மாஸ்டர் பிளான்: பிரியங்காவின் வருகையின் பின்னணி...!
January 24, 2019
சரோஜ் கண்பத்
கட்டுரையாளர்
இந்திய அரசிலுக்கு கொள்கையை விட முகமே முக்கியம். நேரு குடும்பத்தையும் காந்தி குடும்பத்தையும்(இந்திரா-ராஜீவ்) அப்படியே உரித்துவைத்திருக்கும் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து துணைத்தலைவராகி பின்னர் கட்சியின் தலைவரானவர் ராகுல் காந்தி. இப்படி ஒவ்வொரு படியாக வந்தவர் தான் ராகுல் காந்தி. இதே வழியில் பிரியாங்கா வருகிறார். ஆனால் இரண்டே வயது வித்தியாசமுள்ள தங்கை பிரியங்கா வருகை தாமதம் ஏன்?
ராகுல் காந்தி அரசியலுக்கு வருவதற்கு முன்பும் பின்பும் அவரது சகோதிரி பிரியங்கா காந்தியையும் அரசியலில் வருவதை ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனக்கு பின்னர் வாரீசாக ராகுல் காந்தியை சோனியா காந்தி தேர்ந்தெடுக்க பிரியங்கா காந்தியின் வருகை தாமதமானது. இதற்கு முக்கிய காரணம் எதிர் கட்சிகள் வைக்கும், வாரீசு குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகள் வரும் என்பதல்ல… பிரியங்கா காந்தியை முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டாலோ அல்லது ராகுலோடு பிரியங்கா காந்தியும் வந்தாலோ அது ராகுல் காந்தியின் வளர்ச்சியை தடுக்கும் என்று தான் கட்சியும், கட்சித் தலைவரான சோனியா காந்தியும் நினைத்தனர்.
பிரியங்காவின் கரீஷ்மாவில் ராகுல் காந்தி பின் தங்கும் சூழ்நிலை உணரப்பட்டது. இதில் பிரியங்கா மட்டுமல்ல சோனியா காந்தி தலைமையில் கட்சி இருக்கும் நிலையில் கூட கட்சியின் கவனம் (ஃபோகஸ்) சோனியா காந்தி மீதே இருக்குமே தவிர அது ராகுல் காந்தி நோக்கி முழுமையாக திரும்பாது என்கிற கவலை ஏற்பட்டது. இதனால் பதவியை விரைவாக விட்டுக்கொடுத்ததோடு, பின்னரும் சோனியா காந்தி பாராளுமன்றத்தில் விவாதிப்பதோ அல்லது பொது மேடையில் ராகுலோடு அமருவதோ மிகக் குறைவாக இருந்தது. சமீபத்தில் தெலங்கானா தேர்தலிலும், மறைந்த முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சியிலுமே இரண்டு பேரும் ஒன்றாக இருந்தனர். இதே சூழ்நிலை தான் பிரியங்கா காந்தியின் நுழைவும் ராகுல் காந்தியை பாதிக்கும் என்கிற எண்ணத்திலேயே தாமதமானது. ஆனால் இப்போது பிரியங்கா காந்தி கட்சியின் பொது செயலாளராக நியமனம் செய்யப்படது, அவரது வருகை அரசியலில் முழு வீச்சில் காங்கிரஸ் செயல்படப் போகிறது என்கிற கோணத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருப்பார்கள் என்கிற கோணத்தில் சிந்திக்கப்படுகிறது.
ராகுல் மென்மையானவர், பிரியங்கா துணிச்சலான பேசும் ஆற்றலுடையவர். பிரியங்கா காந்தி டீ - கப் என்றால் ராகுல் காந்தி சாசராக இருப்பவர். ஆனால் ராகுல் காந்தி மோடியை விளாசித்தள்ளும் “சோக்கிதார் சோரே ” (நாட்டின் காவலன் திருடனாக இருக்கிறார்) என்று முழங்குவதைப் போன்று பிரியங்கா காந்தி முழங்க முடியுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. காரணம் அவருக்கு பின்னால் இருக்கின்ற வதேரா பெயர் விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பும். பிரியங்காவின் வருகையை எதிர்ப்பார்த்தே நெருக்கடிகளும் கொடுக்கப்பட்டது.
