Skip to main content

இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

March 06, 2019
Image

பிரனீஷ் ரங்கன்

கட்டுரையாளர்

Image

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு போதும் இந்தியாவின் நட்பு நாடாக இருந்ததே இல்லை. 1971 போர், கார்கில் போர், மும்பை தாக்குதல், காஷ்மீர் தாக்குதல், நாடாளுமன்ற தாக்குதல் என்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியா சந்தித்து வரும் சோதனை உலகறிந்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒவ்வொரு முறையும் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தும் போது, இந்தியா பதிலுக்கு எந்த தாக்குதலையும் நடத்தாது. தீவிரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் எதிராக கண்டன அறிக்கையை வெளியிடும். பிறகு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயலும். பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து கொள்ள முயலும். தப்பித்தவறி எப்பொழுதேனும் பாகிஸ்தான் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையை நடத்தினால் அதன் பிறகு மீண்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்துவார்கள். இப்படி தான் இத்தனை ஆண்டுகளாக இந்தியா பயங்கரவாதத்தை அணுகி வந்தது.

ஒவ்வொரு முறை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவை தாக்கும் போதும், தக்க பதிலடி கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் ஒவ்வொரு இந்திய வீரனுள்ளும் பொங்கி எழும். ஆனால் அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கிடைக்காத ஏமாற்றம் தான் மிஞ்சும். ஏனென்றால், இந்தியா, பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினால், சர்வேதச நாடுகள் இந்தியாவை கண்டித்து விடுமோ? பொருளாதார தடை விதித்து விடுமோ? சர்வதேச நெருக்கடிக்கு ஆளாவோமோ? என்ற அச்சம் இந்திய அரசாங்கத்தின் மீது இருந்ததாக தான் தெரிகிறது.

1988-2016 வரை ஜம்மு - காஷ்மீர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 6,257 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இந்த 28 ஆண்டுகளில் 23,103 தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தால் துவம்சம் செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலில் 14,734 பொதுமக்களும் பலியாகியுள்ளனர்.

2016ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் தாக்குதல் நடத்தியதில், 19 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அனைத்து ராணுவ மரியாதைகளுடன் நடந்த வீரர்களின் இறுதி சடங்கில், ராணுவ வீரர் ஒருவரின் மகள் இட்ட கோஷமும் வீர வணக்கமும் அனைவரின் வீரத்தையும் தட்டி எழுப்பியது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போமா என்ற கேள்வி அனைத்து இந்தியர்களிடையே பொங்கி எழுந்தது. இம்முறை பதிலடி கொடுத்தால் சர்வதேச நாடுகள் இந்தியாவை கண்டிக்காதா என்ற கேள்வியும் எழுந்தது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம், மறைந்த முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் சேர்ந்து நடத்திய பொக்ரான் அணுகுண்டு சோதனையை கூட அமெரிக்கா கண்டித்தது. பொருளாதார தடை விதிப்போம் எனவும் மிரட்டியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

ஆனால் இம்முறை இந்தியா எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. பதிலடி கொடுப்போம் என முடிவெடுத்தது. மிகவும் ரகசியமாக, துல்லியமாக திட்டமிட்டது. இந்திய ராணுவப்படை தயாரானது. இதற்கு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என பெயரிடப்பட்டது. Line of Control (L.O.C) எனப்படும் எல்லை கோட்டை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து தீவிரவாதிகளை அழித்துக் காட்டுவது என திட்டமிடப்பட்டது. இந்தியா இவ்வாறு திட்டமிடும் என்பதை பாகிஸ்தான் உள்பட எந்த நாடும் எதிர்பார்க்கவில்லை. உரி ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதிலிருந்து 11 ஆம் நாள் அன்று நள்ளிரவில் இந்திய படையினர் எல்லைப்பகுதியை கடந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து, தீவிரவாத முகாம்களை சுட்டு தள்ளினர். திட்டமிட்டபடி தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திவிட்டு இந்திய படையில் உள்ள அனைவரும் எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக இந்தியா திரும்பினர். இது தான் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், அதாவது துல்லிய தாக்குதல் என்று அழைக்கப்படுகிறது. தீவிரவாத முகாம்களை சுட்டுத் தள்ளியதை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இந்தியாவின் இந்த துணிச்சல் மிக்க நடவடிக்கைக்கு வல்லரசு நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்திருக்கும். ஆனால் இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலுக்கு எந்த நாடும் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. மாறாக இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்போம் என்று பெரும்பாலான நாடுகள் இந்தியாவின் பக்கம் நின்றது. சர்வதேச நாடுகளின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று சிந்திக்க தோன்றுகிறது அல்லவா? அந்த மாற்றம் பெரும்பாலான இந்திய மக்களிடம் இருந்து துவங்கியது. 2014 ஆம் ஆண்டு தேர்தலில் வீசிய ஒரு அலை தான் அதற்கு காரணம். அதன் பிறகு இந்தியாவிற்கு கிடைத்தார் ஒரு "உலகம் சுற்றும் வாலிபர்". அவர் சர்வதேச நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்வதேச தலைவர்கள் இடத்தில இந்தியா சந்தித்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து எடுத்து உரைத்து வந்தார். சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற இது மட்டும் போதுமாக இருந்தது என்று நினைத்தால் அது சரியாக இருக்காது. உலகம் சுற்றும் வாலிபர் உலக நாடுகளுடன் வர்த்தக ரீதியாக ஏற்படுத்திய நல்லுறவு இதற்கு அடுத்த முக்கிய காரணம். அந்நிய முதலீடுகள் இந்தியாவில் அதிகமானது. சர்வதேச வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி மூலம் சர்வதேச உறவு மேலும் வலுப்பெற்றது. பிறகு, வெளிநாடுகளுடன் இனைந்து இந்திய ராணுவ பயிற்சி எடுக்கும் நடவடிக்கைகள் அதிகமானது. ஆப்கானிஸ்தான், இரான் போன்ற நாடுகளுக்கு இந்தியா உதவி வந்தது. அவர்களின் ஆதரவு இந்தியாவின் பக்கம் முழுமையாக இருந்தது. இந்தியா வெளியிடும் அறிக்கைகளும், இந்தியா எடுக்கும் வளர்ச்சி திட்டங்களும் சர்வதேச அரங்கில் பேசப்பட்டது. இவை அனைத்தும் தான் சர்வதேச நாடுகள் இந்தியா பக்கம் நின்றதற்கு காரணமாக தெரிகிறது. 

அதன் பிறகு பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகள் சில ஆண்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் குறைந்து காணப்பட்டது. பொருளாதார சீர்திருத்தங்கள் நிறைய ஏற்பட்டது இந்தியாவில். இதுவும் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்து இருந்ததற்கு காரணமாக கூறப்பட்டது. 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் இன்றும் ஆறாதவடுவாக தமிழர்களின் மனதில் இருக்கிறது. இது நடந்தது 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள். 20 ஆண்டுகளுக்கு பிறகு இதே பிப்ரவரி 14 ஆம் நாள் 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றது. இதில் 40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முஹம்மது என்ற தீவிரவாத அமைப்பு முற்றிலுமாக பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் இந்தியர்களை கொதிப்படைய செய்தது. 40 வீரர்களில் 2 தமிழக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் நன்றாகவே எதிர்பார்த்தது.

பாகிஸ்தான் எதிர்பார்த்தது சரிதான். இந்தியா மிகப்பெரிய தாக்குதல் திட்டம் ஒன்றை தீட்டியது. பிப்ரவரி 15 ஆம் நாள், இந்திய விமானப்படையின் தளபதி, தாக்குதல் குறித்த திட்டத்தை பாதுகாப்புத்துறையிடம் சமர்ப்பித்தார். பிப்ரவரி 20 ஆம் நாள், ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத அமைப்பு இயங்கிக்கொண்டிருக்கும் பயிற்சி தளங்களும் தாக்குதல் தளங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. தாக்குதல் திட்டத்தின் ப்ளூ பிரிண்ட், பாதுகாப்புத்துறை அமைச்சரின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவைகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கும் போது, பாகிஸ்தான் தனது வான்வழி மற்றும் ராணுவ பாதுகாப்பை வலுப்படுத்தி வந்தது. இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று சந்தேகிப்பக்கப்பட்ட இடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளபதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். கண் அசைக்காமல் இந்தியாவின் தாக்குதலை எதிர்ப்பார்த்து காத்துகொண்டு இருந்தது பாகிஸ்தான். அந்த நிலையில் தான், பிப்ரவரி 26 ஆம் தேதி மாபெரும் தாக்குதலை இந்திய விமானப்படை மேற்கொண்டது. இதில் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாதிகளின் மொத்த கூடாரமும் காலியானது.  

மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. 12 போர் விமானங்கள் சென்று, அதிகாலை 03:30 மணி அளவில் மிகவும் துல்லியமாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 1,000 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களை பாகிஸ்தானில் அமைந்திருந்த தீவிரவாத முகாமை தாக்கி அழித்தது. பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், தீவிரவாதிகளின் இருப்பிடம் அழிக்கப்பட்டது. காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு தெற்கே 28 கி.மீ தொலைவிலும், ஸ்ரீநகருக்கு 93 கி.மீ தொலைவிலும் பாலக்கோட் அமைந்திருக்கிறது. இந்திய விமான படையின் விமானங்களை கண்டவுடன் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் துரத்தி வந்தது. ஆனால், இந்திய விமானப்படையின் பலத்தை கண்டு பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் திரும்பி சென்று விட்டது. 

மிராஜ் 2000 போர் விமானமானது இந்துஸ்தான் ஏரோநட்டிக்கல்ஸ் மற்றும் ரஃபேல் உற்பத்தி செய்யும் பிரெஞ்ச் நிறுவனத்தின் ஒரு கூட்டுத் தயாரிப்பாகும். இந்தியாவிடம் 50 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் உள்ளன. இந்திய விமானப் படையில் மிராஜ் 2000 போர் விமானம் 1985-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. மிராஜ் 2000-க்கு வஜ்ரா என்ற பெயரை இந்திய அரசு சூட்டியுள்ளது. மிராஜ் என்றால் கானல் நீர் என்ற பொருளும் உண்டு. மிராஜ் 2000 அதிகபட்சம் 2,336 கிலோ மீட்டர் வேகத்திலும், 17,060 மீட்டர் உயரத்தில் பறக்கக் கூடியது. ஒரே நேரத்தில் 13,800 கிலோ வெடி பொருட்களை இந்த விமானத்தில் எடுத்துச் சென்று எதிரிகளைத் தெறிக்கவிட முடியும். சிங்கிள் எஞ்சின் கொண்ட 4வது தலைமுறை போர் விமானங்களில் ஒன்று மிராஜ் 2000. இந்த விமானம் முதன் முதலாக 1972-ல் உருவாக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்கு முன்பு இதில் முக்கியத் தொழில்நுட்பங்களையும்  இணைத்துள்ளனர். 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் மிராஜ் 2000 போர் விமானம் முக்கியப் பங்காற்றியது. இந்த விமானத்தை 2030-ம் ஆண்டு வரை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த துல்லிய வான் வழி தாக்குதலை கண்டு பாகிஸ்தான் அரசு மிரண்டு போனது. இந்தியா நடத்திய இந்த வான் வழி தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே துல்லியமாக குறி வைத்து தாக்கப்பட்டது. இதில் பொது மக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முடிவெடுத்தது. பாகிஸ்தானின் முடிவிற்கு சீனா ஆதரவு அளிக்கும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் சீனாவோ பாகிஸ்தான் எதுவும் பதிலுக்கு செய்யக்கூடாது என்று பாகிஸ்தானை அறிவுறித்தியது. அந்த அளவிற்கு இன்று இந்தியாவின் சர்வதேச அரசியல் வளர்ந்து இருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.  இந்தியா நடத்திய தாக்குதலோ தீவிரவாதிகளுக்கு எதிராக. ஆனால் பாகிஸ்தானோ இந்திய ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த முடிவெடுத்தது. இதனால் தான் பாகிஸ்தான் தீவிரவாத ஆதரவு நாடாக உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. 

இந்திய ராணுவ நிலைகளை குண்டுவீசி தாக்க பாகிஸ்தான் போர் விமானங்கள் முயற்சி மேற்கொண்டன. அந்த விமானங்களை இந்திய விமானப்படையின் சுகோய், மிக் ரக போர் விமானங்கள் விரட்டியடித்தன. இதில் ஏவுகணையை சுமந்து வந்த பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை, மிக் 21 விமானத்தில் இருந்து சுட்டு வீழ்த்தினார் இந்திய விமானப்படை விமானியான விங் கமாண்டர் அபிநந்தன். மிக் 21 போர் விமானம் ரஷ்யா நாட்டிடமிருந்து இந்தியா அரை நூற்றாண்டுக்கு முன்பு வாங்கியது. பாகிஸ்தான் எப்.16 விமானத்தை அமெரிக்காவிடமிருந்து வாங்கியுள்ளது.  மிக் 21 போர் விமானத்தில் சென்று விங் கமாண்டர் அபிநந்தன், எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியிருப்பது எப்படி இருக்கிறது என்றால், டி.வி.எஸ் 50 யில் துரத்தி சென்று சென்று பெரிய புல்லட் வண்டியை அடித்து சாய்த்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கிறது. இதில் பாராட்ட வேண்டியது விங் கமாண்டர் அபிநந்தனின் போர் விமானத்தை இயக்கும் திறமை தான். வீரத் தமிழர் அல்லவா அபிநந்தன், அப்படி தான் இருக்க வேண்டும். எப்.16 விமானத்தை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பாகிஸ்தான் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவுடன் பயன்பாட்டு ஒப்பந்தம் செய்துள்ளது பாகிஸ்தான். இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது ஒரு பக்கம் இருக்க, ஆதிகாலத்து ரஷ்ய போர் விமானம் மிக் 21 ஆல் அமெரிக்காவின் நவீன எப் 16 போர் விமானம் வீழ்த்தப்பட்டிருப்பது அமெரிக்காவை முகம் சுழிக்க வைத்துள்ளது.   

இதையடுத்து பாகிஸ்தான் விமானம் தாக்கியதில் அபிநந்தனின் விமானமும் சேதம் அடைந்ததால் பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்கினார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்தனர். ஜெனீவா ஒப்பந்தத்தின் படி, போர் வீரர்களை எதிரி நாடுகள் சிறை பிடித்தால், அவரை விசாரக்க கூடாது. அவர் பற்றிய புகைப்படம், வீடியோ ஆகியவை வெளியிடக்கூடாது. ஆனால், இவை அனைத்தையும் மீறியது பாகிஸ்தான். விங் கமாண்டர் அபிநந்தனை விசாரித்து அவரின் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டது பாகிஸ்தான். எதிரி நாட்டின் பிடியில், ஆயுதம் ஏந்திய எதிரிகளின் முன்பு தனது தாய்நாட்டின் புகழையும் வீரத்தையும் சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை விங் கமாண்டர் அபிநந்தன். 

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் 
செறினும் சீர்குன்றல் இலர்

என்ற குறளுக்கு ஏற்ப எதிரி நாட்டில் தனது குரலை சற்றும் தாழ்த்தாமல் இருந்தார் விங் கமாண்டர் அபிநந்தன். பிறகு, சர்வதேச நாடுகளின் அரசியல் அழுத்தத்தால், பாகிஸ்தான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது தாய்நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறார் அபிநந்தன். இவை அனைத்திற்கும் பின்னால், இந்திய பாதுகாப்பின் மூலையாக செயல்பட்டு கொண்டிருப்பவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தான். இந்தியா இதோடு நின்று விடாது. பாதுகாப்புத்துறை உள்பட சர்வதேச பொருளாதாரம், சர்வதேச அரசியல் என்று அனைத்திலும் வளரும். இந்தியா ஒரு பலசாலி நாடாக உலக அரங்கில் இன்று பார்க்கப்படுகிறது. சர்வதேச நாடுகள் இந்தியாவின் பக்கம் இன்று நிற்பதற்கு இந்தியாவின் அரசியல் ராஜதந்திரம் ஒரு மிக பெரிய காரணம். விங் கமாண்டர் அபிநந்தனை போல் நெஞ்சம் நிமிர்த்தி, குரலை உயர்த்தி நான் ஒரு இந்தியன் என்று எதிரி நாட்டில் துப்பாக்கி பிடியில் இருக்கும் போது கூட சொல்லும் அளவிற்கு தான் இந்தியா இன்று வளர்ந்துள்ளது. இந்தியனாக அனைவரும் பெருமை பட வேண்டிய தருணமே இது. இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்திலேயே இந்திய அணி தோல்வி.

