வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

கடந்த செவ்வாயன்று கூகுள் நிறுவனம், 'டேட்டாலி (Datally)'

குழந்தை பிறப்பிற்கு அடிப்படையான கருவுறுதலை தவிர்க்கவும், பாலியல்

2018ம் ஆண்டு முதல் அனைத்து வகையான மொபைல் போன்களிலும்

உலகில் முதன் முறையாக டிஜிட்டல் மாத்திரை ஒன்றினை

தற்போதைய செய்திகள் Dec 15
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)