இதனாலோ என்னவோ கட்சியின் அகிலஇந்தியாவும் கரீஷ்மா தலைவி பிரியங்காவின் வருகை எதிர்பார்க்கும் நிலையில் அவரது பொதுச் செயலாளர் நியமனம் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே பொறுப்பேற்க வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் அவரது பங்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொதுச் செயலாளர்கள் உண்டு. கட்சியின் அமைப்புகளுக்கு, இளைஞர்கள் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ் என்கிற அமைப்புகளுக்கும் ஒவ்வொரு மாநிலங்களுக்கான பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகிப்பது உண்டு. இதில் இரண்டு மூன்று மாநிலத்திற்கு ஒருவர் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுவதுண்டு. ஆனால் கட்சியின் அகிலஇந்தியாவும் பிரியங்காவின் வருகை எதிர்பார்க்கும் நிலையில் அவரது பொதுச் செயலாளர் நியமனம் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே. இது ராகுல் முடிவு, என்று சொல்லுவதை விட சோனியா காந்தி எடுத்த முடிவே என்று சொல்லப்படுகிறது.
உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளராக இருந்தவர் குலாம் நபி ஆஸாத். தற்போது அவர் ஹரியானாவிற்கு மாற்றப்பட்டுள்ளார். உபியில் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலத்தலைவர் ஒருவரும் உண்டு. அவர் நடிகர் ராஜ்பப்பர். இப்படி ஒரு தலைவரும் இருக்கின்ற நிலையில் மாநிலத்தை இரண்டாக பிரிக்கப்பட்டு உபி கிழக்கு மாநில பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியும் உபி மேற்கு பகுதிக்கு முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியாவும் மற்றொரு காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உபி யின் கிழக்கு பகுதிதான் சவால் நிறைந்தது. மோடியின் வாரணாசி, உபி முதல்வர் யோகிஆதித்யநாத்தின் செல்வாக்கும் உள்ள பகுதி. மேற்கு பகுதியில் மீரட் போன்ற பகுதியில் ஜாட் இனத்தவர்கள் அதிகம்.
ராகுல் காந்தியின் பேட்டியில், ‘இது தேர்தலுக்காகவோ அல்லது இரண்டு மாதத்திற்கான நியமனம் இல்லை’ என்றும் உபியிலுள்ள மக்களை ஒன்றிணைக்கவே பிரியங்காவும் சிந்தியாவும் யல்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இப்படி நாடு முழுக்க எதிர்பார்க்கப்படும் ஒரு கரீஷ்மா தலைவி உபி யில் அதிலும் ஒரு பகுதிக்கு நியமனம் என்பது ஒரு சிறிய அளவிலான பணியே.
ஏனெனில், மிகப்பெரிய அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டு அதில் சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையும் ராகுலுக்கும் சோனியாவிற்கும் உண்டு என்கின்றனர். ஆனால் தற்போதைய பொறுப்பிற்கான பின்னனி , சோனியாவின் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்கச் செய்வதற்கான ஆயத்த பணிகள் என்கின்றனர். ஏற்கனவே தேர்தல்களின் போது அமேதி தொகுதியையும் ரேபரேலி தொகுதியையும் பிரியங்கா காந்தி தான் கவனித்து வந்தார். ஆனால் கடந்த மூன்று தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நிலையில் அங்கு எதிர்ப்பு அலை ஏற்படலாம் என்கிற எச்சரிக்கை உணர்வில் பா.ஜ.க தலைவர்கள் சுஸ்மா சுவராஜ், உமாபாரதி போன்றவர்கள் வரிசையில் சோனியா காந்தியும் உடல் நிலை கருதி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க இருக்கின்றார் என்பதால் ரேபரேலியில் பிரியங்கா காந்தியை போட்டியிட வைக்கும் விதமாகவே உபியில் களம் இறக்கிவிடப்படுகிறார் என்கின்றனர்.
பிரியங்கா காந்திக்கு இதுவரை கட்சியில் அதிகாரபூர்வமாக பதவி அறிவிக்கப்படவில்லையென்றாலும் அவர் தலையிடாமல் இல்லை. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களிலும் இந்த மாநிலங்களில் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்ட போதும் குறிப்பாக சத்தீஸ்கர், மத்திய பிரதேஷ் போன்ற மாநிலங்களில் அமைச்சர்கள் தேர்விலும் கூட பிரியங்காவின் பங்கு இருந்ததை காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் பேசப்பட்டவை. இப்படி மறைமுகமாக பிரியங்காவின் பங்கு கட்சியில் இருந்த நிலையில், இப்போது நேரடியாக களத்தில் உபியை குறி வைத்து களம் இறங்கப்பட்டுள்ளார்.
மேலும் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ்வாதிக் கட்சி மற்றும் சமாஜ் வாதி கட்சியோடு தான் இணக்கமாக இருப்பதாக குறிப்பிட்டாலும் இந்த இரு கட்சிகளும் காங்கிரஸை விட்டுவிட்டு தனித்து சென்றதில் ராகுல் காந்திக்கு உள்ளுக்குள் கடுமையான மனவருத்தம் என்றும் சொல்லப்படுகிறது. பிரியங்கா காந்தியை இறக்கிவிடுவதற்கான முக்கிய காரணம் பாஜக விற்கு மட்டுமல்ல இந்த இரு கட்சிக்கும் சரியான போட்டியை காங்கிரஸ் கொடுக்கவேண்டும் என்பதற்கு தான் என்கின்றனர். *தற்போது வெளிநாட்டு பயணத்தில் இருக்கும் பிரியங்கா காந்தி பிப்ரவரி மாதம் இந்த பொறுப்பை எடுத்துக்கொள்ளும் நிலையில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ’இந்திரா காந்தி நிலை’க்கு கொண்டு வரும் ஆர்வத்தில் இருக்கிறார் என்கின்றனர். நேரு இருந்த போது தந்தை - மகள் கூட்டணி; இந்திரா காந்தி இருந்த போது அம்மா – மகன்கள் கூட்டணி ; பின்னர் இடையில் நரசிம்மராவ் சீத்தாராம் கேசரி டீம்மினால் சரிவு; பின்னர் சோனியா காந்தி தலைமையில் அம்மா – மகன் கூட்டணியில் இரு முறை ஆட்சி. இப்போது மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கட்சியை ஏற்படுத்த குடும்பத்தை ஒன்று திரட்டி முழு நேரு-காந்தி குடும்பம் ஒன்றாக திரளவேண்டும் என்கிற யோசனையை பிரியாங்கா காந்தி வைக்கிறார்* என்கின்றனர். குறிப்பாக தற்போது ராஜீவ் காந்தி குடும்பம் சஞ்சய் காந்தி குடும்பம் பிரிந்து இருக்க பிரியாங்கா, சஞ்சய் காந்தி மகனும் தன்னுடைய ஒன்றுவிட்ட தம்பி வருண் காந்தியை காங்கிரஸ் கட்சியில் சேருமாறு வற்புறுத்தி வருகிறார். பிரியங்கா காந்தி மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியிலுள்ள சஞ்சய் காந்தி ஆட்களும் வருண் காந்தியை காங்கிரஸ் கட்சியில் வந்து சேருமாறு வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் தாயார் மேனகா காந்தி காங்கிரஸில் சேரும் வருண் காந்தியின் முயற்சிக்கு தடையாக இருக்கிறார்.
ஆனால் வருண் காந்தி தற்போது தான் எம்பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உபி யில் சுல்தான் பூரில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லையென்றால் பிரியங்காவின் அழைப்பின் படி காங்கிரஸில் சேர தயாராக இருக்கிறார் என்கின்றனர். இதன் மூலம் இந்திரா காந்தி,காந்தி சமயத்தில் இருந்தைப் போன்று ஒட்டு மொத்த நேரு குடும்பம் ஒன்று இணைந்து அரசியலை கலக்கலாம் என்கிற எண்ணத்தில் பிரியங்கா திட்டமிடுகிறார். ஆனால் வருண் காந்தி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை வைத்து பா.ஜ.க பயமுறுத்தி வருகிறது என்கின்றனர்.
இத்தோடு சோனியா காந்தியோடான பகைமையில் மேனகா காந்தி வருணை நேரு குடும்பத்தை கைகோர்க்க அனுமதிக்க மறுக்கிறார் என்கின்றனர்.
இதனால் வருண் காந்தியின் திட்டமும் தள்ளி போகிறது. எனவே தற்போதைய சூழ்நிலையில் உபியிலுள்ள தங்கள் குடும்பத்து தொகுதிகளை தக்க வைப்பதே முதல் பணியாக காங்கிரஸுக்கு உள்ளது. எனவே தான் உபியை விட்டு வெளியே போவதற்கும் பிரியங்காவிற்கு வாய்ப்பு கொடுக்கபடவில்லை. குறைந்தபட்சம் உபியில் உள்ள காங்கிரஸ் கேடர்களுக்கு உற்சாகம் கொடுக்கவே பிரியங்காவின் பொது செயலாளர் நியமனம் என்கின்றனர்.
ஆனாலும் தேர்தல் நெருங்க நெருங்க,தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து ஆட்சியின் அதிகாரம் விட்டு போகும் சமயத்தில் பிரியங்காவின் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.
இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்கவரி!

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...!

அதிமுக - பாஜக இடையே 19ம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

தீவிரவாதக் குழுக்களை ஒழிக்க அரசுக்கு பக்கபலமாக இருப்பது என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் இழுபறி; திமுக தரப்பில் காங்கிரசுக்கு 6 இடங்கள் தருவதாகவும், காங்கிரஸ் 8 இடங்கள் கோருவதாகவும் தகவல்!

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலையும் எதிர்கொள்ள தயார் - மு.க.ஸ்டாலின்

சென்னை விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார் விஜயகாந்த்; விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் உற்சாகம்!

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவர்கள் சோதனை!

இரட்டை ஆதாய பதவி புகாரில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவை தகுதி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுப்பு!

திருச்சி விமான நிலையம் வந்தது புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் ஒருவரது உடல்; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி!

"கூட்டணி இல்லாமல் தனித்து நின்றாலும் அதிமுக பெரும் வெற்றி பெறும்!" - அமைச்சர் பாண்டியராஜன்

எச்.வினோத் இயக்கும் தல 59 படம் : 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்!

தமிழகத்தில் சசிகலாவுடன் தான் பாஜக கூட்டணி வைக்க வேண்டும்; சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் திடீர் பரபரப்பு.

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களின் உடல்கள் சொந்த ஊர் கொண்டுவரப்படுகின்றன; அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் இன்று இறுதிச்சடங்கு.

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர் சுப்பிரமணியத்தின் உடல் நாளை மதியம் 12 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான மார்ச் 1ம் தேதி வெளியாகிறது!

மார்ச் 10ம் தேதி 43051 மையங்களிலிலும், 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து கொடுக்க தமிழக அரசு ஏற்பாடு!

"தீவிரவாத இயக்கங்களுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது!" - மன்மோகன்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரது குடும்பங்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 38 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தில், மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு படைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்: ராகுல்

திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

உடுமலை பகுதியில் போக்குக்காட்டி வந்த சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை!

"காஷ்மீர் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்!" - பிரதமர் மோடி

காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்!

கூட்டணி தொடர்பாக அதிமுக அமைச்சர்களுடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் ஆலோசனை!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் சுப்ரமணியன் என்பவர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் கூடியது; நிர்மலா சீதாரமன், ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் அஜித் தோவால் பங்கேற்பு.

பாஜக சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: அமித்ஷா

உடுமலை அருகே சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானைக்கு, கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான குழு மயக்க ஊசி செலுத்தினர்!

காட்டு யானை சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்.

ஜம்மு-காஷ்மீர் விரைகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்; தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என சூளுரை.

ஜம்மு-காஷ்மீர் அவந்திபுரா பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு!

அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யவதற்கான காலக்கெடு நிறைவடைந்தது!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 08 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்!

"புதுச்சேரியில் புது திட்டங்களுக்கு, ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுகிறார்!" - குஷ்பு,காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

"தலைமை அறிவுறுத்தினால், நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்!" - குஷ்பு, காங்கிரஸ்

"கல்வியறிவு கொண்ட பிரதமர் நாட்டை வழிநடத்தி செல்ல வேண்டும்!" - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

துணைநிலை ஆளுநருக்கு எதிரான புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு.

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த், சிகிச்சைகள் முடிவடைந்ததால் நாளை மறுநாள் (16-02-19) சென்னை திரும்புகிறார்!

ரபேல் விவகாரம் தொடர்பான சிஏஜி அறிக்கையில் முக்கிய விவரங்கள் இடம்பெறவில்லை என ராகுல் புகார்.

காதலர் தினத்தையொட்டி, களைகட்டும் கொண்டாட்டங்கள்; ரோஜா மற்றும் பரிசுப்பொருட்கள் விற்பனை தீவிரம்.

ரஃபேல் விவகாரம் தொடர்பான CAG அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்

மாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது முத்தலாக் தடை சட்ட மசோதா.

சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசமாக பயணிக்கலாம்: மெட்ரோ ரயில் நிர்வாகம்

60 லட்சம் பேரின் வங்கிக்கணக்கில், இம்மாத இறுதிக்குள் 2,000 ரூபாய் செலுத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பாஜக தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ் தகவல்

வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் : முதல்வர் பழனிசாமி

தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல ஜெயலலிதா தொடர்ந்து போராடினார் - எடப்பாடி பழனிசாமி

"சின்ன தம்பியின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்!" - நீதிபதிகள்

"நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்!" - எல்.கே.சுதீஷ்

சென்னைக்கு வட கிழக்கே வங்க கடலில் காலை 7:02 மணியளவில் லேசான நில அதிர்வு; ரிக்டர் அளவுவில் 5.1 ஆக பதிவு எனத் தகவல்!

வரும் 19ம் தேதி தமிழகம் வரவிருந்த பிரதமர் மோடியின் தமிழக வருகை மார்ச் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைப்பு.

டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: தீயை அணைக்கும் பணி தீவிரம்.

நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டும் தேர்தல் ஆணையம்; தமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் புதிதாக நியமனம்.

கண்மூடித்தனமாக மத்திய அரசை எதிர்க்கமாட்டோம்: அமைச்சர் ஜெயக்குமார்

3 மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

“மத்திய அரசுக்கு ஒருபோதும் அசைந்துகொடுக்க மாட்டோம்!”- ஓ.பன்னீர்செல்வம்

"இந்த பட்ஜெட், Beautiful budget, Excellent budget, marvellous budget!” - முன்னாள் அமைச்சர் செம்மலை

"11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் வெளியீடு!"- அமைச்சர் செங்கோட்டையன்

"மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?"- தம்பிதுரை

“வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும்!”- தமிழக முதல்வர்

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

"பாஜகவின் அழுத்தத்தால் தன்னிலை மறந்து பிதற்றுகிறார் கமல்ஹாசன்.." - திமுக நாளேடான முரசொலியில் கடும் விமர்சனம்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் ரஜினியின் மகள் சவுந்தர்யா-விசாகன் திருமண நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு!

உலகப்புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயிலில் இன்று மஹா கும்பாபிசேக விழா; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், திபு, பிஜீன் குட்டி கைது; சயான், மனோஜை தீவிரமாக தேடுகிறது தனிப்படை போலீஸ்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கை; டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்.

சென்னை மெட்ரோ ரயில்கள் அனைத்திலும் நாளை இரவு வரை இலவசமாக பயணிக்கலாம் - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன: பிரதமர் மோடி

“தீரன் சின்னமலை போன்றவர்கள் பிறந்த ஊர் திருப்பூர்; தொழில்முனைவோர், அர்ப்பணிப்புடன் உழைக்கும் மக்களைக் கொண்டது திருப்பூர்!” - பிரதமர் மோடி

தமிழ் சகோதர, சகோதரிகளே என திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேச்சை தொடக்கினார் பிரதமர் மோடி.

திருப்பூர் பெருமாநல்லூர் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி.

எண்ணூரில் பாரத் பெட்ரோலிய துறைமுக முனையத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

சென்னை வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ் இடையே புதிய மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

சென்னையில் 470 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

திருப்பூர் அருகே ஈட்டி வீரம்பாளையத்தில் நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

திருப்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்க, கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருப்பூரில் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு!

3வது T20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி!

"திமுகவை கமல்ஹாசன் விமர்சித்தது அறியாததால் காங்கிரஸ் கூட்டணிக்கு கமலை அழைத்தேன்!"- கே.எஸ்.அழகிரி

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் கைது!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது T20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

“துரோகம் செய்துவிட்டு தமிழகத்திற்கு வரும் மோடியை அனுமதிக்க முடியாது!” - வைகோ

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருவூல அறையில் வைக்கப்பட்டிருந்த கணினி திருட்டு.

தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி.

கஜா புயலால் பாதிப்படைந்த பைபர் படகுகளுக்கு இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

"வருமான வரி முறையை, மத்திய அரசு ஒட்டு மொத்தமாக ஒழிக்க வேண்டும்!" -சுப்பிரமணியன் சுவாமி

"நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் என்பதை பிரதமர் மோடி தான் முடிவு செய்வார்!" - புகழேந்தி, அமமுக

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக இன்னும் முடிவு எடுக்கவில்லை: தம்பிதுரை

டாஸ்மாக் விற்பனையை முறைபடுத்தவும், போலிகளை கண்டுபிடிக்கவும், தமிழகம் முழுவதும் 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு!

வெள்ளைக்காரர்களை விரட்டிய காங்கிரஸால் மோடியை துரத்த முடியாதா என குஷ்பு கேள்வி.

மக்களவைத் தேர்தலோடு 21 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு; தலைமை தேர்தல் ஆணையத்திடம் திமுக எம்பிக்கள் வலியுறுத்தல்.

ஊழல்களின் மாஸ்டர் பிரதமர் நரேந்திர மோடி; மேற்குவங்க முதலமைச்சர் மம்தா கடும் விமர்சனம்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் தொடங்கப்பட்ட உள்ளது; திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு!

“அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது; தேர்தலை கருத்தில் கொண்டு சில நல்ல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன” - திருமாவளவன், விசிக

பிப்.11 முதல் 14ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் : அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு!


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
73.29/Ltr (0.10 ) - டீசல்
68.14/Ltr ( 0.07 )

- திமுக, காங்கிரஸ் கூட்டணியில் திடீர் இழுபறி...!
5 hours ago
- ஏர்டெல், ஐடியா, வோடஃபோனை கிண்டல் செய்து ஜியோ போட்ட ட்வீட்!
1 day ago
- அனுகூலமான நாடு அந்தஸ்தை இந்தியா நீக்கியதால் பாகிஸ்தானுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
9 hours ago
- தவறான தொடர்பை தட்டிக் கேட்ட கர்ப்பிணி மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கணவன்...!
2 hours ago
- தூத்துக்குடியில் பாகிஸ்தானின் தேசிய கொடி தீயிட்டு எரிப்பு!
14 hours ago
- ஆதரவின்றித் தவித்த முதிய தம்பதி தற்கொலை முயற்சி...!
2 hours ago