இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

‘பரியேறுவாரா’ நடிகர் ஜோசப் விஜய்?

October 4, 2018
Image

மதன் ரவி

கட்டுரையாளர்

Image

சர்கார் திரைப்பாடல் விழாவின் பேசு பொருள் ஆகியிருக்கிறார் நடிகர் விஜய். தமிழ்நாட்டை பொறுத்த வரை அரசியலையும் சினிமாவையும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிக்க முடியவில்லை. தற்பொழுதைய சூழ்நிலையும் அதற்கு விதி விலக்கில்லை.

தனக்கு அரசியல் ஆசை இருப்பதாக சில நாட்களாக காட்டிக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். அதன் விளைவாக "தலைவா" திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. பிறகு மெர்சலில் கொஞ்சம் அரசியல் இப்பொழுது அவரே சொல்லுகிறார் சர்காரில் அரசியல் மெர்சலாக இருக்கும் என்று. இவரின் முன்னோடியான கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் லஞ்ச ஊழலை  பற்றி பெரிதாக பேசியுள்ளனர். அவருக்கு முன்னோடியான விஜயகாந்த், சரத்குமார் மற்றும் இதர நடிகர்களும் லஞ்சம் ஊழல் என்று நாட்டின் சாபக்கேட்டை பற்றி நிறைய நிறைய பேசியுள்ளனர்.

இப்பொழுது விஜயின் இந்த சர்க்கார் பேச்சு கண்டிப்பாக நாட்டிற்கு தேவையான ஒன்று தான். தீர்க்க முடியாத இந்த லஞ்ச ஊழல் வினாவிற்கு  இந்த நடிகர்களிடம் விடை இருப்பதாக இவர்களின் பேச்சின் மூலம் நாம் அறிய முடிகிறது. ஆனால் ஒரு பொது ஜனத்தின் சில கேள்விகளுக்கு நாம் விடை தேடி போனால் தலை சுற்றுகிறது.

இதற்கு முன் வெளியான கத்தி படத்தில் "2ஜி என்றால் என்ன? அலைக்கற்றை, காற்று, காற்றை மட்டுமே விற்று கோடி கோடியா ஊழல் பண்ற ஊரு" என்று வழக்கில் தீர்ப்பு வரும் முன்பே அதில் ஊழல் என்று தீர்ப்பெழுதினார் நடிகர் விஜய். சர்கார் திரைப்பட விழாவில் கலாநிதி மாறனை கலைக்கு நிதி அளிக்கும் மாறன் என்று புகழ்கிறார். 

வழக்கு இருக்கும் நிலையில் 2ஜியில் ஊழல் என்று தீர்ப்பெழுதிய இவரால் தொலைத்தொடர்பு ஊழல் வழக்கில் சிக்கியுள்ள கலாநிதி மாறனை எப்படி புகழ முடிந்தது. அதென்ன ராஜாவிற்கு ஒரு சட்டம்,மாறனுக்கு ஒன்றா? 

தமிழ்நாட்டில் சமீப காலங்களில் வாட்சப் மற்றும் இதர தளங்களில் கார்ப்ரேட்டை புறக்கணிப்போம் என்றும், காய்கறி மற்றும் பழங்களை தெருவில் வாங்குவோம் என்றும் ஒரு நல்ல பிரச்சாரம் மேற்கொள்ள படுகிறது. ஆனால் இது போன்ற பிரச்சாரங்களை ஏன் இந்த நடிகர்கள் பின்பற்றுவதில்லை. 

ஏன் ஒரு நொடிந்த தயாரிப்பாளரின் படத்தில் நடித்து அவர்களின் வாழ்க்கையை உயர்த்த கூடாது. ஏற்கனவே சில நடிகர்கள் (விஜய் உட்பட) அதை செய்திருக்கும் பொழுது அதை இன்னும் கொஞ்சம் விரிவாக செய்யலாமே ஒரு  "குடும்பம்" சினிமாவையே ஆட்டி படைக்கிறது என்று ஒரு காலத்தில் கூக்குரலிட்ட நிலையில் அதே குடும்பத்தின் திரைப்படங்களில் பெரும்பான்மையான அணைத்து நடிகர்களும் நடிப்பது ஏனோ. சினிமாவிற்குள் இருக்கும் இந்த முரண் பொது மக்களுக்கு விளங்குவதே இல்லை. 

திடீரென்று தயாரிப்பாளரான உதயநிதிக்கு விஜயும் கமலும் வாய்ப்பு கொடுக்கிறார்கள்(வாங்குகிறார்கள்), துரை தயாநிதிக்கு அஜித்தும், சன் டிவிக்கு ரஜினியும் படங்கள் செய்கிறார்கள். சன் டிவியின் வளர்ச்சியையாவது நாம் பல காலமாக பார்த்து வரும் நிலையில் இதர தயாரிப்பாளர்களின் பின்புலம் என்ன. இத்தனை சிறிய வயதில் அவர்களின் முதலீடு எப்படி வந்தது போன்ற கேள்விகள் எழாமல் இல்லை அதில் இந்த பொது ஜனத்திற்கும் பெருபாலான நடிகர்களுக்கும் பெரிய அக்கறையும் இல்லை.

ஆனால் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் இந்த நடிகர்கள் இது போன்ற விஷயங்களில் என்ன கருத்து கூறுவார்கள் என்று ஆர்வமாக உள்ளனர் இந்த பொதுஜனம். இந்த சர்க்கார் மேடையில் லஞ்சம் ஊழல் என்று பேசும் நடிகர் விஜய் இது எதுவோ இந்த சில ஆண்டுகளாக வந்ததை போல பேசுகிறார் அதற்கு கலாநிதி மாறனும் கை தட்டுகிறார். மேடையில் ராஜாஜியின் பெயர் வரை கூறிவிட்டு கலைஞரின் பண்புகளை கூறாமல் விட்டதை பற்றி மாறன் அவர்கள் என்ன நினைத்திருப்பார் என்ற ஐயம் பொது மக்களுக்கு இல்லாமலில்லை. 

முரண் பாடுகளின் மூட்டையாக மாறி வருகிறது தமிழ் சினிமா அரசியல் சமூகம். ஒரு நாள் ரஜினியின் காலில் விழுந்து அவர் முதல்வராக வேண்டும் என்கிறார் விஜயின் தந்தை, மறுநாள் விஜயின் அரசியல் பேச்சிற்கு பூரிப்படைகிறார். திமுகாவில் இருக்கும் ராதாரவி விஜயின் அரசியல் ஆசைக்கு தூபம் போடுகிறார், சினிமாவில் அரசியலை தொலைக்காதீர்கள் என்கிற மருத்துவர் ராமதாஸ் நடிகர் ரஞ்சித்தை துணை தலைவராக்கி அழகு பார்க்கிறார்..
 
இப்படி ஒரு குழப்படியான மனநிலையில் இருக்கும் பொதுஜனம் நாளை கண்டிப்பாக 2.0 டிக்கெட்டை 1000 ரூபாய் கொடுத்து பார்க்கத்தான் போகிறான்.  சிஸ்டத்தில் ஓட்டடையிருப்பதை கண்டு பிடித்தவரும், I'm a stupid common man" என்று சொன்ன மய்யத்தில் இருப்பவரும் இதற்கு என்ன சொல்வார்கள் என்று வாயில் ஈ நுழைய உட்கார்ந்திருந்தான் நம்ம பொது ஜனம்...

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )