முகப்பு > இந்தியா

40 நாட்களில் 2 கோடி வங்கிக் கணக்குகளுக்கு மேல் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்

January 09, 2017

40 நாட்களில் 2 கோடி வங்கிக் கணக்குகளுக்கு மேல் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்


மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக 40 நாள்களில் புதிதாக 2 கோடி வங்கி கணக்குகளுக்கு மேல் துவங்கப்பட்டு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஃபினான்சியல் இண்டலிஜன்ஸ் யூனிட் எனும் தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி கடந்த ஆண்டு நவம்பர் 15 முதல் டிசம்பர் 25 வரையிலான 40 நாள்களில் மட்டும் நாடு முழுவதும் புதிதாக இரண்டு கோடியே 10 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய வங்கி கணக்குகளில் 3 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் ஜன் தன் திட்டத்தில், ஒரே மாதத்தில் மூன்று கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்