Skip to main content

2019 உலகக்கோப்பை தொடர் : இந்தியாவின் NO. 4 யார்? - ஒரு முக்கிய அலசல்

April 02, 2019
Image

தினேஷ் அகிரா

கட்டுரையாளர்

Image

2019 உலகக்கோப்பை தொடரில்  இந்திய அணியின்  நான்காம் நிலை வீரர் யார் என்ற குழப்பம் இன்றுவரை தீர்ந்தபாடில்லை.

 

உலகக்கோப்பை தொடரில் விராட் கோலியை நான்காம் ஆட்டக்காரராக களமிறக்கும் யோசனையும் இருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்தக் குறிப்பிட்ட நகர்வின் மூலமாக அணியில் தனக்கான தோதான இடமின்றித் தடுமாறி வரும் கே.எல்.ராகுலை அணிக்குள் கொண்டு வந்துவிடலாம் என்பது அணி நிர்வாகத்தின் திட்டம். ஆனால் அணியின் நலன் என்ற பெயரில், மூன்றாம் நிலையில் இறங்கி இதுவரை 34 சதங்களைக் குவித்த ஒரு ஜாம்பாவானை வேறொரு இடத்தில் ஆடவைப்பது அணிக்கு மட்டுமல்ல கோலியின் தனிப்பட்ட ஆட்டத்துக்கே ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது. இதே உத்தியைத் தான் 2015 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவும்  சாஸ்திரி தலைமையிலான அணி நிர்வாகம் முயன்றுப் பார்த்தது. அணியின் பேட்டிங் வரிசையைப் பலப்படுத்தும் முயற்சியாக அன்றைக்கு சீராக ரன்கள் குவித்து வந்த ராயுடுவை மூன்றாம் நிலையில் இறக்கி சோதனை ஓட்டம் விடப்பட்டது. அந்த முயற்சி தோல்வியில் முடியவே, வேறு வழியில்லாமல் மீண்டும் கோலியே மூன்றாம் நிலையில் ஆடப் பணிக்கப்பட்டார்.

 

ஒரு நாள் போட்டிகளில் NO. 4 இன் முக்கியத்துவம்  


ஒரு நாள் ஆட்டத்தில் இரண்டு பந்துகள் உபயோகப்படுத்தும் முறை கொண்டு வரப்பட்ட பிறகு, நான்காம் நிலையில் பேட்டிங் செய்வதன் வரையரை முழுக்கவே மாறியுள்ளது. முன்பெல்லாம் ஒர் அணியின் நான்காம் நிலை வீரர் என்பவர் சுழற்பந்து வீச்சை நன்றாக ஆடக் கூடியவராக, தேவைப்படும் பொழுது வேகமெடுக்க கூடியவராக இருந்தால் மட்டும் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஓர் அணியின் NO. 4 புதிய பந்தையும் வேகப்பந்து வீச்சையும் சந்திக்கும் திறமை உள்ளவராகவும் இருப்பது அவசியம் ஆகியுள்ளது. கூடவே ஆட்டத்தின் போக்கை ஒரு சில பந்துகளில் மாற்றும் தனித்துவமான திறமை (X factor) கொண்டவராக இருக்க வேண்டும். இதையெல்லாம் விட முக்கியமாக பௌன்சர்களை அநாயசமாக ஆடக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.

விராட் கோலி

பௌன்சர்களுக்கு தடுமாறியதன் காரணமாகத் தான் யுவ்ராஜ் சிங்கும் ரெய்னாவும் ஒருநாள் போட்டிகள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்பதை மறந்துவிட முடியாது. 2015  உலகக்கோப்பைக்குப் பிறகு, நான்காம் நிலையில் ஆடுவதற்கு இந்திய அணிக்கு ஒரு நிலையான வீரர் கிடைக்கவே இல்லை. ரஹானே, யுவராஜ் சிங், ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்ட்யா என்று ஒரு பெரிய பட்டாளத்தையே தேர்வுக்குழுவினர் முயன்றுப் பார்த்துவிட்டு இப்போது அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், விஜய் சங்கர் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பி இருக்கிறார்கள். 

 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் குழப்பங்கள்

 

தற்போதுள்ள உலக கிரிக்கெட் அணிகளில் இருந்து வசீகரமற்ற ஒரு லெவனைத் தேர்வு செய்தால் அதில் அம்பாதி ராயுடுவின் பெயரும் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவுக்கு நளினமில்லாத ஒரு மட்டையாளர் ராயுடு. ஆனால் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக வலுவான ஷாட்களை ஆடக் கூடியவர். கடந்த  ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக சிறப்பாக விளையாடியதன் காரணமாக தேசிய அணியில் மீண்டும் இடம்பிடித்தவர். கடந்த நியூசிலாந்து தொடரில் ஓர் கடினமான இன்னிங்ஸை ஆடியதன் மூலமாக நான்காம் நிலையில் ஆடுவதற்கான வீரர்களுக்கான பந்தயத்தில் தன் பெயரை ராயுடு வலுவாக முன் நிறுத்தியிருக்கிறார்.  யுவராஜ் போல ஆட்டத்தின் முக்கிய தருணங்களை வசப்படுத்தும் X factor இல்லாதது ராயுடுவின் பலவீனம்.

 

அம்பத்தி ராயுடு

கேதார் ஜாதவைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக உள்ளூர் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் உள்ளவர். குறிப்பாக அபாயகரமான ஷாட்களை அடிக்காமலேயே பந்தை தரையோடு சேர்த்து அடிப்பதன் (Maneuvering) மூலமாக ரன் குவிக்கும் திறன் கொண்டவர். ஆனால் அணியில் தற்போதுள்ள சூழலில், ஐந்தாம் அல்லது ஆறாவது நிலையில் ஆடுவதற்கே ஜாதவின் unorthodox பாணி ஆட்டம் பொருத்தமானதாக இருக்கும். இரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், தமிழகத்தின் விஜய் சங்கர் NO.4 க்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார். பாண்ட்யாவை விட சங்கரின் பேட்டிங் இறுக்கமானது (compact).  இறுதிக்கட்ட ஓவர்களில் மின்னல் வேகத்தில் ரன் குவிப்பதற்கு ஏதுவான பெரிய அளவிலான ஷாட்களையும் கொண்டவர் விஜய் சங்கர். அதே நேரம் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப ஒற்றை, இரட்டை ரன்களை  ஓடியும் எடுக்கக் கூடிய திறன் கொண்டவர். ஆனால் ஒருநாள் ஆட்டத்தில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு என ஒரு ஆதார குணம் இருக்கிறதல்லவா, அதை இதுவரை சங்கரின் ஆட்டத்தில் உணர முடியவில்லை. 

 

தினேஷ் கார்த்திக் : ஏன் சரியான NO.4 இல்லை? 


ரிஷாப் பந்த் X factor உள்ள வீரர். ஆனால் ஒருநாள் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்ற நுணுக்கம் இன்னும் அவருக்கு கைவரப் பெறவில்லை. டெஸ்ட், T20 என்று முற்றிலும் மாறுபட்ட இருவேறு வடிவங்களில் சிறப்பாக செயல்படும் பந்த், இடைப்பட்ட வடிவமான ஒருநாள் ஆட்டத்தில் தடுமாறுவது தான் கிரிக்கெட் ஆட்டத்தின் சுவாரஸ்யம்.  பந்த்தின் அதிரடி ஆட்டம் உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என்ற பார்வை கங்கூலி போன்ற நிபுணர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. ஆனால் மிடில் ஆர்டர் சூட்சமம் கைகூடும் வரையில் ரிஷாப் பந்த்தின் அதிரடி பாணி, மிடில் ஆர்டரை விட முன்களத்தில் ஆடுவதற்கே பொருத்தமானதாக இருக்கும். மணீஷ் பாண்டே இயல்பாகவே மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கான ஆதார குணத்தைக் கைவரப் பெற்றவர்.

தினேஷ் கார்த்திக்

 

2016 ஆம் ஆண்டு சிட்னி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் எடுத்த சதம் மிகப் பிரமாதமானது. ஆனால் அதற்குப் பிறகு ஏனோ பெரிய அளவில் பாண்டேவால் சோபிக்க முடியவில்லை. தொடர் தோல்வி காரணமாக களத்தில் அவரது உடல்மொழியே மிகவும்  எதிர்மைறையான ஒன்றாக மாறியுள்ளது. தினேஷ் கார்த்திக், நிதாஸ் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு அனைவரும் கவனிக்கத்தக்க ஒரு கிரிக்கெட் வீரராக மாறிவிட்டார். ஆனால் தினேசின் 360° ஆட்டம் கடைசி நேர மட்டை சுழற்றலுக்கு கைகொடுக்கலாமே தவிர, நான்காம் நிலையில் விளையாடுவதற்கு பொறுத்தமானதல்ல. உண்மையில் தினேஷின் பிரச்சினை அவரது ஆட்டத்தில் இல்லை. நீர்க் குமிழி போல எந்நேரமும் கிளம்பிக் கொண்டிருக்கும் மனம் தான் அவரது பிரச்சினை. எதுவும் இழப்பதற்கில்லை என்ற சூழ்நிலையில் மட்டுமே, தினேஷ் கார்த்திக்கால் நிதானமாக விளையாட முடியும். அதனால் தான்  பொறுமையும் நிதானமும் தேவைப்படும் NO.4  நிலையில் தினேஷ் கார்த்திக்கால் சோபிக்க முடியவில்லை.  

 

ஹாரிஸ் சொஹைல் : இன்சமாம் உல் ஹக்கின் மறுவார்ப்பு  


நான்காம் நிலையில் ஆடுவதற்கு இந்தியாவிற்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் பாகிஸ்தானின் ஹாரிஸ் சொஹைல் மாதிரியான ஒரு வீரர். ஹாரிஸ் சொஹைலை, ஒரு விதத்தில் இன்சமாம் உல் ஹக்கின் மறுவார்ப்பு என்றே கூறலாம். இன்சமாம் போலவே சொஹைலும் தனது ஷாட்களில் யானை வலுவும், மற்றவர்களைக் காட்டிலும் பந்தை சற்றுத் தாமதமாக சந்திக்கும் அற்புதமான டைமிங்கும் கொண்டவர். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக, அவர் பின்னங்காலுக்கு சென்று ஆப் சைடில் வெட்டி விளையாடும் விதமே அலாதியானது.  சொஹைல் எந்த அளவுக்கு வலுவும் நுணுக்கமான டைமிங்கும் கொண்ட வீரரென்று பறைசாற்றுவதற்கு அவரது மட்டையில் பந்து பட்டதும் இடி போல எழும் ஓசையே சாட்சி.

ஹாரிஸ் சொஹைல்

 

சுழற்பந்து வீச்சு அளவுக்கு வேகத்தையும் நன்றாக கணித்து ஆடுக் கூடியவர் ஹாரிஸ் சொஹைல். மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு இவர் பொருத்தமானவராக இருப்பார் என்று ஒரு சிலரைப் பார்த்தவுடன் மனதில் பொறி தட்டும் இல்லையா, அந்த ஆதார குணத்தை தன்னுடைய ஆட்டப் பண்பாகக் கொண்டவர் சொஹைல். ஐபிஎல் தொடரின் முடிவுகளை வைத்து உலக்கோப்பை தொடருக்கான அணித் தேர்வு இருக்காது என்று விராட் கோலி தெளிவுபடுத்திவிட்டார். ஆனால் பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால் போன்றவர்களின் ஆட்டங்களைப் பார்க்கும் போது, இந்தியா தனது நான்காம் நிலை மட்டையாளனுக்கான தேடலை இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீட்டி வைக்கலாம் என்று தான் தோன்றுகிறது. 
 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; 91.03 % மாணவ, மாணவியர் தேர்ச்சி!

3 hours ago

சித்திரைத் திருவிழாவையொட்டி பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

4 hours ago

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் கிரிவலம்.

4 hours ago

சிறுபான்மையின மக்களை திருப்திப்படுத்தவே வயநாட்டில் ராகுல் காந்தி போட்டி: ராகுல் காந்தி

4 hours ago

தமிழகத்தில் 18 தொகுதி இடைத்தேர்தலில் சராசரியாக 71.62% வாக்குப்பதிவு!

16 hours ago

வாக்குச்சாவடியில் காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது; டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே இனிமேல் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்!

18 hours ago

தமிழகத்தில் மதுரை தொகுதியை தவிர்த்து மற்ற 37 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!

18 hours ago

தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி, 63.73% வாக்குப்பதிவு: சத்ய பிரதா சாஹூ

18 hours ago

18 தொகுதி இடைத்தேர்தலில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55.97% வாக்குப்பதிவு!

20 hours ago

தமிழகத்தில் மதியம் 3 மணி நிலவரப்படி 52.02% வாக்குகள் பதிவாகியுள்ளன - சத்யபிரதா சாஹூ

20 hours ago

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பயணிகள் மீண்டும் சாலை மறியல்...!

23 hours ago

அதிமுக தலைமையிலான கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறும் - அன்புமணி ராமதாஸ்

23 hours ago

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் - மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்!

23 hours ago

வாக்கு இயந்திரத்தில் எந்த பொத்தனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு விழுவதாக கூறப்படுகிறது - திருமாவளவன்

23 hours ago

காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62% சதவிகித வாக்குப்பதிவு...!

1 day ago

வருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல!" - பிரேமலதா விஜயகாந்த்

1 day ago

அரசு பள்ளியில் வாக்களிக்க வந்த முதியவர் முருகேசன் வரிசையில் நின்றிருந்தபோது சுருண்டு விழுந்து உயிரிழப்பு...!

1 day ago

பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல்...!

1 day ago

சென்னை சாலி கிராமம் காவேரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு!

1 day ago

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்குப்பதிவு...!

1 day ago

சென்னை டிடிகே சாலையில் உள்ள புனித ஃப்ரான்சிஸ் சேவியர் பள்ளியில் நடிகர் தனுஷ் வாக்களித்தார்!

1 day ago

சேலம் அருகே உள்ள ஓமலூர் வேடப்பட்டி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திவிட்டு வெளியே வந்த முதியவர் கிருஷ்ணன்(74) மயங்கி விழுந்து பலி...!

1 day ago

9 மணிநிலவரப்படி தமிழகத்தில் 13.48% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ தகவல்

1 day ago

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி வாக்கு மையத்திற்கு மனைவி துர்காவுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்!

1 day ago

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மக்கள் அதிகமாக வந்ததால் சிரமம் ஏற்பட்டது - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

1 day ago

சென்னை தி.நகரில் மகன் விக்ரம் பிரபு மற்றும் மனைவியுடன் சென்று வாக்களித்தார் நடிகர் பிரபு..!

1 day ago

திண்டிவனம் வாக்குச்சாவடியில் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார் ...!

1 day ago

சென்னை அழ்வார்பேட்டி வாக்குச்சாவடியில் கனிமொழி வாக்களித்தார் ...!

1 day ago

வட சென்னையில் பல வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகள் வழங்கவில்லை என புகார்...!

1 day ago

தமிழகத்தின் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு; பொதுமக்கள் காத்திருப்பு!

1 day ago

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மகள் ஸ்ருதிஹாசனுடன் வாக்களித்தார் மநீம தலைவர் கமல்...!

1 day ago

மதுரை திருப்பலை பகுதி யாதவா பெண்கள் கலைக்கல்லூரி மையத்தில் இயந்திர கோளாறு ; பெரம்பலூர் செங்குனம் வாக்குச்சாவடி மையத்திலும் வாக்கு இயந்திரத்தில் கோளாறு..!

1 day ago

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்..!

1 day ago

தமிழகம் முழுவதும் 1.40 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்; அச்சமில்லாமல் வாக்களிக்க காவல்துறை பாதுகாப்பு வழங்கி வருகிறது - அசுதோஷ் சுக்லா

1 day ago

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு மையங்களில் இயந்திர கோளாறு; கோவை ஸ்ரீவில்லிப்புத்தூர், அம்பாசமுத்திரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது

1 day ago

அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்

1 day ago

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குசாவடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களிப்பு...!

1 day ago

சேலம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களிக்க காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி!

1 day ago

சென்னை கோயம்பேட்டில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்; சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துகளை இயக்கவில்லை என புகார்...!

1 day ago

பெங்களூருவில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...!

1 day ago

சென்னை அருகே நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களித்தார்...!

1 day ago

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

1 day ago

சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் அஜித் வாக்களித்தார்!

1 day ago

சிவகங்கை மக்களவை தொகுதி, காரைக்குடி வாக்குச்சாவடி மையத்தில் முதல் நபராக வாக்களித்தார் ப.சிதம்பரம்!

1 day ago

நாடு முழுவதும் 2ம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்; தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது!

1 day ago

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் வாக்குப்பதிவு நேரம் இரவு 8 மணி வரை நீட்டிப்பு!

1 day ago

தேர்தலையொட்டி, இன்று பொது விடுமுறை அறிவிப்பு; சினிமா காட்சிகளும் ரத்து!

1 day ago

தமிழகத்தில், 38 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு; மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்.

1 day ago

தமிழகத்தில், 38 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு!

1 day ago

இன்றுடன் விமான சேவையை நிறுத்திக் கொண்டது, ஜெட் ஏர்வேஸ்!

1 day ago

சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் ஆயிரத்து 381 கிலோ தங்கம் பறிமுதல்!

1 day ago

வாக்குப்பதிவையொட்டி, திரையரங்குகளில் நாளை மாலை 6 மணி வரை காட்சிகள் ரத்து!

1 day ago

தேர்தலை ரத்து செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகள் பழிவாங்கப்படுகின்றன : வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி...

1 day ago

"வருமான வரி சோதனைகளுக்கு திமுக பயப்படாது!” - மு.க.ஸ்டாலின்

2 days ago

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு!

2 days ago

“வருமான வரி சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை!" - அமைச்சர் ஜெயக்குமார்

2 days ago

“ஆளும் கட்சியினரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தவேண்டும் என்ற ஸ்டாலினின் பேச்சு குழந்தைத்தனமானது!” - தமிழிசை சவுந்தரராஜன்

2 days ago

தேனி ஆண்டிபட்டியில் பணம் பறிமுதல் தொடர்பாக அமமுக வேட்பாளர் ஜெயகுமார் உட்பட 150 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

2 days ago

சென்னை கண்ணகி நகரில் பணப்பட்டுவாடா செய்ததாக அமமுகவினர் மீது புகார்; பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.2000 பறிமுதல்.

2 days ago

வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டது ஜனநாயக படுகொலை என மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

2 days ago

கரூரில் ஜோதிமணி பிரச்சாரத்தின் போது திமுக அதிமுக கூட்டணியினரிடையே மோதல்.

2 days ago

வேலூர் தேர்தல் நிறுத்தம் மற்றும் கனிமொழி வீட்டில் சோதனைக்கு திமுக கூட்டணி தலைவர்கள் கண்டனம்.

2 days ago

ஆண்டிப்பட்டி அமமுக கட்சி அலுவலகத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு; வானத்தை நோக்கி போலீசார் 4 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம்...!

2 days ago

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

2 days ago

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

2 days ago

சென்னை T.நகரில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் இறுதிகட்ட பிரச்சாரம்!

2 days ago

சென்னை மெரினா கடற்கரை அருகே மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் இறுதிகட்ட பிரச்சாரம்!