3 hours ago

ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி.

3 hours ago

மத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு.

3 hours ago

குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி!

13 hours ago

மக்களவைத் திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு

15 hours ago

செஞ்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொலை செய்த மனைவி.

1 day ago

ராபர்ட் வத்ராவின் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் - அமலாக்கத்துறை

1 day ago

ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று ஆலோசனை.

1 day ago

அமித் ஷா, ஸ்மிர்தி இரானிக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என தகவல்.

1 day ago

"சமூக நீதி மண்ணான தமிழகத்தில் சாதி அரசியலுக்கு இடமில்லை என்பது நிரூபணம்!"- திருமாவளவன்

1 day ago

நாளை காலை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது!

1 day ago

மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் நோட்டாவிற்கு 1.04% வாக்குகள் பதிவு!

1 day ago

பாஜகவின் B டீம் யார் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள்; நாங்கள் நேர்மையின் A டீம்: கமல்ஹாசன்

1 day ago

மக்களவைத் தேர்தலில் 3.87% வாக்குகள் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி!

1 day ago

மக்களவைத் தேர்தலில் 4.8 சதவீத வாக்குகள் பெற்று 3வது இடம் பிடித்தது அமமுக!

2 days ago

ஒடிசா சட்டமன்றத்தேர்தலில் மீண்டும் நவீன்பட்நாயக் வெற்றி; தொடர்ந்து 5வது முறையாக ஆட்சியமைக்கிறார்!

2 days ago

பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது திமுக!

2 days ago

டெல்லியில் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூடுகிறது; புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை.

2 days ago

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

2 days ago

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவாலயம் வருகை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

2 days ago

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..

2 days ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி!

2 days ago

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..!

2 days ago

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 206377 வாக்குகள் முன்னிலை..!

2 days ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.!

2 days ago

வயநாடு தொகுதியில் 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

2 days ago

வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற பிரதமர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அத்வானி வாழ்த்து..!

2 days ago

ஆந்திரா மாநிலம், நகரி சட்டமன்ற தொகுதியில் நடிகை ரோஜா வெற்றி..!

2 days ago

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் காத்தவராயன் 1,05,316 வாக்குகள் பெற்று வெற்றி முகம்...!

2 days ago

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 1,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...!

2 days ago

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் முன்னிலை!

2 days ago

டெல்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் பின்னடைவு!

2 days ago

நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி...!

2 days ago

வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி....!

2 days ago

திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 3,70,115 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!

2 days ago

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங் வேட்பாளர் திருநாவுகரசர் வெற்றி...!

2 days ago

ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வில்வநாதன் வெற்றி...!

2 days ago

லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமாகிய ராஜ்நாத்சிங் முன்னிலை...!

2 days ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலை!

2 days ago

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை முதல்வர் பதவியை ராஜினாமா!

2 days ago

மே 30ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்பு!

2 days ago

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா 1,20,132 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...!

2 days ago

பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே வாழ்த்து!

2 days ago

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 27,000 வாக்குகள் முன்னிலை...!

2 days ago

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி 7 நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது இடம்...

2 days ago

ஆந்திரா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: ஒய்.எஸ்.ஆர் காங் -149, தெலுங்கு தேசம் -2

2 days ago

ஒடிசா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: பிஜூ ஜனதா தளம்-100, பாஜக -27

2 days ago

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தமிழக கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி 37,000 வாக்குகள் பின்னடைவு...!

2 days ago

காந்திநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அமித்ஷா முன்னிலை...!

2 days ago

கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் மார்.கம்யூ வேட்பாளர் நடராஜன் 27,000 வாக்குகள் முன்னிலை...!

2 days ago

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் பின்னடைவு..!

2 days ago

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து 5 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கிறது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம்...!

2 days ago

ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி?

2 days ago

தும்கூர் நாடாளுமன்ற தொகுதியில் மஜத வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா பின்னடைவு..!

2 days ago

வயநாடு தொகுதியில் 1,98,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

2 days ago

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!

2 days ago

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் 60,000 வாக்குகள் பின்னடைவு..!

2 days ago

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்.வேட்பாளர் H. வசந்தகுமார் 60,000 வாக்குகள் முன்னிலை..!

2 days ago

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 70,000 வாக்குகள் பின்னடைவு ..!

2 days ago

லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங் முன்னிலை..!

2 days ago

ஜெய்பூர் புறநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்ய வர்தசிங் ராத்தோர் முன்னிலை..!

2 days ago

குல்பர்கா நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் மல்லிகார்ஜுன் கர்கே பின்னடைவு..!

2 days ago

அமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் ராகுல் காந்தி பின்னடைவு..!

2 days ago

வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

2 days ago

வாரணாசியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலை..!

2 days ago

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை..!

2 days ago

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 ஆவது நாளாக ஏற்றம்...!

2 days ago

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலை..!

2 days ago

கர்நாடகா தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 23, காங்+ ஜேடிஎஸ்- 5

2 days ago

மத்திய பிரதேசம் தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 22, காங்- 7

2 days ago

சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத் முன்னிலை..!

2 days ago

சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமி முன்னிலை.

2 days ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் வெற்றிவேல் பின்னடைவு..!

2 days ago

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..!

2 days ago

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..!

2 days ago

டெல்லியின் 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை!

2 days ago

ராமநாதபுரம் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

2 days ago

கர்நாடகாவின் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு.!

2 days ago

மத்திய பிரதேசத்தின் போபால் மக்களவை தொகுதியில் பாஜகவின் சாத்வி சிங் தாகூர் முன்னிலை - காங்கிரஸின் திக் விஜய சிங் பின்னடைவு!

2 days ago

உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 32 தொகுதிகளில் முன்னிலை; SP-BSP கூட்டணி 11 இடங்களிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை!

2 days ago

300க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது; காங்கிரஸ் - 116; இதர கட்சிகள் - 87 தொகுதிகளில் முன்னிலை!

2 days ago

மகராஷ்டிராவில் பாஜக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை; காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலை!

2 days ago

கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை...!

2 days ago

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு...!

2 days ago

22 தொகுதி இடைத்தேர்தலில் முன்னிலையில் திமுக: அதிமுக - 06, திமுக - 09, அமமுக - 00

2 days ago

சிதம்பரம் ( தனி) நாடாளுமன்றத் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பின்னடைவு...!

2 days ago

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலை..!

2 days ago

22 தொகுதி இடைத்தேர்தலில் சமபலத்தில் திமுக - அதிமுக

2 days ago

கள்ளக்குறிச்சியில் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் பின்னடைவு..!

2 days ago

ரேபரேலியில் சோனியா காந்தி முன்னிலை...!

2 days ago

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை!

2 days ago

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை....!

2 days ago

தூத்துக்குடி தொகுதியில் திமுக போட்டியாளர் கனிமொழி முன்னிலை

2 days ago

மக்களவைத் தேர்தல் தூத்துக்குடி மற்றும் வட சென்னை ஆகிய 2 தொகுதிகளில் திமுக முன்னிலை...!

2 days ago

முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது..!

2 days ago

மக்களவைத் தேர்தல்: நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

2 days ago

காவிரி ஒழுங்காற்று குழு டெல்லியில் இன்று கூடுகிறது.

2 days ago

நாட்டின் அடுத்த பிரதமர் யார்?; மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை.

2 days ago

"நம்முடைய கடின உழைப்பு வெற்றி தரும், தோற்க மாட்டோம்!" - ராகுல் காந்தி

3 days ago

"வேறு இயக்கத்திற்கு நான் செல்லப்போவதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது!" - தோப்பு வெங்கடாசலம்

3 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை