இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​வெல்கம் பேக் நஸ்ரியா!

July 22, 2018
Image

மனோ

கட்டுரையாளர்

Image

நஸ்ரியா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய அழகிய எக்ஸ்பிரஷன்கள் தான். தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களை தனது யதார்த்தமான நடிப்பாலும் க்யூட்டானா எக்ஸ்பிரஷன்களாலும் குறுகிய காலத்தில் கட்டிப் போட்டவர் நஸ்ரியா. 

2006ல் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நஸ்ரியா. நடிகை மட்டுமல்ல, நிகழ்ச்சித் தொகுப்பாளர், மாடல் மற்றும் பின்னணிப் பாடகர் என பன்முகத் திறமை கொணடவர் நஸ்ரியா. 2013ல் அல்போன்ஸ்புத்திரன் இயக்கிய நேரம் படத்தின் மூலம் தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரும் வசூலை பெற்றுத் தந்தது. இப்படத்தில் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் பெருமளவில் பேசப்பட்டன. கதாநாயகன் நிவின்பாலியும் இப்படத்தின் மூலம் தான் அறிமுகமாகி பிரபலமானார். நாயகன் நாயகி இருவருக்கும் பெயர் வாங்கித் தந்த படமாக இது அமைந்தது.   

அதன் பிறகு அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி எனும் நேரடி தமிழ்ப் படத்தில் நடித்த நஸ்ரியா தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். நேரம் படத்தில் நஸ்ரியாவின் எக்ஸ்பிரஷன்களால் ஈர்க்கப்பட்ட பலஇளைஞர்களும் ராஜாராணி படத்தில் நஸ்ரியாவின் எக்ஸ்பிரஷன்களுக்கு அடிமையாகிப் போனார்கள். குறைந்த காலகட்டத்தில் அப்போதைய தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் அனைத்து முன்னணி கதாநாயகிகளும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பிரபலமானார்.  

அடுத்தடுத்து வாயை மூடிப் பேசவும், ஓம் ஷாந்தி ஓசானா, பெங்களூர் டேய்ஸ் என தொடர்ந்து வெற்றிப் படங்கள் அமைந்தன. நஸ்ரியா நடிப்பில் வெற்றியடையும் ஒவ்வொரு படத்திலும் அவருடைய நடிப்பு முக்கிய பங்களிப்பாக இருந்தது. தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்கள் இரு மொழிகளிலும் அவரது படங்களைத் தேடிப் பார்க்க ஆரம்பித்தனர். அப்பொழுது புகழின் உச்சத்தில் கொடிகட்டிப் பறந்து வந்தார் நஸ்ரியா. ஜெனிலியாவை இமிடேட் செய்து வந்த பல தமிழ்ப் பெண்களும் நஸ்ரியாவை இமிடேட் செய்ய ஆரம்பித்திருந்தனர்.

அந்த சமயத்தில் தான் பெங்களூர் டேய்ஸ் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் நஸ்ரியா. இந்த படத்தில் இடம்பெறும் 'என்டே கண்ணில்' எனும் ஹிட் பாடலையும் இவர் பாடியுள்ளார். இப்படத்தில் பஹத் பாசிலுடன் நடிக்கும் போது அவரை காதலிக்க ஆரம்பித்தார் நஸ்ரியா.  இருவரும் காதலிக்க ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே அவர்களின் திருமண அறிவிப்பை வெளியிட்டனர். 2014ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் நஸ்ரியா. நடிப்பை விட குடும்ப வாழ்க்கை தான் எனக்கு முக்கியம் என்று கூறி திருமணத்திற்குப் பின் நடிப்பை விட்டு விலகினார்

அவ்வளவு சிறிய வயதில்(20 வயது) தமிழ் மற்றும் மலையாள முன்னணி நடிகர்கள் யாருடனும் நடிக்காமல் தனது நடிப்புத் திறமையால் மட்டுமே சிறந்து விளங்கிய நஸ்ரியா, திடீரென திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகியது அவரது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை உண்டாக்கியது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக விரைவில் வலம் வரப் போகிறார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் நஸ்ரியாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது. அவரை போட்டியாளராக கருதிய பல முன்னணி நடிகைகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அதன் பிறகு நஸ்ரியாவின் இடத்தை நிரப்புவதற்கு வேறு எந்த நடிகையும் வரவில்லை.

திருமணத்திற்குப் பிறகு அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் மட்டுமே ஆக்டிவாக இருந்தார் நஸ்ரியா. திரைத்துறையிலிருந்து விலகிய சில நாட்களிலேயே உடல் பிட்னஸை பராமரிக்காமல் விட்டுவிட்டார். அதன்பிறகு சமூகவலைத்தளங்களில் வெளியாகிய அவரது புகைப்படக்களை வைத்து அவ்வப்போது பலரும் கிண்டல் செய்து வந்தனர். இனி நஸ்ரியாவை மீண்டும் பழையபடி திரையில் காணவே முடியாது என்று அவரது ரசிகர்கள் வருந்திய நிலையில் தான் அந்த அறிவிப்பு வெளியாகியது.

2017ம் ஆண்டின் பாதியில் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் நஸ்ரியா மீண்டும் நடிக்கப் போகிறார் என்ற தகவல் மலையாள சினிமா உலகில் பரவ ஆரம்பித்தது. அஞ்சலிமேனன் இயக்கத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார் எனும் தகவல்கள் உறுதியாகின. நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின் கூடே எனும் பெயர் வைக்கப்பட்ட அப்படம் இந்த வருடம் ஜூலை 22ம் தேதி வெளியானது. 

அதே துறுதுறு சேட்டைகளுடன், க்யூட் எக்ஸ்பிரஷன்களுடன் கதையை நகர்த்தக் கூடிய மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நஸ்ரியா. அழகான குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிருத்விராஜின் தங்கையாக வலம்வரும் நஸ்ரியா மெச்சூரிட்டியான வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். நஸ்ரியாவின் சினிமா வாழ்க்கையில் திருமணத்திற்குப் பிறகான அவரது ரீ என்ட்ரியாக அமைந்துள்ள இப்படம் எப்போதும் பேசப்படும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நிச்சயமாக அடுத்து தமிழிலும் நஸ்ரியா ரீ என்ட்ரி கொடுப்பார். விரைவில் முன்னணி நடிகையாக இரு மொழிகளிலும் வலம் வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )