இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Jallikattu Game

​உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சியில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்..!

January 1, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3959 Views

சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவை தேர்வு செய்வதாக, லக்னோவில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ராம் கோபால் யாதவ் அறிவித்தார். 

சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை, உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும், அவருடைய சித்தப்பா ராம் கோபால் யாதவும் லக்னோவில் இன்று நடத்தினர். 

இதில் உரையாற்றிய ராம்கோபால் யாதவ், முலாயம் சிங் பெயரைக் கூறி, கட்சியின் மாநில தலைவரான ஷிவ்பால் யாதவ், தவறான முடிவுகளை எடுத்து வருகிறார் என குற்றம்சாட்டினார். மேலும், இன்றைய தேசிய செயற்குழு கூட்டத்தில், அகிலேஷ் யாதவை கட்சியின் தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்வதாக அறிவித்தார். 

மேலும், அமர் சிங், ஷிவ்பால் யாதவ் ஆகிய இருவரையும் கட்சிப் பதவியில் இருந்து நீக்கவும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பரிந்துரைப்பதாக ராம் கோபால் யாதவ் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசுகையில், மாநில தலைவர் பதவியில் இருந்து சிவபால் சிங் யாதவை நீக்க வேண்டும் என்று முலாயம்சிங் யாதவ் தான் கூறினார், அதன்படி நான் நடவடிக்கை எடுத்து இருக்கிறேன், எனக்கும், தந்தைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுடானது கட்சியில் குழப்பம் விளைவிப்பவர்களால் தான் உருவானது என்றார்.

அகிலேஷ் கருத்து:

முலாயம் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் நலனுக்கு எதிராக சதி நடப்பதாகவும், இந்த தருணத்தில் கட்சியையும், தனது தந்தையையும் பாதுகாக்க எந்த முடிவையும் எடுக்க தயங்க மாட்டேன் என்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். லக்னோவில் நடைபெற்ற சமாஜ்வாதி தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய அகிலேஷ், தனக்கும், தந்தை முலாயம் சிங்கிற்கும் இடையிலான பந்தத்தை யாராலும் மாற்ற முடியாது என்றும் கூறினார். 

ராம்கோபால் யாதவை நீக்கிய முலாயம்:

தமது அனுமதியின்றி சமாஜ்வாதி கட்சியின்  செயற் குழு கூட்டத்தை கூட்டிய தனது சகோதரர் ராம்கோபால் யாதவை 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்கி முலாயம் சிங் யாதவ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

ராம்கோபால் யாதவ் செயற்குழு கூட்டத்தைக் கூட்டியது சட்டவிரோதமானது என்று கண்டனம் தெரிவித்துள்ள முலாயம் சிங் யாதவ், பாஜகவிற்கு ஆதரவாக ராம்கோபால் யாதவ் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.  

பாஜக அரசியல் லாபம் அடைவதற்காக தன்னை அவமதித்தவர் ராம்கோபால் யாதவ் என்றும் முலாயம்சிங் யாதவ் குற்றம்சாட்டினார். 

சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு உத்தரப் பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories: அரசியல்
Image
Image தொடர்புடைய செய்திகள்

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ்

வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

காங்கிரஸ் ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)