2 days ago

நாகை இந்திய கம்யூ. வேட்பாளரை ஆதரித்து மு.க ஸ்டாலின் இறுதிகட்ட பிரச்சாரம்!

2 days ago

தென்சென்னை SDPI வேட்பாளர் தெஹலான் பாகவியை ஆதரித்து டிடிவி தினகரன் இறுதிகட்ட பிரச்சாரம்!

2 days ago

தூத்துகுடி திமுக வேட்பாளர் கனிமொழி எட்டயபுரத்தில் இறுதிகட்ட பிரச்சாரம்!

2 days ago

நாஞ்சில் சம்பத் கார் மீது மர்ம கும்பல் தாக்குதல்!

2 days ago

“வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜாதி, மதம் மற்றும் பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம்!” - சத்குரு

2 days ago

“‘கோ பேக் மோடி’ என்பது மாறி ‘பேக்கப் மோடி’ என ட்ரெண்டாகி வருகிறது!” - கனிமொழி

2 days ago

"நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரல்ல வெளிநாட்டின் பிரதமர்!" - மு.க.ஸ்டாலின்

2 days ago

தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

3 days ago

கடந்த சில வாரங்களாக கோடைவெயிலை மிஞ்சும் அளவிற்கு அனல் பறந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது.

3 days ago

இனி தமிழகத்தை எப்போதும் விவசாயிதான் ஆள்வார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை.

3 days ago

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!

3 days ago

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

3 days ago

கருணாநிதிக்கு 6 அடி நிலம் கூட தராதவர்கள் தமிழகத்தில் நீடிக்க வேண்டுமா? என ஸ்டாலின் கேள்வி

3 days ago

அதிமுகவை, திமுக தொட்டு கூட பார்க்க முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

3 days ago

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு

3 days ago

திண்டுக்கல்லில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் வருமானவரித்துறை சோதனை!

3 days ago

உலகக்கோப்பை இந்திய அணி இன்று 3மணிக்கு வெளியாகிறது!

3 days ago

8 வழிச்சாலை திட்டத்தை சிலர் திட்டமிட்டு எதிர்ப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

3 days ago

திருப்பூர் கருப்பகவுண்டம் பாளையத்தில் சாயப்பட்டறை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு;

4 days ago

அடுத்த 24 மணி நேரத்தில், 12 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

4 days ago

தமிழகத்தில் இறுதிக்கட்டத்தை நெருங்கும் தேர்தல் பிரச்சாரம்; வாக்குறுதிகளை அள்ளிவீசி ஓட்டு வேட்டையாடும் அரசியல் தலைவர்கள்.

4 days ago

நடிகர் ரித்தீஷ் மறைவிற்கு முதல்வர், துணை முதல்வர் இரங்கல்!

5 days ago

நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்!

5 days ago

“நாளை நமதே...நாடும் நமதே...நாற்பதும் நமதே...!” - பிரதமர் மோடி

5 days ago

“சுதந்திரத்திற்கு பிறகு உலகமே போற்றிய பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான்!” - முதல்வர் பழனிசாமி

5 days ago

“நாட்டில் மதக்கலவரம் எங்கும் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி!” - ஓ.பன்னீர்செல்வம்

5 days ago

தேர்தல் தொடர்பான புகார்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை; காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் டிஜிபி அதிரடி உத்தரவு.

5 days ago

பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி; தேனி, ராமநாதபுரம் பொதுக்கூட்டங்களில் இன்று பங்கேற்கிறார்.

5 days ago

கோடநாடு வழக்கில் தீபு, பிஜின்குட்டி ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி; உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.

5 days ago

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது!

5 days ago

“ஏழ்மைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த நான் விரும்புகிறேன்!” - ராகுல் காந்தி

6 days ago

“தமிழகர்களின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு என்பது மிகவும் முக்கியமானது!”- ராகுல் காந்தி

6 days ago

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை